புனைவுகள்

  • ப்ளாக் பாரஸ்ட் கேக்- ஹாஸ்யக் கதை

    ராமசாமிக்கு கோபம் அதிகமாகிக் கொண்டே போனது. யாராவது அவர்முன் தற்போது போய் நின்றால் அவர் என்ன செய்வார் என்று அவருக்கே தெரியாது. ஒருவேளை கடித்துக்கூட வைத்துவிடலாம். அப்படி என்ன பிரச்சனை! புதிதாக வீட்டிற்குள் நுழைந்திருக்கும் சுமி தான் எல்லாப் பிரச்சனைகளுக்கும் காரணம். ராமசாமிதான் அந்த வீட்டில் சீனியர். ராமசாமிக்கு ஒரு மனைவி சித்ரா. சித்ராவுக்கு தெரியாமல் அவர் பல பேருடன் கும்மியடிப்பது வழக்கம். அவர்களுடைய ஒரே மகன் ரெங்கா. இப்போது பெங்களூரில் இருக்கிறான். அமெரிக்காவிலிருந்து வந்த சுமி… Continue reading

  • சிகண்டினி- சிறுகதை

    நான் அவளுடன் உரையாடியதில்லை. நான் இந்த வீட்டிற்கு குடிவந்த இரண்டு வருடத்தில், என் ஹவுஸ் ஓனர் தவிர அக்கம்பக்கத்தில் இருக்கும் யாரிடமும் உரையாடியதில்லை. மாடியில்தான் என்னுடைய அறை. தினமும் காலையில் மொட்டை மாடியில் எட்டு நடைப்பயிற்சி செய்வேன். பின் சிறிதுநேரம் தெருவை வேடிக்கைப் பார்ப்பேன். அமைதியான குறுகலான தெரு. தெருவின் ஒரு மூலையில் பெரிய சுப்ரமணிய சாமி கோவிலும், இன்னொரு மூலையில் சூலக்கரை மாரியம்மன் கோவிலும் இருக்கிறது. அங்கே மட்டும் அவ்வப்போது கூட்டத்தை காணலாம். மற்றப்படி சலனமற்ற… Continue reading

  • நண்பர்களற்றவனின் கதை- சிறுகதை

    நண்பர்களற்றவனின் கதை- சிறுகதை

    எனக்கு நண்பர்கள் இல்லை என்று சொன்னால் நீங்கள் நம்ப மறுக்கலாம். அப்படியே நம்பினாலும் நண்பர்களின்றி வாழ்பவனின் வாழ்க்கையை தெரிந்துக் கொள்வதில் என்ன சுவாரஸ்யம் இருந்துவிடப் போகிறது என்று எண்ணலாம். உண்மையில், உலக வாழ்கையே சுவரஸ்யமற்றது தான். சுவரஸ்யமென்பது வாழ்கையினுள் நாம் வழிய திணித்துக் கொள்ளும் பொய். அதனால் என் வாழ்க்கை சுவாரஸ்யமற்று போனதைப் பற்றி நான் அலட்டிக் கொள்வதில்லை. ஆனால் சிலபல நண்பர்களோடு திரிந்த நான் இப்படி நண்பர்களற்றுப் போனதை எண்ணும் போது ஆச்சர்யமாக இருக்கிறது. பத்து… Continue reading

  • அடாஜன் சாலை- த்ரில்லர் கதை

    மழை. அடை மழை. ஹசிரா சாலை வழக்கம் போல் ஆள் அரவமற்று கிடந்தது. அங்கிருந்து சூரத் செல்லவேண்டுமெனில் அடாஜன் சாலை வழியாகவோ அல்லது டுமாஸ் சாலை வழியாகவோ செல்ல வேண்டும். டுமாஸ் வழியாக செல்வது கால விரையம் தான். ஆனாலும் பாதுகாப்பான சாலை அது. அடாஜன் பாதுகாப்பற்ற சாலையா என்று உறுதியாக தெரியாது. ஆனால் அந்த சாலையை பற்றி நான் கேள்விப்பட்ட கதைகள் ஏராளம் என்பதால் அந்த சாலையில் பயணிப்பதை தவிர்த்து வந்தேன். அதற்கு என் நண்பர்… Continue reading

  • தட்பம் தவிர்- புத்தக வடிவில்

    ‘தட்பம் தவிர்’ புத்தக வடிவில் அந்தாதி பதிப்பக வெளியீடாக வந்துள்ளது என்பதை பகிர்வதில் மகிழ்கிறேன்…   தட்பம் தவிர்- அரவிந்த் சச்சிதானந்தம் (Paperback) பக்கங்கள்: 174 அந்தாதி பதிப்பகம் விலை: Rs 75  (free shipping to India) புத்தகத்தை வாங்க இங்கே கிளிக் செய்யவும்  Continue reading

  • சுழற்சி- சிறுகதை

    இன்னும் ஆறுமாதங்கள் தான் வீட்டில் அவகாசம் கொடுத்திருக்கிறார்கள். அதற்குள் எதுவும் நடக்காமல் போனால், அவன் மீண்டும் ஏதாவது வேலைக்கு செல்ல வேண்டும். வருங்காலம் அப்போது தான் பிரகாசமாக இருக்கும் என்றுஅப்பா சொல்கிறார். அவர் சொல்வதும் உண்மைதான் என்று   எண்ணினான்.  அவன் வேலையைவிட்டு வந்து ஒன்றரை வருடங்கள் ஒடிவிட்டது. இன்னும் சினிமாவில் எதையும் சாதித்ததாக ஞாபகமில்லை. ஒரு படத்தில் ஒரே ஒரு நாள் மட்டும் உதவி இயக்குனராக வேலை செய்துவிட்டு திரும்பிவிட்டான். அதுவும் பீல்ட் க்ளியர் என்று கத்துவது… Continue reading

  • அவன் பன்றியாக மாறிக்கொண்டிருக்கிறான்-சிறுகதை

    “பன்றிகளுடன் சண்டைப் போட்டால் பன்றியாக மாறிவிடுவாய்” இப்படியாக பாபா சொன்னதாக ஆசிஷ் மிஸ்ரா என்னிடம் ஒருமுறை சொன்னபோது நான் அதைப் பொருட்படுத்தவில்லை. பாபா பொருட்படுத்தக் கூடிய ஆசாமியாக எனக்கு படவில்லை. எப்போது பார்த்தாலும், காப்கா என்றோ காம்யூ என்றோ பேசும் அவனை பொருட்படுத்தாமல் இருப்பதே நல்லது. நான், பாபா, மிஸ்ரா மூவரும் ஒரே வங்கியில் ஐந்து வருடங்களுக்கு முன்பு  வேலைக்குச் சேர்ந்தோம். அங்குதான் மூவரும் முதன்முதலில் சந்தித்துக் கொண்டோம். இரண்டு வருடங்களிலேயே பாபா வேலையைவிட்டு முழு நேர… Continue reading

  • லாலாகதைகள் 2- படைப்பின் உச்சம்

    “ஆஆஆஆ-வோட ‘தாபு’ நாவல படிங்க. அவரோட படைப்பின் உச்சம்” பிரபல எழுத்தாளர் ஆஆஆஆவின் தீவிர வாசகர்/பக்தர் சொன்னார். நான் அந்த நாவலை படித்திருக்கிறேன், ஆனால் அவ்வளவாக பிடிக்கவில்லை என்பதை தயங்கி தயங்கி சொன்னேன். “புடிக்கலயா? புரிலனு சொல்லுங்க. அதெல்லாம் ஆயிர பக்க காவியம். ஒரு வாசிப்புல புரிஞ்சிறாது. திரும்ப வாசிங்க” பதட்டமாக பேசினார். நான் சரி என்று தலையாட்டிவிட்டு, “உங்களுக்கு புரிஞ்சிதா?” என்றேன். அக்கம்பக்கம் பார்த்துவிட்டு “சபரிமலைக்கு மாலை போட்ருக்கேன். பொய் சொல்லக்கூடாது” என்று சொன்னார். நான்… Continue reading

  • லாலாகதைகள் 1- நான்கு பிரதிகள் விற்ற புத்தகம்

    “இது தமிழின் ஆகச்சிறந்த நாவல்..” பிரபல்ஆஆஆஆ எழுத்தாளர் சொல்லிக்கொண்டிடுருக்கும்போதே அவர் காதை கடித்தார் அந்த புத்தகத்தை எழுதிய பிரபல்அ எழுத்தாளர், “ஐயா அது சிறுகதைத் தொகுப்பு நாவல் இல்ல” சுதாரித்துக் கொண்ட ஆஆஆஆ “நாவல் அளவிற்கு ஆழமான சிறுகதைகளை கொண்ட தொகுப்பு” என்று சொல்லி முடித்தார். ‘ஆஆஆஆ’வின் தீவிர பக்தர்கள் முன்னூறு பேரும் முந்நூற்றியொரு புத்தகங்களை வாங்கி தங்கள் வீட்டில் அடுக்கிக் கொண்டனர். சில மாதம் கழித்து அதில் ஒரு பக்தர், “ஒரே நாள்ல 300 பிரதி… Continue reading

  • வரிசையில் நின்ற கடவுள்- சிறுகதை

    வழக்கமாக நடை சாத்துவதற்கு முன்பு செய்யப்படும் கைங்கர்யம் எதுவும் செய்யப்படவில்லை. நங்கையர் குறை தீர்க்கும் நல்லாண்டானுக்கு சந்தேகம், ‘தாலாட்டு ஏன் இன்னும் பாடப்படவில்லை?’. அசதியின் காரணமாக அதை பொருட்படுத்தாமல் உறங்கிப் போனார். வைகுண்டராஜன் தன் துயில் கலையும் போது சுப்ரபாத ஒலி கேட்கும் என்று எதிர்பார்த்தார். அதுவும் இல்லை. குழப்பமடைந்தவர், வைகுண்டத்திலிருந்து நேரடியாக மலை மீது இறங்கினார். கோவிலே வெறிச்சோடிக் கிடந்தது. வாசலில் பல்லக்கு கேட்பாரற்று கிடந்தது. வெகுதொலைவில், மலை அடிவாரத்தில் ஓடிக் கொண்டிருந்தவர்கள் புள்ளியாக தெரிந்தார்கள்.… Continue reading