-
ஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி- மீண்டும்
ஒரு திரைக்கதையை இப்படி தான் எழுத வேண்டும் என்று யாரும் சொல்லிட முடியாது. ஆனால் திரைக்கதை எழுத வேண்டும் என்கிற அகத்தூண்டல் இருந்தும் எங்கிருந்து தொடங்குவது என்கிற தயக்கம் இருப்போருக்கு ஒரு எளிய push தேவைப்படுகிறது. பல திரைக்கதை எழுதி பயிற்சி பெற்றோருக்கு நாம் எழுதியிருப்பது சரியா என்கிற குழப்பம் வரும்போதோ, அல்லது கதையை மேற்கொண்டு எப்படி நகர்த்துவது என்கிற தடங்கல் வரும்போதோ ஒரு வழிகாட்டுதல் தேவைப்படுகிறது. இதையெல்லாம் சாத்தியப்படுத்த திரைக்கதை எழுதுதல் பற்றி எளிய மொழியில் Continue reading
-
பொம்மை
உலகம் அழிவதாகக் கனவு கண்டு கண்விழித்தவனின் மனத்திரையில் அந்த கனவுவெகு நேரம் ஓடியது. நெருக்கமானபரிச்சயமானஎந்த முகமும்கனவில் வராததுஆச்சர்யம் உலகம் அழிவதுயாருக்கும்எந்த சலனத்தையும்தராததுகூடுதல் ஆச்சர்யம் பொம்மை கடை வைத்திருந்ததாத்தாஅறுபது ரூபாய் தந்தால்ஸ்பெசல் பொம்மைபிண்ணித்தருவதாக சொல்கிறார். உலகம் தான்அழியப் போகிறதேஒரு பொம்மைவாங்கிக் கொள்ளலாம் என்றுபணத்தை கொடுத்துவிட்டுமுக்கிய வேலையாக அலுவலகம் செல்கிறான். அங்கு அத்தனை வருடம்வேலை செய்ததற்கானசான்றிதழ் வேண்டும் என்று குமாஸ்தாவை கேட்கிறான். உலகம் அழிவதால்எல்லோருமே சான்றிதழ் கோரி விண்ணப்பித்திருப்பதால்தாமதம் ஆகும் என்றுகுமாஸ்தா சலிப்பின்றிஅன்பாக சொல்கிறான். அடுக்கியிருந்த சான்றிதழ்களில் தன்னுடையது இருக்கிறதா Continue reading
-
பனிமனிதன் – ஜெயமோகன்
கடந்த ஆண்டு வாசித்ததில் மிக நல்லதொரு அனுபவத்தை தந்த புத்தகம் இது. பல ஆண்டுகளுக்கு முன்பு கல்லூரி காலத்தில் தி நகரில் ஒரு கடையில் பனிமனிதனின் அட்டைப் படம் ஈர்த்தது. பெரிய பனி குரங்கைப் போன்ற ஒரு உருவத்தை பார்த்ததுமே மனதினுள்ளிருந்த குழந்தை வெளியே வந்திருக்க வேண்டும். வாங்கி வந்த அன்றே முழுவதுமாக படித்து முடித்த நியாபகம். பின்னர் குஜராத்தில் ஒரு தமிழ் நண்பரிடம் அந்த புத்த்தகத்தின் சாராம்சத்தை சொன்னேன். குறிப்பாக அதில் வண்டுகள் எல்லாம் கூட்டு Continue reading
-
காட்சி மொழி – திரைக்கதை கட்டுரை
காட்சி மொழி ஜனவரி 2026 இதழில், என்னுடைய கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது என்பதை பகிர்வதில் மகிழ்கிறேன். விக்கி கிங்கின் How to write a movie in 21 days என்கிற புத்தகத்தை மையப்படுத்தி எழுதப்பட்ட திரைக்கதை கட்டுரை. நன்றி காட்சிமொழி Continue reading
-
முதல் பிரசுரம்
பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் தான் முதல் கட்டுரை அச்சில் வெளியானது. இத்தனை ஆண்டுகளில் புனைவு, அபுனைவு அனைத்திலும் எழுதும் ‘Process’ தான் மிகவும் மகிழ்ச்சி தருவதாக இருக்கிறது. அது சென்றடையும் தூரத்தை காலம் பார்த்துக் கொள்ளட்டும். இந்த ஆண்டு ஒரு நாவலையும், ஒரு துப்பறியும் குறுநாவலையும் எழுதி முடித்துள்ளேன். அடுத்து chritsopher vougler- யின் Writer’s Journey-ஐ மையப்படுத்தி கட்டுரைகள் எழுத தொடங்கி இருக்கிறேன். வாழ்வின் அழுத்தங்களுக்கிடையே,பிடித்த ஒன்றை தொடர்ந்து செய்துகொண்டுருப்பதை விட சந்தோஷம் Continue reading
-
தி எலிக்சிர் (The Elixir-2025)- கொஞ்சம் திரைக்கதை
இது நெட்பிளிக்சில் வெளியாகியிருக்கும் இந்தோனேஷிய திரைப்படம். ஜாம்பி ஹாரர் வகையை சார்ந்தது. ஜாம்பி படங்கள் அனைத்திற்கும் பொதுவான கதையம்சம் ஒன்று உண்டு. அமைதியான ஊரில் முதலில் ஒரு ஜாம்பி உள்ளே நுழையும் அல்லது யாரோ ஒருவர் ஜாம்பியாகிடுவார். அதன் பின் அவர் தாக்க இன்னொருவர் ஜாம்பியாக, அந்த தொடர் சங்கிலி நீண்டு கொண்டே போகும். ஒரு கட்டத்தில் வெகு சிலரை தவிர்த்து மற்ற எல்லோருமே ஜாம்பியாக மாறிவிட, அந்த வெகு சிலர் எப்படி தப்பித்தார்கள் என்பதே மீதி Continue reading
-
John Lennonism
ஜான் லெனான் தான் பல்வேறு காலங்களிலும் வாழ்வின் அழுத்தங்களிலிருந்து காத்து வந்திருக்கிறார். அவர் பாடல்கள் பித்து பிடிக்காமல் பார்த்துக் கொள்ளும் என்பார்கள். விளையாட்டாக சொல்ல வேண்டுமெனில் அவர் பாடல்கள் பேய் பிடிக்காமலும் என்னைப் பார்த்துக் கொண்டது என்பேன். அது நான் பொறியாளராக வேலைப் பார்த்துக் கொண்டிருந்த காலம். இருபத்தியிரண்டு வயது. ஆசியாவிலேயே அளவில் பெரிய ஒரு ஸ்டீல் உற்பத்தி நிறுவனத்தில் வேலை. உற்பத்தி தொடங்கியிருக்காத நேரம். சோதனை முயற்சியாக இரவில் ஒரு கம்ப்ரசர் மட்டும் ஒடும். நான் Continue reading
-
பதினைந்தாவது ஆண்டில்…

இன்றோடு என்னுடைய இணையதளம் தொடங்கி பதினான்கு ஆண்டுகள் நிறைவடைகிறது என்பதை பகிர்வதில் மகிழ்கிறேன். என்னுடைய பெரும்பான்மையான படைப்புகள் இந்த தளத்தில் நேரடியாக எழுதப்பட்டவையே. அந்த வகையில் இந்த தளம் தான் எனக்கான சிற்றிதழ், இணைய இதழ், மாத இதழ் எல்லாமே. தொடர்ந்து எழுத வேண்டும் என்கிற உத்வேகத்தில் 2011 இல் தொடங்கப்பட்ட இந்த தளம், நோக்கத்திலிருந்து பிறழாமல் பயணிப்பதற்கும் பல புதிய முயற்சிகளை மேற்கொள்வதற்கும் உறுதுணையாக இருந்திருக்கிறது. பல வகையான கதைகள், மொழிபெயர்ப்புகள், திரைக்கதை கட்டுரைகள், புத்தக Continue reading
-
தட்பம் தவிர்- பதினொரு ஆண்டுகள்
ஓஷோ சொல்லியிருப்பார், ‘The real fight is not between good and evil but between the good and the greater good’. தட்பம் தவிர் நாவலுக்கான ஐடியா இதுதான். இரண்டு நல்லவர்கள். ஒருவன் போலீஸ்காரன் இன்னொருவன் சீரியல் கில்லர்… நான் David fincher யின் ரசிகன். Zodiac-யில் நாயகனால் கொலைகாரனை இறுதி வரை பிடிக்கவே முடியாது. அது போலவே இதன் முடிவும் இருக்க வேண்டும் என்பது முதல் அத்தியாயத்திலேயே முடிவு செய்துவிட்ட ஒன்று. Continue reading