புனைவுகள்
-
ஊச்சு- ஹாரர் துப்பறியும் நாவல்
என்னுடைய இரண்டாவது நாவல் ‘ஊச்சு (The Fear)’ அமேசான் தளத்தில் ஈ-புத்தகமாக வெளியாகி இருக்கிறது என்பதை பகிர்வதில் மகிழ்கிறேன். கதைச் சுருக்கம் ஜாஸ்மின், நகுல், சுமித் மற்றும் மனிஷ், நால்வரும் நெருங்கிய நண்பர்கள். ஆவணப் படம் எடுப்பதற்காக மர்மங்கள் நிறைந்த மேல்பாறை நோக்கி பயணப்படுகிறார்கள். அந்த காட்டின் அமானுஸ்யத்தை அவர்கள் முழுவதுமாக உணர்ந்துகொள்வதற்குள், ஒவ்வொருவராக காணாமல் போகிறார்கள். இன்ஸ்பெக்டர் அர்ஜுன் அவர்களைத் தேடி சென்னையிலிருந்து புறப்படுகிறார். ஒருபுறம், நண்பர்கள் தொலைந்து போனதைப் பற்றி ஊரில் ஒவ்வொருவரும் ஒரு Continue reading
-
நண்பனின் கடிதங்கள்- நெடுங்கதை
அதே தாம்பரம் பீச் ரயில், கேண்டீன் அருகே வந்து நிற்கும் அதே பெட்டி, தம்பி அக்காக்கு காசு கொடு என்று கேட்கும் அதே திருநங்கைகள். ‘பாஸ் கொஞ்சம் நகுந்து உட்காருங்களேன்’. ‘இறங்கி ஏறு. இறங்கி ஏறுங்கப்பா’ ‘சார் மேஜிக் புக் சார் மேஜிக் புக். இருபது ரூவாய் தான்’ ‘நான் பாடும் பாடல் நலமாக வேண்டும்’ ‘தயவு செய்து பயணிகள் வண்டி நடை மேடையில் நின்ற பின்பு இறங்கவும்’ வழக்கமான இத்தியாதிகளுக்கு மத்தியில் அந்த Continue reading
-
சிகண்டினி- சிறுகதை
நான் அவளுடன் உரையாடியதில்லை. நான் இந்த வீட்டிற்கு குடிவந்த இரண்டு வருடத்தில், என் ஹவுஸ் ஓனர் தவிர அக்கம்பக்கத்தில் இருக்கும் யாரிடமும் உரையாடியதில்லை. மாடியில்தான் என்னுடைய அறை. தினமும் காலையில் மொட்டை மாடியில் எட்டு நடைப்பயிற்சி செய்வேன். பின் சிறிதுநேரம் தெருவை வேடிக்கைப் பார்ப்பேன். அமைதியான குறுகலான தெரு. தெருவின் ஒரு மூலையில் பெரிய சுப்ரமணிய சாமி கோவிலும், இன்னொரு மூலையில் சூலக்கரை மாரியம்மன் கோவிலும் இருக்கிறது. அங்கே மட்டும் அவ்வப்போது கூட்டத்தை காணலாம். மற்றப்படி சலனமற்ற Continue reading
