சிறுகதை

  • நகுலனின் நாய்-சிறுகதை

    இரு கைகளையும் நிலத்திலூன்றி. ஒரு காலால் முட்டியிட்டு, மற்றொரு காலைத் தூக்கி, நாக்கை வெளியே நீட்டி நாயைப் போல் குரைத்துக் காட்டினான் நகுலன். அவனின் பெற்றோர் அதனை ரசித்துக் கொண்டிருந்தனர். ஆண்டே மிஷா தம்பதியரின் ஒரே மகன் நகுலன். கார்ப்பரேட் தம்பதிகள். அவர்கள் சேர்ந்து வாழத் தொடங்கி ஐந்து வருடங்காளாகின்றன. ஒரு வருடத்திற்கு முன்தான் திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திற்கு முன் குழந்தையைப் பற்றிக் கவலைப்படாத அவர்கள் திருமணம் என்ற சம்ப்ரதாயத்திற்கு உட்பட்டவுடன் சம்ப்ரதாயமாக ஒரு குழந்தைக்கு ஏங்கத் Continue reading

  • கைகுட்டைகளும் ட்ரான்ஸ்வெஸ்டிசமும்-சிறுகதை

     “Transvestism (also called transvestitism) is the practice of cross-dressing, which is wearing clothing traditionally associated with the opposite sex.”-Wikipedia கைக்குட்டை என்பது உங்களுக்கு வேண்டுமென்றால் ஒரு சாதாரண விடயமா இருக்கலாம். எனக்கு அதிமுக்கியமான ஓர் விடயம்.  கைகுட்டைக்கென்ன பெரிய முக்கியத்துவம் இருந்துவிடப்போகுதென்று  நீங்கள்  நினைக்கலாம். ஆனால்  கடந்த இரண்டு மாதங்களில்  நான் ஆயிரம் ரூபாய்க்குக் கைகுட்டை வாங்கிட்டேன்னு சொன்னால் , அதனுடைய முக்கியத்துவம் உங்களுக்குப் புரியும். ஒரு வருடத்திற்குச் சுமார்  ஆறாயிரம் ரூபாய் கைகுட்டைக்கே Continue reading

  • லேடி போலீஸ்- நகைச்சுவைக் கதை

    அந்த புத்தகத்தை  வாங்கியே ஆகணுமென்று எங்கெங்கோ தேடுனேன். அந்த புத்தகத்திற்க்கு பின்னாடி ஒரு காதல் கதை ஒளிஞ்சிருக்கு. எங்கேயும் கிடைக்காத அந்த புத்தகம் கண்ணிமேரா நூலகத்தில கிடைக்கும் என்கிற நம்பிக்கையில டிரைன் ஏறினேன். நானும் இந்தியா முழுக்க சுத்தியிருக்கேன். பம்பாய் ரயிலில் எல்லாம் முட்டி மோதி ஏறியிருக்கேன். ஆனால் அங்கெல்லாம் டிரைன் கூட்டமா இருந்தாதான் தொங்கிக்கிட்டு போவாங்க. சென்னையில மட்டும்தான், எனக்கு விவரம் தெரிஞ்ச நாள்ல இருந்து பாக்குறேன், ஒரு நாலு பேரு தொங்கிக்கிட்டே பயணம் செய்வானுங்க. Continue reading

  • ஓடிப்போனக் கடவுள்

    நான் எப்படி இங்கு வந்தேன் என்பது இன்னும் விளங்கவில்லை.இது ஒரு பெரிய கோவில். மிக உயர்ந்த மதில் சுவர்கள். நிச்சயம் ஏதோ ஒரு மிகப்பெரிய அரசனால் கட்டப்பட்ட கோவிலென்பது திண்ணம். சிற்றரசர்கள் பெரியக் கோவில்களை உருவாக்கியதில்லை.பிரகாரம் முழுக்க ஏதேதோ குட்டிக் கடவுள்களின் சிதிலமடைந்த சிலைகள். அனைத்தையும் கடந்து நான் மூல ஸ்தானத்தை நோக்கி சென்றேன். மூலமே என் நோக்கு வெருச்சோடிக் கிடந்த கோவில் காணவில்லை கடவுள்; இது என்ன கோவில் என்பது விளங்கவில்லை. கற்பக்ரஹத்தில் மூலவர் சிலையை Continue reading

  • நைட் ஷிப்ட்

    “Every Guilty Person is his Own hangman”-Lucius Annaeus Seneca “தூ நைட் ஷிப்ட் மே ஆஜா ” திடிர்னு ஒருநாள் என் பாஸ் சொன்னான். பொதுவா ‘நைட் ஷிப்ட்’ யாரும் வரமாட்டங்க. எல்லாம் கல்யாணம் ஆனவனுங்க. இத்தனைக்கும் என்னோட சின்ன பசங்க. இங்கெல்லாம் அப்படித்தான். ரொம்ப சீக்கிரம் கல்யாணம் செஞ்சுபாங்க.  ராத்திரில மட்டும்தான்  பெண்டாளானும் யாரோ சொல்லிவச்சிட்டு செத்த எழுதப் படாத அந்த கவைக்குதவாத சட்டத்தை கண்மூடித்தனமா பின்பற்றுற நாட்டுல அவனுங்க ‘நைட் ஷிப்ட்’ வர மாட்டேனு சொன்னது ஒன்னும் Continue reading

  • முனைவர் முருகேசன்

    1 பல அறிஞர்களையும் விஞ்ஞானிகளையும் உருவாக்கிவிட்ட பின்னும் அந்த கல்லூரி தலைக் கனமின்றி அமைதியாகவே இயங்கிக் கொண்டிருந்தது. அங்கு ஓர் வகுப்பறை மட்டும் சற்று சப்தமாகவே காணப்பட்டது. பல கூத்துகளும் கிண்டல்களும் அங்கு அரங்கேறிக்கொண்டிருந்தன. இவ்வளவு சலசலப்புகளுக்கு மத்தியிலும் மாணவர்கள் யாரையோ எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். திடீரென உள்ளே நுழைந்தார் வகுப்பாசிரியர்  முருகேசன். வகுப்பே நிசப்தமாயிற்று. அவர் மேலிருக்கும் மரியாதையினாலோ, பயத்தினாலோ அன்று. அவர் கூறும் வழக்கமான அந்த மூன்று சொற்களை எதிர்பார்த்து, “டுடே நோ கிளாஸ்” அவர் Continue reading

  • விடாது பைக்

    மணி காலை ஒன்பது.வினோத்தை பொறுத்த வகையில் அது அதிகாலை. வீட்டிலிருந்து வெளியே வந்தவனுக்கு காத்திருந்தது ஆச்சர்யம். வாசலருகே நின்றுகொண்டிருந்தது அந்த விலையுயர்ந்த பைக். “யாருதா இருக்கும் ? இத இந்த தெருவுல பார்த்ததே இல்லையே. பூட்டாம வெச்சுருக்கான் !” என்றபடி சுற்றும் முற்றும் பார்த்தான். தெருவே நிசப்தமாக இருந்தது. “யாருதா இருந்த என்ன, இன்னைக்கு இது என் பைக்.” பெரும் சப்தத்துடன் பைக் அங்கிருந்து கிளம்பியது. வினோத்திற்கு சிறு வயதிலிருந்தே பைக் மீது ஆசை அதிகம். ஒவ்வொரு Continue reading

  • மாசற்ற காதல்

    மனிதனை மிருகத்திடமிருந்து மாறுபடுத்திகாட்டுகிற ஒரே விடயம் காதல். மிருங்களுக்குள்ளும்  காதலுண்டு. ஆனால் அதன் மையப்புள்ளி வேறு. அதற்கு பகுத்து உணர்கிற  சக்தி கிடையாது. ஒரு நாய் ஒரே நேரத்துல நிறைய நாய்களோடு காதல் கொள்ளும். ஆனா மனிதன் அப்படி இல்லை. அப்படி இருந்தா அவன் மனிதனும் இல்லை, அது  காதலும் இல்லை காதலுக்கு மனோதத்துவரீதியான விளக்கத்தை ஆராய வேண்டியதில்லை.அப்படி ஆராய முற்பட்டால் காதல் என்கிற கேள்விக்கு காமம் என்பதே பதிலா கிட்டும். ஆனால் அதை தவிர்த்து, சமுக Continue reading

  • நான் ஓர் விலைமாது

    மணி பத்து ஆச்சு, இன்னும் பாஸ்கர் சாரா காணோம். பாஸ்கர் சார் யாருனு கேக்குறீங்களா ? அவருதாங்க அந்த மாடிவூட்டுக்காரர். பெரிய பாங்க் ஆபிசர். ஒன்பது மணி ஆச்சுன்னா போதும், அவரு வீட்டு வாசல்ல  வெத்தலய்ய மென்னுக்கிட்டே உக்காந்திருப்பாரு.வீட்டுலயே எவ்வளவு நேரம்தான் சும்மா ஊக்கந்திருக்குறது ! புழுக்கமா இருக்காதா ? அதான் காத்தோட்டமா அரைக்கை பனியன் ஒண்ண போட்டுக்கிட்டு, போற வறோங்க எல்லாரையும் வேடிக்கை பாத்துக்கிட்டு இருப்பாரு. அவருக்கு குல்ஃபினா ரொம்ப புடிக்கும். எனக்கு அவர ரொம்ப Continue reading

  • ஒழுங்கற்ற நெறிமுறைகள்

    முன் குறிப்பு: கடந்த வருடம் இந்த கதையை முதன் முதலில் ஆங்கிலத்தில் எழுதும்போது எளிதாகவே  இருந்தது. ஆனால் தமிழ் மொழி பெயர்ப்பு அவ்வளவு எளிதாக அமைந்துவிடவில்லை. இது ஒரு முயற்சியே. இந்த கதை எந்த  கோட்பாடுகளிலும் அடங்காமல் போகும் பட்சத்தில் என்னுடைய புது முயற்சி என எடுத்துக் கொள்ளவும்.. ……………………………….. அந்த காரின் கதவுகள் வேகமாக திறந்தன. அவள் சிரித்துக்கொண்டே அந்த வெள்ளை நிறக் காரில் ஏறினாள். அவள் அணிந்திருந்த அந்த சீன ரோலெக்ஸ் கடிகாரம் 6.30  எனக் Continue reading