சினிமா
-
ஒரு வீடு ஒரு உலகம் ஒரு குடும்பம்-The Last House
அண்மையில் நெட்பிளிக்ஸில் வெளியாகி இருக்கும் திரைப்படம். அப்பா, அம்மா, மகன் மற்றும் மகள் கொண்டதொரு அழகான குடும்பம். ஒரு கிறிஸ்துமஸ் மாதத்தில், மழை நாளில் வெளியே கிளம்பலாம் என்று முடிவு செய்து வீட்டின் கதவை திறக்கிறார்கள். அது திறக்க மறுக்கிறது. பின்வாசல் கதவை திறக்க முயல்கிறார்கள். அதுவும் திறக்கவில்லை. மாடியில் இருக்கும் கதவும் திறக்க மாட்டேன் என்கிறது. யாரோ விளையாடுகிறார்கள் என்கிறாள் தாய். ஆனால் எதுவோ தவறாக இருப்பதாக தந்தை எண்ணுகிறான். கதவை உடைக்க முயல்கிறான். முடியவில்லை.… Continue reading
-
அனகோண்டா 2025- மைக்ரோ பார்வை
இது ஒரு மெட்டா மூவி (Meta movie). படத்திற்குள் படம் எடுப்பதாக கதை. சிறு வயதிலிருந்தே சினிமா எடுக்க ஆசைப்படும் நான்கு நண்பர்கள். ஆனால் காலம் அவர்களை வேறொரு வாழ்க்கையை வாழ வைக்கிறது. மூன்று பேர், மனதிற்கு பிடிக்காத வேலையை செய்துகொண்டு இருக்கின்றனர். ஒருவர் மட்டும் நடிக்கும் ஆசையை விடாது பற்றி கொண்டு அதே சமயத்தில் பெரிய அங்கீகாரம் கிடைக்காமல் போராடிக் கொண்டிருக்கிறார். இவர்கள் நால்வரும் மீண்டும் சந்திக்கும் போது, சிறுவயதில் எடுத்த குறும்படத்தை போட்டு பார்க்கிறார்கள்.… Continue reading
-
ஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி- மீண்டும்
ஒரு திரைக்கதையை இப்படி தான் எழுத வேண்டும் என்று யாரும் சொல்லிட முடியாது. ஆனால் திரைக்கதை எழுத வேண்டும் என்கிற அகத்தூண்டல் இருந்தும் எங்கிருந்து தொடங்குவது என்கிற தயக்கம் இருப்போருக்கு ஒரு எளிய push தேவைப்படுகிறது. பல திரைக்கதை எழுதி பயிற்சி பெற்றோருக்கு நாம் எழுதியிருப்பது சரியா என்கிற குழப்பம் வரும்போதோ, அல்லது கதையை மேற்கொண்டு எப்படி நகர்த்துவது என்கிற தடங்கல் வரும்போதோ ஒரு வழிகாட்டுதல் தேவைப்படுகிறது. இதையெல்லாம் சாத்தியப்படுத்த திரைக்கதை எழுதுதல் பற்றி எளிய மொழியில்… Continue reading
-
தி எலிக்சிர் (The Elixir-2025)- கொஞ்சம் திரைக்கதை
இது நெட்பிளிக்சில் வெளியாகியிருக்கும் இந்தோனேஷிய திரைப்படம். ஜாம்பி ஹாரர் வகையை சார்ந்தது. ஜாம்பி படங்கள் அனைத்திற்கும் பொதுவான கதையம்சம் ஒன்று உண்டு. அமைதியான ஊரில் முதலில் ஒரு ஜாம்பி உள்ளே நுழையும் அல்லது யாரோ ஒருவர் ஜாம்பியாகிடுவார். அதன் பின் அவர் தாக்க இன்னொருவர் ஜாம்பியாக, அந்த தொடர் சங்கிலி நீண்டு கொண்டே போகும். ஒரு கட்டத்தில் வெகு சிலரை தவிர்த்து மற்ற எல்லோருமே ஜாம்பியாக மாறிவிட, அந்த வெகு சிலர் எப்படி தப்பித்தார்கள் என்பதே மீதி… Continue reading
-
சினிமா புத்தகங்கள் – நிழல் இதழில்
இந்த மாதம் (மார்ச் 2025) நிழல் இதழில் என்னுடைய கட்டுரை ஒன்று வெளியாகி இருக்கிறது என்பதை பகிர்வதில் மகிழ்கிறேன். சில முக்கிய சினிமா (திரைக்கதை மற்றும் இயக்கம்) புத்தகங்கள் பற்றிய அறிமுகங்கள் கொண்ட கட்டுரை. நன்றி நிழல். Continue reading
-
வல்லான்- திரைப்படம்
நண்பர் மணி சேயோனின் இயக்கத்தில் ‘வல்லான்’ திரைப்படம் நேற்று (24.01.2025) வெளியாகி இருக்கிறது. இதில் நானும் திரு. மணி சேயோனோடு இணைந்து வசனம் எழுதி இருக்கிறேன் என்பதை பகிர்வதில் மகிழ்கிறேன். நண்பர் மணி சேயோனுக்கு நன்றிகள் வல்லான் குழுவிற்கு வாழ்த்துகள். Continue reading
-
லக்கி பாஸ்கர் – கொஞ்சம் திரைக்கதை
குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக தவறான வழியில் பணம் ஈட்ட நினைக்கும் ஒரு சாதாரணன், பேராசையால் ஆட்கொள்ளப்பட்டு ஒருகட்டத்தில் பணம் ஈட்டுவதை மட்டுமே தன் நோக்கமாக மாற்றிக் கொள்கிறான். இது பிரேக்கிங் பேட்டின் ஒன்லைன். லக்கி பாஸ்கர் படத்தின் ஒன் லைன்னும் இதுவே. பிரேக்கிங் பேட்டின் வால்ட்டர் வைட், தன் திறமைக்கான அங்கீகாரம் தனக்கு கிட்டவில்லை என்கிற ஆதங்ககத்திலேயே வாழ்பவன். ஒரு தருணத்தில் அந்த ஆதங்கம் கோபமாக மாற, தன் திறமையை தவறான வழியில் செலுத்தி பணம்… Continue reading
-
Manjummel Boys- கொஞ்சம் திரைக்கதை
உருவாக்கத்தில் செய்நேர்த்தி, ஆங்காங்கே வெளிப்படும் ஹாஸ்யம், கதை கருவில் உள்ள விறுவிறுப்பு இதெல்லாம் இத்திரைப்படத்தை வெற்றி படமாக்கி இருக்கலாம். ஆனால் திரைக்கதை கலையின் மீது காதல் கொண்டவர்கள் ஒரு படத்தின் வெற்றி தோல்வியை கடந்து, அதன் திரைக்கதை போக்கை ஆராய்வது அவசியம் ஆகிறது. மிகவும் நல்ல படம் என்கிற மாய தோற்றத்தை நம் மனதில் உருவாக்கிவிடும் இது போன்றதொரு படத்த்தின் திரைக்கதையை ஆராய்வது உண்மையிலேயே நல்ல திரைக்கதை எழுத விரும்புவோற்க்கு வழிகாட்டியாக பயன்படும் என்பதாலே நாம் இதை… Continue reading
-
திரைக்கதையின் முக்கிய தருணங்கள்- Todd Klick-சினிமா புத்தகங்கள்- 6
Beat By Beat- Todd Klick-சினிமா புத்தகங்கள்- 6 திரைக்கதையில் குறிப்பிடத்தகுந்த மாற்றங்களை சாத்தியப்படுத்தும் தருணங்களை (Moments) ‘பீட்(கள்)’ (Beat)’ என்பார்கள். திரைக்கதையை பீட்களாக அணுகியதில் முக்கியமானவர் ப்ளேக் ஸ்னைடர். அவர் தன்னுடைய ‘Save the cat’ புத்தகத்தில், ஒரு திரைக்கதையில் பதினைந்து முக்கியமான ‘பீட்’கள் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டு, அதற்காக Beat Sheet என்கிற டெம்பிளேட்டையும் உருவாக்கி இருப்பார். பீட் பை பீட் புத்தகத்தில், இதன் ஆசிரியர் டாட் க்ளிக் இன்னும் ஒரு படி… Continue reading