அரவிந்த் சச்சிதானந்தம்
-
தினமணி-சிவசங்கரி சிறுகதைப் போட்டி
தினமணி-சிவசங்கரி சிறுகதைப் போட்டியில் என்னுடைய 3 பிஹெச்கே வீடு என்ற சிறுகதை இரண்டாம் பரிசு பெற்றிருக்கிறது என்பதை பகிர்வதில் மகிழ்கிறேன். இன்றைய (27.06.2021) தினமணி கதிரில் கதை வெளியாகி இருக்கிறது நன்றி அரவிந்த் சச்சிதானந்தம். Continue reading
-
44- வது சென்னை புத்தக கண்காட்சி- என் புத்தகங்கள்
அந்தாதி வெளியீடாக வந்திருக்கும் என்னுடைய பின்வரும் புத்தகங்கள் 44- வது சென்னை புத்தக கண்காட்சியில் பனுவல் அரங்கில் (அரங்கு எண் 166,167) கிடைக்கும். நனவிலி சித்திரங்கள்- குறுநாவல் இரண்டு கலர் கோடுகள் – குறுநாவல் மற்றும் நெடுங்கதைகள் கொஞ்சம் திரைக்கதை, ஆக்சன் திரைக்கதை- கட்டுரை தொகுப்புகள் ஊச்சு- ஹாரர் துப்பறியும் நாவல் நன்றி அரவிந்த் சச்சிதானந்தம் Continue reading
-
ஹாரர் கிங்- ஸ்டீபன் கிங்
Excerpts from On Writing: Memoirs of the Craft by Stephen King தமிழில்: அரவிந்த் சச்சிதானந்தம் *** 1950-களில் இலக்கிய அர்வலர் பாரஸ்ட் J அக்கர்மன் ஸ்பேஸ்மேன் என்ற இதழை சிறிதுகாலம் நடத்தினார். அதில் பெரும்பாலும் அறிவியல் புனைவு படங்களைப் பற்றிய கட்டுரைகள் இடம்பெற்றன. நான் 1960-யில் என்னுடைய கதை ஒன்றை அந்த இதழுக்கு அனுப்பி வைத்தேன். அதுதான் பிரசுரத்திற்கு நான் அனுப்பி வைத்த முதல் கதை என்று நினைக்கிறேன். அதன் தலைப்பு எனக்கு… Continue reading
-
Novels into films- John C. Tibbetts & James M Welsh
Excerpt from ‘Encylopedia of Novels into films’- John C. Tibbetts & James M Welsh தமிழில். அரவிந்த் சச்சிதானந்தம் நன்றி- நிழல் பகுதி 1 தி பிரிட்ஜ் ஆன் தி ரிவர் க்வாய் (குவாய் நதியின் மீது கட்டப்பட்ட பாலம் (1952)) -பியர் போல்லே இயக்கம்: டேவிட் லீன். திரைக்கதையாக்கம்: மைக்கல் வில்சன் மற்றும் கார்ல் போர்மேன் நாவல் இரண்டாம் உலகப் போரின் போது, கர்னல் நிக்கல்சன் தலைமையிலான ஆங்கிலேயே ராணுவ வீரர்கள், ஜப்பான் ராணுவத்தால்… Continue reading
-
திரைக்கதையின் பிரதான கேள்வி- லிண்டா சீகர்- சினிமா புத்தகங்கள் 5
ஒரு திரைக்கதையை எழுதி முடித்தபின், நம் திரைக்கதை சரியாக இருக்கிறதா, சுவாரஸ்யமாக இருக்கிறதா அல்லது ஏதாவது குறைகள் உள்ளதா என்பன போன்ற சந்தேகங்கள் எழுவது சகஜம் தான். Making a Good Script Great புத்தகத்தில் லிண்டா சீகர் (Linda Seger) சொல்லும் சில திரைக்கதை உத்திகள் நிச்சயம் அத்தகைய சந்தேகங்களைப் போக்க உதவும். எந்த வகையான கதையிலும் ‘ஒரு பிரதான கேள்வி’ (Central Question) இருக்கிறது என்று சொல்லும் லிண்டா, திரைக்கதையின் நோக்கமே அந்த கேள்விக்கான… Continue reading
-
என் ஆசான்- அகிரா குரோசவா
1974 ஆகஸ்ட் மாதம், என்னுடைய குருநாதர் யமா-சண் (எ) யமாமோட்டோ கஜிரோ படுத்த படுக்கையாக இருக்கிறார், அவர் நலம் பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்ற செய்தி என்னை வந்தடைந்தது. என்னுடைய படமான டெர்ஷு உஷாலாவை (Dersu Uzala) தொடங்குவதற்காக நான் சோவியத் யூனியன் செல்லவிருந்த தருணம் அது. படப்பிடிப்பு ஒருவருடத்திற்கு மேல் நடக்கும் என்பதை நான் அறிந்திருந்தேன். அந்த நேரத்தில் யமா சண் அவர்களுக்கு ஏதாவது நிகழ்ந்தால் என்னால் ஜப்பானிற்கு திரும்பி வர இயலாது என்பதை அறிந்த… Continue reading
-
யாரோ ஒருவர்
உங்கள் குழந்தையை முதன்முதலில் நீங்கள் கையில் வாங்கும் அதே நேரத்தில் தான் குழந்தை வேண்டி நிற்கும் யாரோ ஒரு பெண்ணுக்கு கரு கலைந்து போகிறது உங்கள் வீட்டு பிள்ளைகளுக்கு நீங்கள் பிரம்மாண்டமாக திருமணம் நடத்தி வைக்கும் நேரத்தில் தான் யாரோ ஒருவர் வரணை எதிர்ப்பார்த்து வறுமையில் காத்துகொண்டிருக்கிறார் உங்கள் காதல் உங்களுக்கு சலித்து போய் நீங்களாகவே பிரியும் நேரத்தில் தான் யாரோ ஒரு காதல் ஜோடி அதே காதலுக்காக வெட்டிக் கொல்லப்படுகிறார்கள் நீங்கள் முதலீட்டிற்காக மூன்றாவது வீடு… Continue reading
-
சாக்ரட் கேம்ஸ்- நாவல், திரையாக்கம், கொஞ்சம் திரைக்கதை
உலக சினிமாவில் நாவல்கள் படமாக்கப்படுவது ஒன்றும் புதிதல்ல. ஆனால் சமகால இந்திய சினிமாவில் நாவல்கள் திரையாக்கம் செய்யப்படுவது அரிதாகவே நடக்கிறது. இங்கே எழுதப்பட்ட சில நாவல்களை மிக எளிதாகவே திரைக்கதையாக மாற்றி விடமுடியும். ஆனாலும் இந்தியாவில் நாவலுக்கும் சினிமாவிற்கும் ஒரு பெரும் இடைவெளி இருந்துகொண்டே தான் இருக்கிறது. எப்போதாவது ஒரு நாவல் சினிமாவாக உருப்பெற்றால், அதுவும் சிறந்த முறையில் திரையாக்கம் செய்யப்பட்டால் அதை கவனிப்பது நிச்சயம் நல்லதொரு திரைக்கதைப் பயிற்சியாக இருக்கும். நெட்பிலிக்ஸ் சீரியலாக வந்திருக்கும் விக்ரம்… Continue reading
-
நண்பனின் கடிதங்கள்- நெடுங்கதை
அதே தாம்பரம் பீச் ரயில், கேண்டீன் அருகே வந்து நிற்கும் அதே பெட்டி, தம்பி அக்காக்கு காசு கொடு என்று கேட்கும் அதே திருநங்கைகள். ‘பாஸ் கொஞ்சம் நகுந்து உட்காருங்களேன்’. ‘இறங்கி ஏறு. இறங்கி ஏறுங்கப்பா’ ‘சார் மேஜிக் புக் சார் மேஜிக் புக். இருபது ரூவாய் தான்’ ‘நான் பாடும் பாடல் நலமாக வேண்டும்’ ‘தயவு செய்து பயணிகள் வண்டி நடை மேடையில் நின்ற பின்பு இறங்கவும்’ வழக்கமான இத்தியாதிகளுக்கு மத்தியில் அந்த… Continue reading