அரவிந்த் சச்சிதானந்தம்
-
ஒரு வீடு ஒரு உலகம் ஒரு குடும்பம்-The Last House
அண்மையில் நெட்பிளிக்ஸில் வெளியாகி இருக்கும் திரைப்படம். அப்பா, அம்மா, மகன் மற்றும் மகள் கொண்டதொரு அழகான குடும்பம். ஒரு கிறிஸ்துமஸ் மாதத்தில், மழை நாளில் வெளியே கிளம்பலாம் என்று முடிவு செய்து வீட்டின் கதவை திறக்கிறார்கள். அது திறக்க மறுக்கிறது. பின்வாசல் கதவை திறக்க முயல்கிறார்கள். அதுவும் திறக்கவில்லை. மாடியில் இருக்கும் கதவும் திறக்க மாட்டேன் என்கிறது. யாரோ விளையாடுகிறார்கள் என்கிறாள் தாய். ஆனால் எதுவோ தவறாக இருப்பதாக தந்தை எண்ணுகிறான். கதவை உடைக்க முயல்கிறான். முடியவில்லை.… Continue reading
-
சுதந்திர தின விழா-2026
இறையூர் அருணா உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற எண்பதாவது சுதந்திர தின விழா (15.08.2026) கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டேன். அடல் டிங்கரிங் லேப் மூலம் மாணவர்கள் உருவாக்கிய சிறிய ராக்கெட்டை இயக்கும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி. பின்னர் ஆற்றிய உரையில், மாணவர்களுக்கு பாவ்லோ கொய்லோவின் ரசவாதி கதையைச் சுருக்கமாகச் சொல்லி, கனவை நோக்கிய பயணத்தில் வெற்றி, தோல்விகளைப் பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளாமல் தொடர்ந்து முன்னேறுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினேன். நல்லதொரு அனுபவம். நன்றி.அ. ச. Continue reading
-
அனகோண்டா 2025- மைக்ரோ பார்வை
இது ஒரு மெட்டா மூவி (Meta movie). படத்திற்குள் படம் எடுப்பதாக கதை. சிறு வயதிலிருந்தே சினிமா எடுக்க ஆசைப்படும் நான்கு நண்பர்கள். ஆனால் காலம் அவர்களை வேறொரு வாழ்க்கையை வாழ வைக்கிறது. மூன்று பேர், மனதிற்கு பிடிக்காத வேலையை செய்துகொண்டு இருக்கின்றனர். ஒருவர் மட்டும் நடிக்கும் ஆசையை விடாது பற்றி கொண்டு அதே சமயத்தில் பெரிய அங்கீகாரம் கிடைக்காமல் போராடிக் கொண்டிருக்கிறார். இவர்கள் நால்வரும் மீண்டும் சந்திக்கும் போது, சிறுவயதில் எடுத்த குறும்படத்தை போட்டு பார்க்கிறார்கள்.… Continue reading
-
Shrek- கொஞ்சம் திரைக்கதை
ஒரு சுவாரஸ்யமான கேரக்டர் ஆர்க்கை எழுதுவது எப்படி! இருபத்தையாண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ‘Shrek’ நமக்கு அதை மிக எளிமையாக சொல்லித்தருகிறது. ஒரு விசித்திரக் கதையாக (fairy tale) மட்டுமே நின்றுவிடாமல், திரைக்கதையின் அடுக்குகளை புரிந்துக் கொள்ள இந்த படம் பெரிதும் பயன்படுவதால் இது அதிக முக்கியத்துவம் வாய்ந்த அனிமேஷன் படமாகிறது. ஒரு நாயகனின் பயணம் தான் கதை. ஆனால் மற்ற சாகச-மாய கதைகளில் வருவது போல அந்த நாயகன் பேரழகன் அல்ல. அவன் ஒரு ராட்சதன். … Continue reading
-
21 நாட்களில் திரைக்கதை எழுதுவது எப்படி! – விக்கி கிங்
நன்றி காட்சிமொழி 21 நாட்களில் திரைக்கதை எழுதுவது எப்படி! – விக்கி கிங் அரவிந்த் சச்சிதானந்தம் 21 நாட்களில் திரைக்கதை எழுதுவது எப்படி! (How to Write a Movie in 21 Days- Viki King) இது விக்கி கிங் எழுதிய பிரபலமான புத்தகம். இப்படி ஒரு தலைப்பை கண்டதுமே அதெப்படி இருபத்தியொரு நாளில் ஒரு திரைக்கதையை எழுதிவிட முடியும் என்கிற கேள்வி எழலாம். ஆனால் எழுதுதல் என்பதை ஒரு ஒழுக்கமாக கடைப்பிடிக்கத் தொடங்கினால் எவ்வளவு… Continue reading
-
ஒரு வருடம் – 365 எழுத்தாளர்கள்
தினம் ஒரு எழுத்தாளரின் சிறுகதையை வாசிக்க வேண்டும் என்கிற விருப்பத்துடன் இந்த ஆண்டு தொடங்கியது. ஒவ்வொரு நாள் காலையும், ஒரு எழுத்தாளரின் ஒரு சிறுகதையை தேர்ந்தெடுத்து வாசிப்பது நல்லதொரு அனுபவமாக இருக்கிறது. இதற்கு முன்னர் வாசித்திராத பல புதிய எழுத்தாளர்களை இந்த முயற்சி எனக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறது. சில கதைகள் அதிகம் பிடித்து போக, அந்த எழுத்தாளர்களின் மற்ற படைப்புகளை வாசிக்கும் உந்துதல் பிறக்கிறது. இந்த ஆண்டின் இறுதியில் 365 எழுத்தாளர்களை, அதில் பெரும்பகுதியாக முன்பு வாசித்திராத எழுத்தாளர்களை… Continue reading
-
புதையல் தீவு-ராபர்ட் லூயிஸ் ஸ்டீவன்சன்- சிறார் நாவல் வரிசை 2
கதையின் நாயகன் ஜிம் ஹாகின்ஸ் தான் சிறுவனாக இருந்தபோது செய்த சாகச பயணத்தை விவரிப்பதாக கதைத் தொடங்குகிறது. கடலை ஒட்டி அவருடைய தந்தை ஒரு விடுதியை நடத்தி வருகிறார். அந்த விடுதியில் வந்து தங்குகிறான் கடலோடி பில்லி போன்ஸ். அவனிடம் புதையல் தீவிற்கான வரைப்படம் இருக்கிறது. அது ஜிம் ஹாகின்ஸ் கையில் எதிர்ப்பாராதா நேரத்தில் கிட்ட அந்த சிறுவன் சாகச உலகிற்குள் நுழைகிறான். ஜிம் ஹாக்கின்ஸோடு இன்னும் சிலர் இணைந்து கொள்கிறார்கள். அவர்களுக்கு தெரியாமல் சில கடற்கொள்ளையர்களும்… Continue reading
-
பொம்மை
உலகம் அழிவதாகக் கனவு கண்டு கண்விழித்தவனின் மனத்திரையில் அந்த கனவுவெகு நேரம் ஓடியது. நெருக்கமானபரிச்சயமானஎந்த முகமும்கனவில் வராததுஆச்சர்யம் உலகம் அழிவதுயாருக்கும்எந்த சலனத்தையும்தராததுகூடுதல் ஆச்சர்யம் பொம்மை கடை வைத்திருந்ததாத்தாஅறுபது ரூபாய் தந்தால்ஸ்பெசல் பொம்மைபிண்ணித்தருவதாக சொல்கிறார். உலகம் தான்அழியப் போகிறதேஒரு பொம்மைவாங்கிக் கொள்ளலாம் என்றுபணத்தை கொடுத்துவிட்டுமுக்கிய வேலையாக அலுவலகம் செல்கிறான். அங்கு அத்தனை வருடம்வேலை செய்ததற்கானசான்றிதழ் வேண்டும் என்று குமாஸ்தாவை கேட்கிறான். உலகம் அழிவதால்எல்லோருமே சான்றிதழ் கோரி விண்ணப்பித்திருப்பதால்தாமதம் ஆகும் என்றுகுமாஸ்தா சலிப்பின்றிஅன்பாக சொல்கிறான். அடுக்கியிருந்த சான்றிதழ்களில் தன்னுடையது இருக்கிறதா… Continue reading
-
பனிமனிதன் – ஜெயமோகன்-சிறார் நாவல் வரிசை 1
கடந்த ஆண்டு வாசித்ததில் மிக நல்லதொரு அனுபவத்தை தந்த புத்தகம் இது. பல ஆண்டுகளுக்கு முன்பு கல்லூரி காலத்தில் தி நகரில் ஒரு கடையில் பனிமனிதனின் அட்டைப் படம் ஈர்த்தது. பெரிய பனி குரங்கைப் போன்ற ஒரு உருவத்தை பார்த்ததுமே மனதினுள்ளிருந்த குழந்தை வெளியே வந்திருக்க வேண்டும். வாங்கி வந்த அன்றே முழுவதுமாக படித்து முடித்த நியாபகம். பின்னர் குஜராத்தில் ஒரு தமிழ் நண்பரிடம் அந்த புத்த்தகத்தின் சாராம்சத்தை சொன்னேன். குறிப்பாக அதில் வண்டுகள் எல்லாம் கூட்டு… Continue reading