சிறுகதை
-
கண்ணீர்த் துளிகளில் கரைந்த கனவுகள்
மு.கு: இது கல்கி நினைவுச் சிறுகதை போட்டி 2014-யில் பிரசுரத்திற்கு தேர்வான கதை. நன்றி கல்கி. *** வேகமாக திறக்கப்பட்ட அந்த ஜன்னல்களினூடே புகுந்த சூரிய ஓளி தூக்கக் கலக்கத்திலிருந்த அவன் கண்களை கூசச் செய்தது. சோம்பல் முறித்தவாரே அவன் ஜன்னல் வழியே வீதியில் செல்பவர்களை பார்த்துக்கொண்டிருந்தான். ஜேஜே என மக்கள் இங்கும்அங்கும் ஓடி கொண்டிருந்தார்கள். அதை காண்பவர்களுக்கு ஆடி மாத திருவிழாவோ என ஐயப்பாடு எழலாம். ஆனால் அந்த சேரியை பொறுத்த வரையில் தினமும் காலையில்… Continue reading
-
கைகுட்டைகளும் ட்ரான்ஸ்வெஸ்டிசமும்-சிறுகதை
“Transvestism (also called transvestitism) is the practice of cross-dressing, which is wearing clothing traditionally associated with the opposite sex.”-Wikipedia கைக்குட்டை என்பது உங்களுக்கு வேண்டுமென்றால் ஒரு சாதாரண விடயமா இருக்கலாம். எனக்கு அதிமுக்கியமான ஓர் விடயம். கைகுட்டைக்கென்ன பெரிய முக்கியத்துவம் இருந்துவிடப்போகுதென்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் கடந்த இரண்டு மாதங்களில் நான் ஆயிரம் ரூபாய்க்குக் கைகுட்டை வாங்கிட்டேன்னு சொன்னால் , அதனுடைய முக்கியத்துவம் உங்களுக்குப் புரியும். ஒரு வருடத்திற்குச் சுமார் ஆறாயிரம் ரூபாய் கைகுட்டைக்கே… Continue reading
-
லேடி போலீஸ்- நகைச்சுவைக் கதை
அந்த புத்தகத்தை வாங்கியே ஆகணுமென்று எங்கெங்கோ தேடுனேன். அந்த புத்தகத்திற்க்கு பின்னாடி ஒரு காதல் கதை ஒளிஞ்சிருக்கு. எங்கேயும் கிடைக்காத அந்த புத்தகம் கண்ணிமேரா நூலகத்தில கிடைக்கும் என்கிற நம்பிக்கையில டிரைன் ஏறினேன். நானும் இந்தியா முழுக்க சுத்தியிருக்கேன். பம்பாய் ரயிலில் எல்லாம் முட்டி மோதி ஏறியிருக்கேன். ஆனால் அங்கெல்லாம் டிரைன் கூட்டமா இருந்தாதான் தொங்கிக்கிட்டு போவாங்க. சென்னையில மட்டும்தான், எனக்கு விவரம் தெரிஞ்ச நாள்ல இருந்து பாக்குறேன், ஒரு நாலு பேரு தொங்கிக்கிட்டே பயணம் செய்வானுங்க.… Continue reading
-
நைட் ஷிப்ட்
“Every Guilty Person is his Own hangman”-Lucius Annaeus Seneca “தூ நைட் ஷிப்ட் மே ஆஜா ” திடிர்னு ஒருநாள் என் பாஸ் சொன்னான். பொதுவா ‘நைட் ஷிப்ட்’ யாரும் வரமாட்டங்க. எல்லாம் கல்யாணம் ஆனவனுங்க. இத்தனைக்கும் என்னோட சின்ன பசங்க. இங்கெல்லாம் அப்படித்தான். ரொம்ப சீக்கிரம் கல்யாணம் செஞ்சுபாங்க. ராத்திரில மட்டும்தான் பெண்டாளானும் யாரோ சொல்லிவச்சிட்டு செத்த எழுதப் படாத அந்த கவைக்குதவாத சட்டத்தை கண்மூடித்தனமா பின்பற்றுற நாட்டுல அவனுங்க ‘நைட் ஷிப்ட்’ வர மாட்டேனு சொன்னது ஒன்னும்… Continue reading
-
மாசற்ற காதல்
மனிதனை மிருகத்திடமிருந்து மாறுபடுத்திகாட்டுகிற ஒரே விடயம் காதல். மிருங்களுக்குள்ளும் காதலுண்டு. ஆனால் அதன் மையப்புள்ளி வேறு. அதற்கு பகுத்து உணர்கிற சக்தி கிடையாது. ஒரு நாய் ஒரே நேரத்துல நிறைய நாய்களோடு காதல் கொள்ளும். ஆனா மனிதன் அப்படி இல்லை. அப்படி இருந்தா அவன் மனிதனும் இல்லை, அது காதலும் இல்லை காதலுக்கு மனோதத்துவரீதியான விளக்கத்தை ஆராய வேண்டியதில்லை.அப்படி ஆராய முற்பட்டால் காதல் என்கிற கேள்விக்கு காமம் என்பதே பதிலா கிட்டும். ஆனால் அதை தவிர்த்து, சமுக… Continue reading