சுதந்திர தின விழா-2026


இறையூர் அருணா உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற எண்பதாவது சுதந்திர தின விழா (15.08.2026) கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டேன்.

அடல் டிங்கரிங் லேப் மூலம் மாணவர்கள் உருவாக்கிய சிறிய ராக்கெட்டை இயக்கும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி.

பின்னர் ஆற்றிய உரையில், மாணவர்களுக்கு பாவ்லோ கொய்லோவின் ரசவாதி கதையைச் சுருக்கமாகச் சொல்லி, கனவை நோக்கிய பயணத்தில் வெற்றி, தோல்விகளைப் பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளாமல் தொடர்ந்து முன்னேறுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினேன்.

நல்லதொரு அனுபவம்.

நன்றி.
அ. ச.



Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.