புனைவுகள்
-
ஒரு வைரம் ஒரு காரிகை மற்றும் சில கயவர்கள்- விமர்சனம்
தூக்கமற்ற ஒரு நீண்ட இரவில், எதிர்பாராமல் தன் படைப்பைப் பற்றிய இப்படியொரு நேர்மறையான விமர்சனத்தை வாசிக்கும்போது ஒரு படைப்பாளிக்குக் கிடைக்கும் நம்பிக்கை அளப்பரியது. ஒரு வைரம் ஒரு காரிகை மற்றும் சில கயவர்கள் நாவலுக்கு வந்திருக்கும் சமீபத்திய விமர்சனம் இது. நான்காண்டுகளுக்கு முன்பு வெளியான இந்த நாவலை அதன் பிறகு நாங்கள் மறுபதிப்பு செய்யவில்லை. ஆனால், இந்தக் கதையின் மீதும், இதைத் திரைப்படமாக்குவதற்கான சாத்தியத்தின் மீதும் எனக்கு எப்போதுமே நம்பிக்கை இருக்கிறது. இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் ஒரு… Continue reading
-
பங்க்ஷன்-சிறுகதை
சாந்திக்கு கடந்த சில நாட்களாக புதியதொரு பிரச்சனை இருந்தது. அவள் கல்யாணம் ஆனதிலிருந்தே ஏதேதோ பிரச்சனைகளை சந்தித்துக் கொண்டு தான் இருக்கிறாள். அவள் கணவன் குமார் தான் அவளின் பெரும்பான்மையான பிரச்சனைகளுக்கு காரணமாக இருப்பவன். குமாருக்கென்று நிரந்தர வேலை எதுவும் இல்லை. எப்போதாவது எலெக்ட்ரிஷியன் அல்லது பிளம்பர் வேலை, எப்போதும் குடி என்று அவன் வாழ்க்கை கழிந்தது. குமாரின் பெற்றோர்கள் தேடிவைத்த ஒரு வீடு மட்டும் இருந்ததால் சாந்தியால் சமாளிக்க முடிந்தது. அவனை திருமணம் செய்த போது… Continue reading
-
மேடம்- சிறுகதை
நான் மேடமை முதல் முதலில் சந்தித்தது சிசிடிவி திரையில் தான். சந்தித்தது என்று சொல்வதை விட பார்த்தது அல்லது எனக்கு மேடமின் அறிமுகம் கிட்டியது என்று சொல்வது தான் பொருத்தமாக இருக்கும். அது ஒரு வியாழக்கிழமை. ஒவ்வொரு வியாழக்கிழமையும் குறைந்தது ஒரு வாகனக் கடனாவது கொடுக்க வேண்டும் என்று எங்களுடைய பிராந்திய மேலாளர் உத்தரவிட்டிருந்தார். அனுதினமும் ஏதாவது ஒரு இலக்கு இருந்தது. திங்கட்கிழமை என்றால் வாராக்கடனை வசூலிக்க வேண்டும். செவ்வாய் கிழமை புதிய காப்பீடுகளை இணைக்க வேண்டும்.… Continue reading
-
அநிருத்தன்-மேடை நாடகம்
என்னுடைய ‘ஏப்ரல் இரவில், ராக் மியூசிக் இசையில், அநிருத்தன் செய்த மூன்று கொலைகள்’ சிறுகதை, மேடை நாடகமாக அரங்கேற இருக்கிறது என்பதை பகிர்வதில் மகிழ்கிறேன். படைப்பு குழுவிற்கு நன்றியும் வாழ்த்துக்களும் இடம்: Alliance Francaise, Nungambakkam நாள்: நவம்பர் 17, 2024 இயக்கம்: முருகானந்தம் எழுத்து: அரவிந்த் சச்சிதானந்தம் நன்றி Continue reading
-
குறுங்கதை-10- தாத்தாவும் பாட்டியும் காதலித்த கதை
தாத்தாவும் பாட்டியும் காதலித்த கதை அநிருத்தனுக்கு சப்பாத்தி மீது பெருங்காதல். எல்லா நாளும் எல்லா வேலையும் சப்பாத்தி கொடுத்தால் கூட சாப்பிடும் அளவிற்கு சப்பாத்தி பித்து அவனுக்கு. குறைந்தபட்சம் இரவு உணவிற்காவது சப்பாத்தி இருக்க வேண்டும். அவன் மனைவி அனுராதாவிற்கு சப்பாத்தி மீது தனிக் காதலோ வெறுப்போ இல்லை. அவளுக்கு பிடித்த உணவு முட்டை தோசை. அவன் சப்பாத்தி உண்பதில் அவளுக்கு எந்த எதிர்ப்பும் இல்லை என்றாலும், அதை மெனக்கெட்டு செய்வதில் அவளுக்கு ஈடுபாடு இருந்ததில்லை. அதனால்… Continue reading
-
குறுங்கதை-9- கோபம்கொண்டு நாவலிலிருந்து தொலைந்துபோன ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் கதாப்பாத்திரம்
கோபம்கொண்டு நாவலிலிருந்து தொலைந்துபோன ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் கதாப்பாத்திரம் கோமதி சங்கர் பிரபலமாகாத ஒரு நல்ல எழுத்தாளன். பல வருடங்களுக்குமுன்பு அவன் எழுதிய க்ரைம் கதையில் வரும் வில்லன் கதாபாத்திரத்திற்கும் அவனுக்கும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தான் அந்த பிரச்சனை வெடித்தது. ஆனந்த் என்கிற அந்த வில்லன் கதாபாத்திரம் ஒரு மிசோஜினிஸ்ட் (misogynist). பெண்களை அறவே வெறுக்கும் அவன், ரயிலில் தனியாக பயணிக்கும் அழகான பெண்களை கடத்தி கொலை செய்வதை வழக்கமாக கொண்டிருந்தான். … Continue reading
-
குறுங்கதை-8 – ஒரு தற்கொலை செய்தி
ஒரு தற்கொலை செய்தி விஷயம் கேள்வி பட்டதுமே நான் ஜன்னல் அருகே ஓடினேன். என் அலுவலகம் இருந்தது மூன்றாவது மாடியில். கீழே நிறைய பேர் குழுமி இருந்தார்கள். “செவென்த் ஃபுளோர்ல இருந்து ஒருத்தன் குதிச்சிட்டானாம்” ஏ.ஜி எம்மின் கார் டிரைவர் குமார் தான் முதலில் செய்தியை சொன்னது. நான் என் பக்கத்தில் வந்து நின்ற கோபிகிருஷ்ணன் சாரை பார்த்தேன். ‘கீழே போகலாமா’ என்னுடைய பதிலுக்கு எதிர்பார்ப்பது போல் அவர் பார்வை இருந்தது. எப்போதுமே லிப்ட் வர தாமதமாகும்.… Continue reading
-
குறுங்கதை-7 -பால்கனியுடன் கூடிய வீட்டை விரும்பும் ஒரு பெண்
பால்கனியுடன் கூடிய வீட்டை விரும்பும் ஒரு பெண் பிரியங்கா யாதவ் டெல்லியின் புறநகரில் பிறந்து, வளர்ந்து அங்கேயே ஒரு வங்கி கிளையில் உதவி மேலாளராக பணியாற்றினாள். வாழ்க்கை நிம்மதியாக போய்க்கொண்டிருந்த இருபத்தியேழு வயதில் மேலாளராக பதவி உயர்வு கிடைத்தது. ஒரே நாளில் அந்த சந்தோசத்தை பறிக்கும் விதமாக சென்னைக்கு மாற்றல் வந்தது. இரண்டு வருட காலம் சென்னையில் தாக்கு பிடித்து விட்டால், மீண்டும் ஊருக்கோ அல்லது ஊருக்கு பக்கத்தில் இருக்கும் மாநிலத்திற்கோ மாற்றல் வாங்கி போய்விடலாம் என்கிற… Continue reading