-
கிராவிட்டியும் ஆஸ்காரும்
கடந்த ஆண்டு வெளியான லைஃப் ஆப் பை படத்திற்கும் இந்த ஆண்டு வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் கிராவிட்டி படத்திற்கும் ஒரு ஒற்றுமை உண்டு. நடுக்கடலில் தன்னந்தனியாக தத்தளிக்கும் சிறுவனை பற்றிய படம் லைஃப் ஆஃப் பை. விண்வெளியில் உயிருக்கு போராடும் பெண்ணை பற்றிய சயின்ஸ் பிக்ஷன் படம், கிராவிட்டி. இரண்டு படங்களுமே, தன்னம்பிக்கை இருந்தால் எத்தகைய ஆபத்தான சூழலையும் எதிர்கொள்ளலாம் என்ற கருத்தையே முன்வைக்கின்றன. லைஃப் ஆப் பை பல ஆஸ்கார் விருதுகளை குவித்தது போல கிராவிட்டி… Continue reading
-
தி குட் ரோடும் ஆஸ்காரும்
1956-ஆம் ஆண்டு தொடங்கி ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்க படங்கள் அல்லாத மற்ற படங்களை அங்கீகரிக்கும் வகையில் சிறந்த வெளிநாட்டு திரைப்படம் என்றொரு விருதை ஆஸ்கார் குழுவினர் வழங்கி வருகின்றனர். அந்த விருதிற்காக ஒவ்வொரு நாடும் போட்டி போட்டுக் கொண்டு ஆஸ்காருக்கு படங்களை அனுப்புவது வழக்கம். இந்த ஆண்டு அதிக சர்ச்சைகளுக்கும் பாராட்டுகளுக்குமிடையே “தி குட் ரோட்” என்கிற குஜராத்தி திரைப்படத்தை ஆஸ்காருக்கு பரிந்துரை செய்திருக்கிறது இந்திய திரைப்பட கூட்டமைப்பு. தொண்ணூறுகளின் தொடக்கத்திலேயே குஜராத் திரைத்துறை அழிவை சந்திக்க… Continue reading
-
தி காஞ்ஜூரிங்
நன்றி ஆழம் உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு எடுக்கப்படும் பேய் படங்களுக்கு எப்பொழுதுமே மவுசு அதிகம். அந்த வகையில், அமெரிக்காவில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தின் திரை வடிவமே, அண்மையில் வெளியான, தி காஞ்ஜூரிங். உலகளவில் பெரும் வரவேற்ப்பை பெற்றுவரும் இந்த படத்தில் அப்படி என்ன தான் இருக்கிறது என்று பார்த்துவிடுவோம். பெரோன் தம்பதியர், தங்கள் ஐந்து மகள்களுடன் புது வீட்டிற்கு குடி புகுகிறார்கள். ஆனால் அவர்களின் செல்ல நாய் மட்டும் வீட்டிற்குள் காலடி எடுத்து வைக்க… Continue reading
-
சூப்பர் மேன்-75
உலகின் மிக பெரிய சூப்பர் ஹீரோவாக கருதப்படும் சூப்பர்மேன், முதன்முதலில் வில்லனாகதான் உருவாக்கப்பட்டார் என்றால் நம்பமுடிகிறதா? ஆம். 1933-யில், ஒரு ஆங்கில சிறுகதையில் வில்லனாக அறிமுகமான சூப்பர் மேன் மிக வேகமாக வளர்ந்து ஹீரோவான கதையை பார்க்கும் முன்பு, அண்மையில் வெளியான மேன் ஆப் ஸ்டீல் படத்தை பற்றி பார்த்துவிடுவோம். மேன் ஆப் ஸ்டீல், சூப்பர் மேனின் சாகசங்களை மட்டும் மையப்படுத்தி எடுக்கப்பட்ட படமன்று. அனைவரும் அறிந்த சூப்பர் மேன் வரலாற்றை புதிய பாணியில் சொல்லும் படம்… Continue reading
-
ஜெஸ்ஸி-குறும்பட டீசர்
Jessie A film by Sachidanandam Brothers Story-Chakravarthy Gudla Director of Photography- Premkumar Sachidanandam Screenplay, Direction, Editing, Color Grading- Aravindhkumar Sachidanandam Cast- Deepika Jain, Dr. Prabhakar Sekar, Sabarish Krishnamoorthy, Aadhi Continue reading
-
ஆழம் கட்டுரைகள்
ஆழம் இதழில் எழுதிய கட்டுரைகள். http://www.aazham.in/?author=96 நன்றி Continue reading
-
யே ஜவானி ஹே தீவானி
இந்திய சினிமாவில் காதல் கதைகளுக்கு பஞ்சமில்லை. நாயகனும் நாயகி சந்தித்து, காதலிக்கலாமா வேண்டாமா என யோசித்து, பின் காதல் செய்வதுதான் இந்திய படங்களின் வழக்கமான திரைக்கதை. அந்தவகையில், யே ஜவானி ஹே தீவானி எந்த வகையில் மாறுபட்டிருகிறது என்று பார்க்கலாம். கபீர் (ரன்பீர் கபூர்), அவி (ஆதித்யா ராய் கபுர்), அதித்தி (கல்கி கோய்ச்லின்) ஆகிய மூவரும் நெருங்கிய நண்பர்கள். விடுமுறையை கழிக்க மணாலி செல்லலாம் என முடிவெடுகின்றனர். இவர்கள் பயணத்தில் வந்து இணைகிறார் நைனா (தீபிகா… Continue reading
-
சினிமா மேட் இன் சீனா
உலகிலேயே அதிக படங்கள் தயாரிக்கும் நாடுகளின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கும் நாடு சீனா. அமெரிக்காவும் இந்தியாவும் முறையே முதல் மற்றும் இரண்டாம் இடத்தில் இருக்கின்றன. சீனாவில் படைப்பு சுதந்திரம் குறைவு என்பதால், சீன ரசிகர்களின் எதிர்பார்ப்பை சீன படைப்பாளிகளால் பூர்த்திசெய்ய முடியவில்லை. அதனால் சீனர்கள் ஹாலிவுட்டை ஆதரிக்கத் தொடங்கிவிட்டனர். விளைவு, சீனாவில் ஆண்டுக்கு பல நூறு படங்கள் தயாரிக்கப்பட்டாலும், சீனா அதிகம் கல்லாக் கட்டுவது ஹாலிவுட் படங்களின் மூலமே.. 1960-களில் சீனாவில் நடந்த கலாச்சார புரட்சியின்… Continue reading
-
ஆஸ்கார் 2013
நன்றி, ஆழம். ஏப்ரல் 2013 இதுவரை இல்லாத அளவிற்கு ஆஸ்கார் விருதுகளுக்கு இந்தாண்டு எதிர்பார்ப்பு அதிகமாயிருந்தது. விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்களில் பெரும்பாலனோர் இதற்க்கு முன் ஆஸ்கார் விருதுகளை வாங்கியவர்கள் என்பதே அதற்க்கு காரணம். தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து படங்களும் ஏதோ ஒருவகையில் சிறந்த படங்கள் எனினும், சில படங்கள் அதிக பாராட்டுகளைப் பெற்றது. அவை இங்கே.. ஆர்கோ (ARGO) சிறந்த திரைப்படமாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆர்கோவை இயக்கியர் பென் அஃப்லெக். இந்தப்படத்தின் கதாநாயகனும் இவரே. நடிகர், திரைக்கதையாசிரியர், இயக்குனர் என பன்முகம்… Continue reading
-
கடல்
உதிரிப்பூக்கள், cape Fear, கடல்- இந்த மூன்று படத்த்திருக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. கதையில் அல்ல…. உதிரிப்பூக்கள் ‘விஜயன்’, Cape fear ‘Robert De Niro’ , கடல் ‘அர்ஜுன்’-இந்த மூன்று கதாப்பாதிரமும் ஒரே மாதிரியாக வடிக்கப்பட்டவை. இறுதி வரை தான் பிடித்த பிடியில் உறுதியாக இருக்கும் கதாப்பாத்திரங்கள் இவை மூன்றும். கெட்டவனாக இருப்பதே எளிது என எண்ணிக் கொண்டு மற்றவர்களை கேலியாக பார்க்கும் கதாபாத்திரங்கள் இவை… உதிரிப்பூகளில் விஜயன் தனித்து தெரிந்ததை போல் இதில் அர்ஜுன்… Continue reading