aravindh sachidanandam
-
ஒரு வருடம் – 365 எழுத்தாளர்கள்- ஏப்ரல் மற்றும் மே கதைகள்
ஏப்ரல் மற்றும் மே மாதம் வாசித்த சிறுகதைகளை இங்கே இணைத்துள்ளேன். மிக சிறப்பான கதைகள் பலவற்றை கடந்த இரண்டு மாதங்களில் வாசிக்க முடிந்தது. பல கதைகள், அந்த ஆசிரியர்களின் மற்ற புத்தகங்களை தேடி வாங்க வைத்திருக்கிறது. அடுத்தடுத்த வாசிப்பிற்கான படைப்பாளிகளை அடையாளம் காட்டி இருக்கிறது. தமிழ் சிறுகதைகளில் உள்ள பொதுவான பல அம்சங்களை உணர்த்தி இருக்கிறது. (இதைப் பற்றி இந்த ஆண்டு இறுதியில் விரிவாக எழுதுகிறேன்). ஏப்ரல் மே மாதம் வாசித்த கதைகளில், என்னை பெரிதும் பாதித்த… Continue reading
-
அந்திமழை போட்டியில் ஒரு பரிசு
அந்திமழை இளங்கோவன் நினைவு இளையோர் சிறுகதைப் போட்டியில் (2026) என்னுடைய “பங்க்ஷன்” சிறுகதைக்கு பரிசு கிடைத்துள்ளது என்பதை பகிர்வதில் மகிழ்கிறேன் நன்றியும் அன்பும். அரவிந்த் சச்சிதானந்தம் Continue reading
-
அனகோண்டா 2025- மைக்ரோ பார்வை
இது ஒரு மெட்டா மூவி (Meta movie). படத்திற்குள் படம் எடுப்பதாக கதை. சிறு வயதிலிருந்தே சினிமா எடுக்க ஆசைப்படும் நான்கு நண்பர்கள். ஆனால் காலம் அவர்களை வேறொரு வாழ்க்கையை வாழ வைக்கிறது. மூன்று பேர், மனதிற்கு பிடிக்காத வேலையை செய்துகொண்டு இருக்கின்றனர். ஒருவர் மட்டும் நடிக்கும் ஆசையை விடாது பற்றி கொண்டு அதே சமயத்தில் பெரிய அங்கீகாரம் கிடைக்காமல் போராடிக் கொண்டிருக்கிறார். இவர்கள் நால்வரும் மீண்டும் சந்திக்கும் போது, சிறுவயதில் எடுத்த குறும்படத்தை போட்டு பார்க்கிறார்கள்.… Continue reading
-
புதையல் தீவு-ராபர்ட் லூயிஸ் ஸ்டீவன்சன்- சிறார் நாவல் வரிசை 2
கதையின் நாயகன் ஜிம் ஹாகின்ஸ் தான் சிறுவனாக இருந்தபோது செய்த சாகச பயணத்தை விவரிப்பதாக கதைத் தொடங்குகிறது. கடலை ஒட்டி அவருடைய தந்தை ஒரு விடுதியை நடத்தி வருகிறார். அந்த விடுதியில் வந்து தங்குகிறான் கடலோடி பில்லி போன்ஸ். அவனிடம் புதையல் தீவிற்கான வரைப்படம் இருக்கிறது. அது ஜிம் ஹாகின்ஸ் கையில் எதிர்ப்பாராதா நேரத்தில் கிட்ட அந்த சிறுவன் சாகச உலகிற்குள் நுழைகிறான். ஜிம் ஹாக்கின்ஸோடு இன்னும் சிலர் இணைந்து கொள்கிறார்கள். அவர்களுக்கு தெரியாமல் சில கடற்கொள்ளையர்களும்… Continue reading
-
ஏன் புத்தகத் திருவிழா அவசியம்!
பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் (15.01.2012) புத்தகத் திருவிழா சென்றதாக பேஸ்புக் நினைவுபடுத்துகிறது. பெரிய முன்முடிவுகளின்றி வெவ்வேறு அரங்குங்களுக்குள் நுழைந்து சிறிது ஆராய்ந்து புத்தகங்களை வாங்கும் வாய்ப்பினை புத்தகத் திருவிழா தான் உருவாக்கித் தருகிறது. புத்தக வாசகர்கள் அனைவருக்கும் இது முக்கியமான வாய்ப்பு என்பேன். 2007 ஆம் ஆண்டு முதன்முதலில் பள்ளி நண்பர் தான் புத்தகத் திருவிழாவிற்கு இரண்டு நுழைவு சீட்டுகள் இருப்பதாக சொல்லி அழைத்து சென்றார்.அன்றிலிருந்து வருடாவருடம் எங்கிருந்தாலும் புத்தகத் திருவிழாவிற்கு விடாமல் செல்வதற்கு… Continue reading
-
ஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி- மீண்டும்
ஒரு திரைக்கதையை இப்படி தான் எழுத வேண்டும் என்று யாரும் சொல்லிட முடியாது. ஆனால் திரைக்கதை எழுத வேண்டும் என்கிற அகத்தூண்டல் இருந்தும் எங்கிருந்து தொடங்குவது என்கிற தயக்கம் இருப்போருக்கு ஒரு எளிய push தேவைப்படுகிறது. பல திரைக்கதை எழுதி பயிற்சி பெற்றோருக்கு நாம் எழுதியிருப்பது சரியா என்கிற குழப்பம் வரும்போதோ, அல்லது கதையை மேற்கொண்டு எப்படி நகர்த்துவது என்கிற தடங்கல் வரும்போதோ ஒரு வழிகாட்டுதல் தேவைப்படுகிறது. இதையெல்லாம் சாத்தியப்படுத்த திரைக்கதை எழுதுதல் பற்றி எளிய மொழியில்… Continue reading
-
முதல் பிரசுரம்
பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் தான் முதல் கட்டுரை அச்சில் வெளியானது. இத்தனை ஆண்டுகளில் புனைவு, அபுனைவு அனைத்திலும் எழுதும் ‘Process’ தான் மிகவும் மகிழ்ச்சி தருவதாக இருக்கிறது. அது சென்றடையும் தூரத்தை காலம் பார்த்துக் கொள்ளட்டும். இந்த ஆண்டு ஒரு நாவலையும், ஒரு துப்பறியும் குறுநாவலையும் எழுதி முடித்துள்ளேன். அடுத்து chritsopher vougler- யின் Writer’s Journey-ஐ மையப்படுத்தி கட்டுரைகள் எழுத தொடங்கி இருக்கிறேன். வாழ்வின் அழுத்தங்களுக்கிடையே,பிடித்த ஒன்றை தொடர்ந்து செய்துகொண்டுருப்பதை விட சந்தோஷம்… Continue reading
-
பதினைந்தாவது ஆண்டில்…

இன்றோடு என்னுடைய இணையதளம் தொடங்கி பதினான்கு ஆண்டுகள் நிறைவடைகிறது என்பதை பகிர்வதில் மகிழ்கிறேன். என்னுடைய பெரும்பான்மையான படைப்புகள் இந்த தளத்தில் நேரடியாக எழுதப்பட்டவையே. அந்த வகையில் இந்த தளம் தான் எனக்கான சிற்றிதழ், இணைய இதழ், மாத இதழ் எல்லாமே. தொடர்ந்து எழுத வேண்டும் என்கிற உத்வேகத்தில் 2011 இல் தொடங்கப்பட்ட இந்த தளம், நோக்கத்திலிருந்து பிறழாமல் பயணிப்பதற்கும் பல புதிய முயற்சிகளை மேற்கொள்வதற்கும் உறுதுணையாக இருந்திருக்கிறது. பல வகையான கதைகள், மொழிபெயர்ப்புகள், திரைக்கதை கட்டுரைகள், புத்தக… Continue reading