• தமிழ் எழுத்தாளனின் மரணம்

    அந்த தமிழ் எழுத்தாளன் மாண்டுவிட்டான் அழுவதற்கு யாருமில்லை சாகும்வரை பலஆயிரம் பக்கங்களை சில நூறுப் பேர்களுக்காக  மட்டும் எழுதியவன் மாண்டுவிட்டான் தமிழ்நாட்டில் தமிழில் எழுதும் கீழ்த்தரமான செயலை இறுதிவரை செய்தவன் மாண்டுவிட்டான் நீசன் எனக்கூறி பலர் அவனை ஒதுக்கிவிட்டனர் சபையில் ஆபாசம் பேசுகிறான் எனக்கூறி அறிவிலிகள் பலர் ஒதுங்கிநின்றனர் ஒதுக்கியவர்களாலோ ஒதுங்கியவர்களாலோ ஒடுக்கமுடியவில்லை அவனை இறுதிவரை வளையா முதுகெலும்புடன் எழுதியவன் மாண்டுவிட்டான் பக்கத்துக்கு பக்கம் சார்த்தர் பாரதி என பிதற்றினான்-அவனுக்காக அழுவதற்கு சார்த்தரோ பாரதியோ இல்லை அழ நினைத்த நண்பர்களோ-ஏனோ… Continue reading

  • விடாது பைக்

    மணி காலை ஒன்பது.வினோத்தை பொறுத்த வகையில் அது அதிகாலை. வீட்டிலிருந்து வெளியே வந்தவனுக்கு காத்திருந்தது ஆச்சர்யம். வாசலருகே நின்றுகொண்டிருந்தது அந்த விலையுயர்ந்த பைக். “யாருதா இருக்கும் ? இத இந்த தெருவுல பார்த்ததே இல்லையே. பூட்டாம வெச்சுருக்கான் !” என்றபடி சுற்றும் முற்றும் பார்த்தான். தெருவே நிசப்தமாக இருந்தது. “யாருதா இருந்த என்ன, இன்னைக்கு இது என் பைக்.” பெரும் சப்தத்துடன் பைக் அங்கிருந்து கிளம்பியது. வினோத்திற்கு சிறு வயதிலிருந்தே பைக் மீது ஆசை அதிகம். ஒவ்வொரு… Continue reading

  • ஏன் இந்த கொலைவெறி- ஓர் ஆய்வு கட்டுரை

    ஏன் இந்த கொலைவெறி- ஓர் ஆய்வு கட்டுரை   எல்லா பத்திரிக்கைகளும் கொலைவெறி பற்றியே பேசுகின்றன. எம்.டிவியில் ஒளிபரப்பப்பெற்ற முதல் தமிழ் பாடல், ஒரே வாரத்தில் யுட்யுபில் (Youtube) ஒரு கோடி பார்வையாளர்களை கொண்ட பாடல் என இப்பாடலின் சாதனை பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. இதோ இப்போது இந்த கட்டுரையை எழுதும் தருவாயிலும் கூட சோனி மேக்ஸில் இந்த பாடல் ஓடிக்கொண்டிருக்கிறது. தமிழ் தெரியாத பலரும் இந்த பாடலை முணுமுணுத்துக் கொண்டிருப்பதால்,இந்த பாடலை நாம் தத்துவார்த்த ரீதியாக, சமுக… Continue reading

  • பிணம் தின்னி

    பிணம் தின்னி அவள் சிரித்துக் கொண்டிருக்கிறாள்  அது பெரும் சிரிப்பு பேருவகைச் சிரிப்பு மனமெல்லாம் ஆனந்த களிப்பு கண்களில் சாதித்த வெறி கைகளை தட்டி தட்டி அவள் சிரித்துக் கொண்டிருக்கிறாள் அவள் கை தட்டளுக்கிடயே சிக்குண்டு செத்தது என் இனம் அவள் பெரும் குரல் எழுப்பிச்  சிரிக்கிறாள் அதில் ஒழிந்து போகிறது, என் மீனவனின் கதறல் ஒலி ஒடுக்கப்பட்ட ஓர் இனத்தின் வலி… இழவு வீட்டில் வந்து சிரித்துவிட்டு , அவர்கள் சுகமாகத்தான் உள்ளார்கள் என கூறி கூறி… Continue reading

  • மயக்கம் என்ன

    மயக்கம் என்ன தமிழ் சினிமாவில் தனிமனித உணர்வுகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படங்கள் மிகக் குறைவு. ஒரு மனிதனின் வாழ்கையை நேர்கோட்டு சித்திரமாக காட்ட யாரும் அதிகம் முயற்சித்ததில்லை. தமிழ் சினிமாவுக்கென எழுதப்பட்ட இலக்கணம் அவ்வாறான படங்களை ஆதரித்ததில்லை. இங்கு காதலை, காதலியை துரத்திப் பிடிக்கும் மனிதர்களைப் பற்றிய படங்களே அதிகம். தன் லட்சியத்தை துரத்திப் பிடிக்கும் மனிதர்களைப் பற்றி  யாரும் படப் பிடிக்க விரும்பியதில்லை.  ஒவ்வொருவரும் வாழ்கையில்  ஏதோ ஓர் லட்சியத்தை அடைய போராடிக் கொண்டிருக்கிறோம், அவ்வாறான போராட்ட களங்களை படம் பிடிக்க தமிழ் சினிமா ஏதோ ஒரு வகையில் அஞ்சிக்கொண்டிருக்கிறது. “ஆறில் இருந்து அறுபது வரை” படத்திற்கு பின் எந்த ஓர் படமும் தனி மனித உணர்வினை பேசிடவில்லை. இங்கு குறிப்பிடப்படுவது மெல்லிய உணர்வுகளை. போலீஸ் ஆவதை லட்சியாமாக கொண்டு ஆக்ரோசமாக பயணிக்கும்        கதாநாயகனைப் பற்றிய படங்கள் நிறைய வந்துள்ளது. அந்த படங்களில் மசாலாத்தன்மையே அதிகம் இருந்ததேயன்றி உணர்வுகளின் காட்சியமைப்பு மிகக் குறைவு. அப்படி மசாலா காட்சிகளை அதிகம் தவிர்த்து, எதார்த்தத்தோடு பயணிக்கும் படமே ‘ மயக்கம் என்ன’ வனவிலங்கு புகைப்படக்காராரக வர விரும்பும் ஓர் சராசரி இளைஞன் தன் வாழ்வில் சந்திக்கும் போராட்டங்களே இப்படம். பல போராட்டங்களுக்கு பின் அவன் இறுதியில் தன் லட்சியத்தை அடைகிறான். ஆங்கிலத்தில் வந்த Pursuit of happiness, Cinderalla man, Beautiful Mind போன்று இதுவும் உங்களை எந்த வகையிலும் ஏமாற்றாத ஓர் அருமையான படம். ‘வறுமையின் நிறம் சிவப்பு’  படத்திலும் கதாநாயகன் இலட்சியத்திற்காக போராடுவார். ஆனால் அதில் வரும் கதாநாயகன் சித்தாந்தம்  பேசும் ஓர் மனிதனாக காட்டபட்டிருப்பார். ஆனால் மயக்கம் என்ன படத்தின் கதாநாயகன் ஓர் சாதரணமானவன். உங்களையும் என்னையும் போன்று. அதுவே இந்த படத்தின் மிகப்பெரிய பலம். ஒரு காட்சில் கதாநாயகன் கண்ணீர் வடிப்பார் ,… Continue reading

  • 7 ஆம் அறிவு

    7 ஆம்அறிவு முன்குறிப்பு  இந்த படத்திற்கு விமர்சனம் எழுத வேண்டும் என்ற அவசியம் எனக்கில்லை..ஆனால் ஓர் தவறான முன் உதாரணமாக இத்திரைப்படம் அமைந்து விடக்கூடிய வாய்புகள் அதிகமுள்ளதால் இதை எழுதுகிறேன்.. கல்லாவை நிரப்ப கோயபெல்ஸ் (Goebbels) வேலையை நன்றாகவே செய்துள்ளனர்.. மரியான  அசுயேல  (Mariana Azuela ) எழுதிய ஓர் நாவலில் (Underdogs), எதுக்கு போராடுகிறோம் என்று தெரியாமலேயே ஓர் கூட்டம்  போராடும்.(அண்ணா ஹசாரே கூட்டம்  போல்! )  அதுபோல் இந்த படம் பார்த்த சிலர் திடிரென தமிழ்… Continue reading

  • மாசற்ற காதல்

    மனிதனை மிருகத்திடமிருந்து மாறுபடுத்திகாட்டுகிற ஒரே விடயம் காதல். மிருங்களுக்குள்ளும்  காதலுண்டு. ஆனால் அதன் மையப்புள்ளி வேறு. அதற்கு பகுத்து உணர்கிற  சக்தி கிடையாது. ஒரு நாய் ஒரே நேரத்துல நிறைய நாய்களோடு காதல் கொள்ளும். ஆனா மனிதன் அப்படி இல்லை. அப்படி இருந்தா அவன் மனிதனும் இல்லை, அது  காதலும் இல்லை காதலுக்கு மனோதத்துவரீதியான விளக்கத்தை ஆராய வேண்டியதில்லை.அப்படி ஆராய முற்பட்டால் காதல் என்கிற கேள்விக்கு காமம் என்பதே பதிலா கிட்டும். ஆனால் அதை தவிர்த்து, சமுக… Continue reading

  • நான் ஓர் விலைமாது

    மணி பத்து ஆச்சு, இன்னும் பாஸ்கர் சாரா காணோம். பாஸ்கர் சார் யாருனு கேக்குறீங்களா ? அவருதாங்க அந்த மாடிவூட்டுக்காரர். பெரிய பாங்க் ஆபிசர். ஒன்பது மணி ஆச்சுன்னா போதும், அவரு வீட்டு வாசல்ல  வெத்தலய்ய மென்னுக்கிட்டே உக்காந்திருப்பாரு.வீட்டுலயே எவ்வளவு நேரம்தான் சும்மா ஊக்கந்திருக்குறது ! புழுக்கமா இருக்காதா ? அதான் காத்தோட்டமா அரைக்கை பனியன் ஒண்ண போட்டுக்கிட்டு, போற வறோங்க எல்லாரையும் வேடிக்கை பாத்துக்கிட்டு இருப்பாரு. அவருக்கு குல்ஃபினா ரொம்ப புடிக்கும். எனக்கு அவர ரொம்ப… Continue reading

  • ஒழுங்கற்ற நெறிமுறைகள்

    முன் குறிப்பு: கடந்த வருடம் இந்த கதையை முதன் முதலில் ஆங்கிலத்தில் எழுதும்போது எளிதாகவே  இருந்தது. ஆனால் தமிழ் மொழி பெயர்ப்பு அவ்வளவு எளிதாக அமைந்துவிடவில்லை. இது ஒரு முயற்சியே. இந்த கதை எந்த  கோட்பாடுகளிலும் அடங்காமல் போகும் பட்சத்தில் என்னுடைய புது முயற்சி என எடுத்துக் கொள்ளவும்.. ……………………………….. அந்த காரின் கதவுகள் வேகமாக திறந்தன. அவள் சிரித்துக்கொண்டே அந்த வெள்ளை நிறக் காரில் ஏறினாள். அவள் அணிந்திருந்த அந்த சீன ரோலெக்ஸ் கடிகாரம் 6.30  எனக்… Continue reading

  • கடவுளும் ப்ளாக் டிக்கெட்டும்

    கி.பி. 2220 வெள்ளிக்கிழமை. மார்கழி மாதம் .காலை7.30 . பூலோகத்தில் ஆண்டவருக்கு பால் அபிஷேகம்  அமோகமாக நடந்துக் கொண்டிருந்தது. ‘ஆண்டவா ஆண்டவா’ என்று எழும்பிய பேரொலி, காற்றைக் கிழித்துக் கொண்டு பயணித்து வைகுண்டத்தில் உறங்கி கொண்டிருந்த ஆண்டவரின் காதில் விழ, திடுக்கிட்டு கண்விழித்தார் ஆண்டவர். அருகில் அவரது துணைவியார் சாந்தமாக உறங்கிக் கொண்டிருந்தார். இரா முழுதும் வேலை செய்து களைத்திருந்த ஆண்டவர் சோம்பல் முறித்தவாரே ஒலி வரும் திசையை நோக்கினார். ஒலி உலகின் தெற்குப் பகுதியில் அமைந்திருந்த இந்திய… Continue reading