• நானும் ஒரு உதவி இயக்குனர்

    சினிமாவிற்கும் படைப்பிலக்கனமுண்டு, அதை உலகிற்கு உணர்த்திட வணிக சினிமாவில் இலக்கியத்தை புகுத்திட பொதுவாழ்வினுள் பின்நவீனத்துவம் பேசிட உலகமே திரும்பி பார்த்திடும் திரைப்படத்தை இயக்கிட-முடிவு செய்து சென்னை வந்திட்ட பலரில் நானும்  ஒருவன். என்னை உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்னை போல் பலருண்டு அவர்களை தெரிந்து கொள்ள நீங்கள் விரும்பியதுமில்லை வலதுகையில்   உலக இலக்கியம்-இடதுகையில் சிகரெட்-என விட்டத்தை பார்த்தவாறே தொடங்கியது என் சராசரி வாழ்க்கை.. காசின்றி சினிமா பார்க்க உங்களால் முடியாது, ஆனால் என்னால் முடிந்தது ! என்னுள்… Continue reading

  • யார் அவன்

    தப்பு தப்பாக ஆங்கிலம் பேசுபவன் தப்பிப் போயும் தமிழ் பேசாதவன் தாரம் வந்தால் தாயை மறக்கும் மகன்போல ஆங்கில வேசியின் மடியில் சாய்ந்து தமிழ் தாயை மறப்பவன் தமிழ் பேச மறுப்பவன்…   ஈழத்திலே தலை விழுந்தாலும் தெருக்கோடியிலே கொலை நிகழ்ந்தாலும் முதுகெலும்பற்ற ஜடமாய் ஊர்ந்து செல்வான் முடமாய்…   எந்திரத்தை மனிதனாக்க ஆர்டிஃபிசியல் இன்டெலிஜென்ஸ் கண்டவன் தான் எந்திரமாகி போனதை ஒப்புகொள்ள மறுப்பவன்…   பொறியில் மாட்டிக்கொண்ட எலி போல தவிப்பதால் தான் அவன் பொறியாளன்… Continue reading

  • கைகுட்டைகளும் ட்ரான்ஸ்வெஸ்டிசமும்-சிறுகதை

     “Transvestism (also called transvestitism) is the practice of cross-dressing, which is wearing clothing traditionally associated with the opposite sex.”-Wikipedia கைக்குட்டை என்பது உங்களுக்கு வேண்டுமென்றால் ஒரு சாதாரண விடயமா இருக்கலாம். எனக்கு அதிமுக்கியமான ஓர் விடயம்.  கைகுட்டைக்கென்ன பெரிய முக்கியத்துவம் இருந்துவிடப்போகுதென்று  நீங்கள்  நினைக்கலாம். ஆனால்  கடந்த இரண்டு மாதங்களில்  நான் ஆயிரம் ரூபாய்க்குக் கைகுட்டை வாங்கிட்டேன்னு சொன்னால் , அதனுடைய முக்கியத்துவம் உங்களுக்குப் புரியும். ஒரு வருடத்திற்குச் சுமார்  ஆறாயிரம் ரூபாய் கைகுட்டைக்கே… Continue reading

  • நான் ஒரு கதைசொல்லி

    நான் ஒரு கதை சொல்லி ஆழ் கடல் பொங்கி உயிர்களை விழுங்கி உலகம்  எரிந்து உறவுகள் பிரிந்து நாகரிக உலகம்- பின்நோக்கி சுழன்று சமகால  மனிதன் நிர்வாண மனிதனாய்- மீண்டும் உருமாறி நரமாமிசம்  தின்று அக்றிணை உயர்திணை  அனைத்தும் அழிந்து,வெந்து போனாலும் எனக்கு மரணமில்லை ஏனெனில் நான் ஒரு கதை சொல்லி காலங்கள்  மாறலாம் காட்சிகள் மாறலாம் கதைகள் மாறிடா ! கதை சொல்லியின் புகழ் அழிந்திடா ! கதைகளே  உலகியலுக்கு அடிப்படை. கடவுளர் கதை காதலர்… Continue reading

  • அந்தாதி-குறும்படம் Teaser

    இது நான் எழுதி இயக்கிய எட்டாவது குறும்படம் ‘அந்தாதி’-யின் Teaser எழுத்து இயக்கம் படத்தொகுப்பு ஒலிப்பதிவு: அரவிந்த் குமார் சச்சிதானந்தம் ஒளிப்பதிவு: பிரேம் குமார் சச்சிதானந்தம் நடிகர்கள்: பரத்வாஜ் சந்திரமௌளி, பானுப்ரியா விக்ரம், ரகுராமன் சந்திரகாந்தன் Continue reading

  • பர்ஃபி

    எதிர்பார்ப்புகள் ஏமாற்றமளிக்கும் என்பதற்கிணங்க, மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வந்த பல திரைப்படங்கள் தோல்வியை தழுவியது நமக்கு நினைவிருக்கலாம். ஆனால் சில படங்கள் மட்டுமே எதிர்பார்த்ததைவிட பல மடங்கு சிறந்ததாக அமைந்து கால புத்தகத்தில் தனக்கென்று ஒரு இடத்தை நிரந்தரமாக பிடித்துக் கொள்ளும்.அவ்வாறான ஒரு படமே ‘பர்ஃபி’. இந்த படத்தின் ட்ரைலரே பல வகையான எதிர்பார்ப்புகளை உருவாக்கியது. பாலிவுட்டின் முன்னணி கதாநாயகிகள் எல்லாம் கவர்ச்சி பாதையை தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டிருக்க, கவர்ச்சியாக நடித்துக் கொண்டிருந்த பிரியங்கா சோப்ரா மனநலம் குன்றிய… Continue reading

  • மாற்றான்

    சில படங்கள் முதல் காட்சியிலிருந்தே மெதுவாக நகர்ந்து, இது நல்லப் படம்தானா என்பன போன்ற சந்தேங்களை ஏற்படுத்தி, இறுதியில் சிகரம் வைத்தாற்போல் அருமையாக நிறைவுபெற்று, படமென்றால் இதுதான் படமென்று நம்மை சொல்லச் செய்து, நம்மை எழுந்து நின்று கைத்தட்ட வைக்கும். சில படங்கள் தொடக்கம் முதலே நல்லப் படம் போல காட்சியளித்து, தனக்கே உரித்தான ஜிகுணா வேலைகளையெல்லாம் செய்துக் கொண்டு, இறுதியில் ‘இதெல்லாம் ஒரு படமா’ என்று எண்ண வைக்கும். ‘மாற்றான்’ இதில் இரண்டாவது வகை. ஓட்டிப்… Continue reading

  • நான் ஒரு ஜடம்

    என் தனிமை என்னை கொன்று விட பார்க்கிறது நான் என் தனிமையை கொன்று விட பார்க்கிறேன் ஆதி அந்தமற்ற ஒருவனாய் நான் பயணித்துக் கொண்டிருக்கிறேன் சுட்டெரிக்கும் வெயில் குளிரடிக்கும் காற்று முத்துகளாய் பொழியும் மேகம்-எதுவும் என்னை கவர்ந்துவிடவுமில்லை பறந்து விரிந்த இந்த வானம் காற்றயைபோல் பயணிக்கும் வாகனங்கள் என எதுவும் என்னை அசைத்துவிடவில்லை ஆம் நான் ஒரு ஜடம் உலகம் என்னை அப்படி தான் அழைக்கும் என் கண்முன்னே எது நிகழ்ந்தாலும் நான் பார்த்துக்கொண்டே இருப்பேன் பார்த்துகொண்டு… Continue reading

  • முகமூடி

    உலகில் எத்தனையோ சூப்பர் ஹீரோ படங்கள் எடுக்கப் பட்டுவிட்டன. எல்லா சூப்பர் ஹீரோக்களும் ஏதோ ஒரு வகையில் extraordinary power கொண்டிருப்பார்கள். அவர்கள் extraordinary league-ஐ சார்ந்தவர்களாகவோ, வேற்று கிரகத்தை சார்ந்தவர்களாகவோ, நிழல் உலகத்தை சார்ந்தவர்களாகவோ, மியூட்டண்ட்களாகவோ (mutants) இருப்பார்கள்.Iron Man மட்டும் சற்று வித்யாசமானவர். ஆனால் மிக சாதாரண மனிதன் ஒருவன் எந்த ஒரு அமானுஷ்ய சக்தியின் உதவியின்றி , தன் சொந்த உந்துதலின்  அடிப்படையில் மிகவும் விளையாட்டாக சூப்பர் ஹீரோவாக உருவெடுப்பதுபோன்ற கதையை இதுவரை… Continue reading

  • லேடி போலீஸ்- நகைச்சுவைக் கதை

    அந்த புத்தகத்தை  வாங்கியே ஆகணுமென்று எங்கெங்கோ தேடுனேன். அந்த புத்தகத்திற்க்கு பின்னாடி ஒரு காதல் கதை ஒளிஞ்சிருக்கு. எங்கேயும் கிடைக்காத அந்த புத்தகம் கண்ணிமேரா நூலகத்தில கிடைக்கும் என்கிற நம்பிக்கையில டிரைன் ஏறினேன். நானும் இந்தியா முழுக்க சுத்தியிருக்கேன். பம்பாய் ரயிலில் எல்லாம் முட்டி மோதி ஏறியிருக்கேன். ஆனால் அங்கெல்லாம் டிரைன் கூட்டமா இருந்தாதான் தொங்கிக்கிட்டு போவாங்க. சென்னையில மட்டும்தான், எனக்கு விவரம் தெரிஞ்ச நாள்ல இருந்து பாக்குறேன், ஒரு நாலு பேரு தொங்கிக்கிட்டே பயணம் செய்வானுங்க.… Continue reading