-
கருவிலே ஓர் போதிசத்துவர்
காலை எத்தி எத்தி வெளியே வர துடிக்கிறது குழந்தை இருள் கவிந்த கர்பப் பையினிலிருந்து பேரொளி நோக்கி பல கனவுகளுடன் தலையை வெளியே நீட்டியது, அதன் கண் கூசிற்று . மருத்துவன் ஓர் தாதியை உரச, இன்னொரு தாதி அதை வன்மமாய் பார்க்க உதவியாளன் செவிலியர்களை கண்களாலே காமுற குழந்தையின் உளம் கூசிற்று . பேரொளியா இது ! பேரிருள் என் தாயின்க ருவறையே சாந்தி சூனியம் சுவர்க்கம். இழுத்துக் கொண்டது தலையை மீண்டும் உள்ளே. வெளிவர… Continue reading
-
சுஜாதா விருது-2014
உயிர்மை பதிப்பகமும் சுஜாதா அறக்கட்டளையும் இணைந்து வழங்கும் சுஜாதா விருது (பிரிவு: சிறந்த இணையம்) இந்தாண்டு என்னுடைய இணையதளத்திற்கு (www.aravindhskumar.com) கிட்டியுள்ளது என்பதை பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.. நன்றி, உயிர்மை பதிப்பகத்திற்கு, சுஜாதா அறக்கட்டளைக்கு மற்றும் தேர்வு குழுவிற்கு நன்றி, எழுத ஊக்குவித்துவரும் அத்துணை பேருக்கும், என் இணைய வாசகர்களுக்கும் நன்றி, முழு நேரம் எழுத முடிவெடுத்து வேலையை விட்டுவிட்டு வந்த நாளிலிருந்து, உறுதுணையாய் இருக்கும் அண்ணனுக்கும், அண்ணனாய் இருக்கும் நண்பர்களுக்கும்.. அரவிந்த் சச்சிதானந்தம் Continue reading
-
ஹாலிவுட் ஓநாய்-மார்டின் ஸ்கார்ஸேஸி
அமெரிக்க புதுஅலை சினிமாவின் முக்கிய படைப்பாளியாக கருதப்படும் மார்டின் ஸ்கார்ஸேஸியின் இயக்கத்தில், அண்மையில் வெளிவந்திருக்கும் படம் வொல்ஃப் ஆஃப் வால் ஸ்ட்ரீட். ஜோர்டான் பெல்ஃபோர்ட் என்கிற பங்குசந்தை தரகருடைய வாழ்க்கையை பற்றி இந்த படம் பேசுகிறது. தொண்ணூறுகளில் அமெரிக்க பங்குசந்தையை கலக்கியவர் பெல்ஃபோர்ட். பல புதுவித மோசடிகளை செய்து பங்குச்சந்தையில் பல கோடி ரூபாய் லாபம் ஈட்டிய அவர் தன்னுடைய அனுபவங்களை புத்தகமாக எழுதினார். அந்த புத்தகம் தான் இப்போது படமாக வந்திருக்கிறது. படத்தில், ஜோர்டான் பெல்ஃபோர்ட்டாக நடித்திருக்கிறார்… Continue reading
-
மணிரத்னம் படைப்புகள் ஓர் உரையாடல்
இந்தியாவில். சினிமா பேசும், சினிமாவை பற்றி பேசும் புத்தகங்கள் மிகக் குறைவு. அதுவும் தமிழில், சினிமாவை பற்றிய அறிவைபரப்பும் புத்தகங்கள் அதிகம் வந்ததில்லை. அந்தவகையில், ஆங்கிலத்தில் வெளிவந்த Conversation with Maniratnam என்ற மிக முக்கியமான இந்த புத்தகத்தை, தமிழில் கொண்டு வந்துள்ளது கிழக்கு பதிப்பகம். ஒரு படைப்பாளி தன்னுடைய இருபத்தியொரு படைப்புகளை பற்றியும், அவை உருவான பின்னணியை பற்றியும் இந்த புத்தகத்தில் மனம் திறக்கிறார். ஏன், எதற்கு, எப்படி என்பதை தாண்டி மிகவும் நுட்பமான கேள்விகளை… Continue reading
-
கிராவிட்டியும் ஆஸ்காரும்
கடந்த ஆண்டு வெளியான லைஃப் ஆப் பை படத்திற்கும் இந்த ஆண்டு வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் கிராவிட்டி படத்திற்கும் ஒரு ஒற்றுமை உண்டு. நடுக்கடலில் தன்னந்தனியாக தத்தளிக்கும் சிறுவனை பற்றிய படம் லைஃப் ஆஃப் பை. விண்வெளியில் உயிருக்கு போராடும் பெண்ணை பற்றிய சயின்ஸ் பிக்ஷன் படம், கிராவிட்டி. இரண்டு படங்களுமே, தன்னம்பிக்கை இருந்தால் எத்தகைய ஆபத்தான சூழலையும் எதிர்கொள்ளலாம் என்ற கருத்தையே முன்வைக்கின்றன. லைஃப் ஆப் பை பல ஆஸ்கார் விருதுகளை குவித்தது போல கிராவிட்டி… Continue reading
-
தி குட் ரோடும் ஆஸ்காரும்
1956-ஆம் ஆண்டு தொடங்கி ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்க படங்கள் அல்லாத மற்ற படங்களை அங்கீகரிக்கும் வகையில் சிறந்த வெளிநாட்டு திரைப்படம் என்றொரு விருதை ஆஸ்கார் குழுவினர் வழங்கி வருகின்றனர். அந்த விருதிற்காக ஒவ்வொரு நாடும் போட்டி போட்டுக் கொண்டு ஆஸ்காருக்கு படங்களை அனுப்புவது வழக்கம். இந்த ஆண்டு அதிக சர்ச்சைகளுக்கும் பாராட்டுகளுக்குமிடையே “தி குட் ரோட்” என்கிற குஜராத்தி திரைப்படத்தை ஆஸ்காருக்கு பரிந்துரை செய்திருக்கிறது இந்திய திரைப்பட கூட்டமைப்பு. தொண்ணூறுகளின் தொடக்கத்திலேயே குஜராத் திரைத்துறை அழிவை சந்திக்க… Continue reading
-
தி காஞ்ஜூரிங்
நன்றி ஆழம் உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு எடுக்கப்படும் பேய் படங்களுக்கு எப்பொழுதுமே மவுசு அதிகம். அந்த வகையில், அமெரிக்காவில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தின் திரை வடிவமே, அண்மையில் வெளியான, தி காஞ்ஜூரிங். உலகளவில் பெரும் வரவேற்ப்பை பெற்றுவரும் இந்த படத்தில் அப்படி என்ன தான் இருக்கிறது என்று பார்த்துவிடுவோம். பெரோன் தம்பதியர், தங்கள் ஐந்து மகள்களுடன் புது வீட்டிற்கு குடி புகுகிறார்கள். ஆனால் அவர்களின் செல்ல நாய் மட்டும் வீட்டிற்குள் காலடி எடுத்து வைக்க… Continue reading
-
சூப்பர் மேன்-75
உலகின் மிக பெரிய சூப்பர் ஹீரோவாக கருதப்படும் சூப்பர்மேன், முதன்முதலில் வில்லனாகதான் உருவாக்கப்பட்டார் என்றால் நம்பமுடிகிறதா? ஆம். 1933-யில், ஒரு ஆங்கில சிறுகதையில் வில்லனாக அறிமுகமான சூப்பர் மேன் மிக வேகமாக வளர்ந்து ஹீரோவான கதையை பார்க்கும் முன்பு, அண்மையில் வெளியான மேன் ஆப் ஸ்டீல் படத்தை பற்றி பார்த்துவிடுவோம். மேன் ஆப் ஸ்டீல், சூப்பர் மேனின் சாகசங்களை மட்டும் மையப்படுத்தி எடுக்கப்பட்ட படமன்று. அனைவரும் அறிந்த சூப்பர் மேன் வரலாற்றை புதிய பாணியில் சொல்லும் படம்… Continue reading
-
ஜெஸ்ஸி-குறும்பட டீசர்
Jessie A film by Sachidanandam Brothers Story-Chakravarthy Gudla Director of Photography- Premkumar Sachidanandam Screenplay, Direction, Editing, Color Grading- Aravindhkumar Sachidanandam Cast- Deepika Jain, Dr. Prabhakar Sekar, Sabarish Krishnamoorthy, Aadhi Continue reading