aravindh sachidanandam
-
The Silence of the White City- நாவல், திரையாக்கம், கொஞ்சம் திரைக்கதை
உலக அளவில் ஸ்பானிய மொழியில் நல்ல த்ரில்லர் படங்கள் எடுக்கப்படுவது போலவே, அங்கே மிகச்சிறப்பான திரில்லர் நாவல்களும் எழுதப்படுகின்றன. விறுவிறுப்பான, சுவாரஸ்யமான ஸ்பானிஷ் நாவல்களின் வரிசையில் Eva Garcia Saenz எழுதிய Silence of the White City (ஆங்கிலத்தில், Nick Caistor) நாவலுக்கு ஒரு முக்கியமான இடம் உண்டு. Silence of the lambs கதையில் வருவது போல, பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பாணியில் ஒரு குற்றச்செயல் (கொலை) மீண்டும் நடக்க, ஜெயிலில் இருக்கும்… Continue reading
-
நனவிலி சித்திரங்கள்- குறுநாவல்
“நான் நல்லாதான் இருக்கேன். சுத்தி இருக்கவங்களுக்கு தான் ஏதோ பிரச்சனை. அதனாலேயே எனக்கு யாரையும் புடிக்கல. இவங்க எல்லாத்தையும் பைத்தியக்கார ஹாஸ்ப்பிட்டல்ல சேத்துட்டு எங்கயாவது போய்டலாம்னு பாத்தேன். ஆனா அவ்ளோ பேரையும் சேர்க்க ஹாஸ்ப்பிட்டல்ல இடம் இல்ல. அப்பறம் தான் புரிஞ்சிச்சு, இந்த உலகம் தான் பெரிய பைத்தியக்கார ஹாஸ்பத்திரினு. அதான் நான் இங்க வந்து சேர்ந்துக்கிட்டு அவங்கள வெளிலயே விட்டுட்டேன்”- குறுநாவலிலிருந்து என்னுடைய அடுத்த குறுநாவல், அந்தாதி பதிப்பகத்தின் மூலம் சென்னை புத்தக கண்காட்சி சிறப்பு… Continue reading
-
சென்னை புத்தகத் திருவிழா
அந்தாதி வெளியீடாக வந்துள்ள என்னுடைய தட்பம் தவிர், ஊச்சு, கொஞ்சம் திரைக்கதை மற்றும் ஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி ஆகிய புத்தகங்கள் சென்னை புத்தகத் திருவிழாவில் பனுவல் அரங்கில் கிடைக்கும். நன்றி அரவிந்த் சச்சிதானந்தம். Continue reading
-
இரண்டு கலர் கோடுகள்- குறுநாவல்
என்னுடைய தந்தையின் பிறந்தநாளான இன்று, என்னுடைய அடுத்த குறுநாவலை இங்கே வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இரண்டு கலர் கோடுகள்- குறுநாவல் சோபியா. வயது இருபத்தியைந்து. மென்பொருள் நிறுவன வேலை, நட்பு, குடும்பம் என எல்லாம் அவளுக்கு அமைதியான வாழ்க்கையை தந்திருந்தது. ஒருநாள், அந்த அமைதியை குலைக்கும் விதமாக அவளுடைய pregnancy Test ரிப்போர்ட் வந்தது. அவர் கருவுற்றிருந்தாள். ஆனால் அவள் அதை விரும்பவில்லை. காரணம், அவளுக்கு திருமணம் ஆகியிருக்கவில்லை. சமூகம் தன் ஆயுதங்களை அவள்மேல் எறிய தயாராக… Continue reading
-
ஒன்பதாவது ஆண்டில்…
இந்தத் தளம் இன்று தன் ஒன்பதாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்தத் தளம் தான் எனக்கான சிற்றிதழ், வெகுஜன இதழ், திரைக்கதை இதழ் என எல்லாமுமாக இருக்கிறது. Versatile-ஆகா, Consistent-ஆகா கதைகள் எழுதவே இந்தத் தளத்தை தொடங்கினேன். அதை விடாமல் செய்யமுடிகிறது என்பதில் மகிழ்ச்சி உண்டு. என்ன எழுத வேண்டும், என்னவெல்லாம் எழுதிவிடக் கூடாது, எந்தத் தொனியில் எழுதிவிடக் கூடாது என்று சொல்லித்தந்தது இந்தத் தளம் தான். மணிரத்னம் படைப்புகள் புத்தகத்தை படித்து, “Translation is pathetic”… Continue reading
-
ஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி-1
பொதுவாக, திரைக்கதை எழுதுவது எப்படி என்று சொல்லும் புத்தகங்கள் இங்கே ஏராளம் இருக்கின்றன. ஆனால் குறிப்பிட்ட ஒரு genre-ஐ எப்படி எழுதுவது என்று பேசும் புத்தகங்கள் அதிகமில்லை. அந்த குறையை போக்கும் பொருட்டு William C Martell எழுதிய புத்தகம் தான் ‘The Secrets of Action Screenwriting’. புத்தகத்தின் தலைப்பு உணர்த்துவது போல இந்த புத்தகம், பிரத்தியேகமாக, ஆக்சன் கதைகள் எழுதுதலைப் பற்றி விலாவரியாக விவாதிக்கிறது. அதற்கு நாம் பின்பற்ற வேண்டிய சில உத்திகளையும் அடிகோடிட்டுக் காட்டுகிறது. ஆனால்,… Continue reading
-
9.45- சிறுகதை
காலை 9.45 மணிக்குள் போகவில்லை என்றால் ‘ஆப்சென்ட்’ போட்டுவிடுவார்கள். நியாமான காரணத்தால் தாமதம் என்றாலும் ஏற்றுக் கொள்ளப்படாது. நான் படித்த பள்ளிகூடத்தைப் பற்றி சொல்லவில்லை. நான் வேலை செய்யும் அலுவலகத்தில் அண்மைக்காலத்தில் தோன்றிய வி(யா)தி இது. ஒன்பது நாற்பத்தைந்து என்றால் ஒன்பது நாற்பத்தைந்து தான். ஒரு நொடியும் தாமதம் ஆகக் கூடாது. முன்பெல்லாம் வருகைப் பதிவேட்டில் கையெழுத்து போட்டால் மட்டும் போதும். இப்போது ‘ஃபினக்கில்’ மென்பொருளில் லாகின் செய்ய வேண்டும். அலுவலகம் மூன்றாவது மாடியில் இருந்தது. லிப்ட்… Continue reading
-
Save the Cat- Blake Snyder- சினிமா புத்தகங்கள் 3
திரைக்கதை என்பது ஒழுங்கான ஒரு களம், ஒழுங்கற்று பின் மீண்டும் அந்த ஒழுங்கு நிலைக்கு திரும்புவது எனலாம். இதை தான் Beginning, Middle, end என்ற மூன்று நிலை கட்டமைப்பின் மூலம் சொல்கிறோம். ஆரம்பம், பின் கதையில் நிகழும் ஒரு திருப்பம் (கதாப்பாத்திரத்தின் வாழ்க்கையில் நிகழும் திருப்பம்). அதனால் நிகழும் போராட்டம். பின் அதற்கானதொரு தீர்வு. இதை பற்றியெல்லாம் பேசும் புத்தகங்கள் ஆங்கிலத்தில் ஏராளம் உண்டு. நல்ல திரைக்கதை புத்தகங்களை பின்பற்றினால் நல்ல திரைக்கதைகளை உருவாக்கிவிட முடியும்… Continue reading
