ஒழுங்கற்ற நெறிமுறைகள்

முன் குறிப்பு: கடந்த வருடம் இந்த கதையை முதன் முதலில் ஆங்கிலத்தில் எழுதும்போது எளிதாகவே  இருந்தது. ஆனால் தமிழ் மொழி பெயர்ப்பு அவ்வளவு எளிதாக அமைந்துவிடவில்லை. இது ஒரு முயற்சியே. இந்த கதை எந்த  கோட்பாடுகளிலும் அடங்காமல் போகும் பட்சத்தில் என்னுடைய புது முயற்சி என எடுத்துக் கொள்ளவும்..

………………………………..

அந்த காரின் கதவுகள் வேகமாக திறந்தன. அவள் சிரித்துக்கொண்டே அந்த வெள்ளை நிறக் காரில் ஏறினாள். அவள் அணிந்திருந்த அந்த சீன ரோலெக்ஸ் கடிகாரம் 6.30  எனக் காட்டியது. சூரியன் இன்னும் மறையவில்லை. மேற்க்கிந்தியாவில் சூரியன் மறைய சற்று நேரம் பிடிக்கும்.அந்த கார் சீறிக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தது

“வேற யாரையும் இப்படி கேட்டுறாத. உன்ன பிச்சு மேஞ்சுருவாங்க”, சற்று கோபமாகவே சொன்னான் அந்த ஆட்டோ டிரைவர்.

கார் அங்கிருந்து நகர்ந்தது.

“என்ன விடயம் ? ” ஆட்டோவில் பயணம் செய்யும் ஒருவன் ஆட்டோ டிரைவரை வினவினான்.

“என்ன எதற்கு துரத்திக்கிட்டு வர ” அமைதியாகவே கேட்டான் அந்த ஆட்டோ டிரைவர்

“ஒன்னும் இல்ல ..அந்த கார் டிரைவர் ஒரு பைத்தியக்காரன். தேவையல்லாத கேள்விகள எழுப்புறான்”, என்றவாறே புகையிலையை நாடு ரோட்டில் துப்பினான் அந்த ஆட்டோ டிரைவர்

“நான் ஏழே முக்காலுக்கு போகணும். கொஞ்சம் வேகமா போ”

“இப்ப நான் என்ன தூங்கிகிட்ட இருக்கேன்.இடத்த தானே தேடிக்கிட்டு இருக்கேன். கொஞ்சம் பொரு”

“இந்நேரம் அத நீ ரெடி பண்ணி வச்சிருக்கணும்.காரா இருந்தாலும் எனக்கு பிரச்சனை இல்ல !”

“கார் ரொம்ப சின்னது.எனக்கு அது ஒத்து வராது ”

“இந்த எடத்துல நிறைய கலருங்க கடைக்குமாமே! நான் கேள்விப்பட்டேன்” கார் டிரைவர் ஆட்டோ டிரைவரை நோக்கி வினவினான்

“பையா ! மஜுரா கேட்ட பத்தி நிறைய கேள்விப்பட்டேன். அதெல்லாம் உண்மையா ” ஆட்டோவில் இருந்த சக பயணி பிரமிப்புடன் கேட்டான்

” ஆமா. ஐம்பது ரூபாய் கொடுத்தா வருவாளுங்க. அந்த கார் டிரைவரும் அதான் கேட்டான் ”

“மஜுரா கேட் போடா. இதுக்காகவா  என்ன  தொறத்திக்கிட்டு வர ! முட்டாள் ”

“ஆனா அவனுக்கு பிகர் கும்முன்னு இருந்தா மட்டும் பத்தாதான். ஜம்முனும் இருக்கணும். பர்சு கொஞ்சம் அடர்திப் போல !” என சொல்லிவிட்டு உரக்க சிரித்தான் ஆட்டோ டிரைவர்

“மஜுரா கேட்ல எல்லாம் மொக்க பீஸ். எனக்கு கொஞ்சம் ரேஞ்சா வேணும் “மிகுந்த எதிர்பார்ப்புடன் கூறினான் கார் டிரைவர்

“படவா. உனக்கு என்ன பணக்கார பத்தினிங்க வேணுமா ! வேற யாரையும் இப்படி கேட்டுறாத. உன்ன பிச்சு மேஞ்சுருவாங்க”

“உனக்கு ஒத்து வருதோ இல்லையோ. என்ன முன்னாடியே புக் பன்னிட்டானுங்க. ஏதோ உனக்கு ரொம்ப அவசரம்னு புரோக்கர் சொன்னதால நேரத்த அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு இங்க வந்தேன். ஏழே முக்காலுக்கு மேல ஒரு நொடி இங்க இருக்க முடியாது. எனக்குன்னு நெறிமுறைகளுண்டு.ரெகுலர் கஸ்டமர் 8 .30 மணிக்கு வர சொல்லி இருக்கான் . என்ன ஒழுங்கா இஸ்கான் மால்கிட்ட விட்டுடு.”

“என் நம்பர் யார் கொடுத்த ” பதற்றத்துடன் கேட்டன் ப்ரோக்கர்.

“அழறாத. மஜுரா கேட்ல ஒருத்தன் கொடுத்தான், என் கிட்ட கார் இருக்கு. நான் கேஸ் சர்கள்கிட்ட வெயிட் பண்ணுறேன். நல்ல கலரா அனுப்பிவை”

வேகமாக ஸ்கூட்டியை முருக்கிக் கொண்டு வந்தவள் கேஸ் சர்களின் எதிரில் அமைந்த அந்த மரத்தின் முன் ஸ்கூட்டியை நிறுத்தினாள். அங்கே நின்று அவளை முறைத்து கொண்டிருந்த அந்த இரண்டு வாலிபர்களையும் அவள் பொருட்படுத்தவில்லை. அவர்களை பொருட்படுத்த வேண்டிய அவசியம் அவளுக்கில்லை. அவள் பெயர் 34-30-36 .உண்மையான பெயர் இங்கு தேவையில்லை. வெள்ளையாக இருந்த அவள், எல்லாரையும் கவர்வதற்கும் எல்லாம் செய்வதற்கும் போதுமான உயரம் கொண்டிருந்தாள்.

“கொஞ்சம் பொரு.நான் கார ஆளில்லா இடமா பார்த்து நிறுத்துறேன்”.

வெள்ளை நிற அந்த கார் கருப்பு இருளில் மறைந்தது