கட்டுரை
-
தொடரும் சினிமா (free e-book)
கடந்த ஓர் ஆண்டில் பல்வேறு நேரங்களில் பல்வேறு களங்களில் வெளியான திரைக் கட்டுரைகளின் தொகுப்பு இது. தொடரும் சினிமா – சினிமா கட்டுரைகள்- அரவிந்த் சச்சிதானந்தம் Cover Photography© Premkumar Sachidanandam கூகிள் ப்ளே ஸ்டோரில் free download செய்ய இங்கே கிளிக் செய்யவும் நேரடியாக PDF download செய்ய இங்கே கிளிக் செய்யவும் Continue reading
-
‘பிரேக்கிங் பேட்’ (Breaking Bad) சொல்லித்தரும் திரைக்கதை
“I am an extremely overqualified high school chemistry teacher. I have watched all of my colleagues and friends surpass me in every way imaginable. My wife is seven months pregnant with a baby we didn’t intend. My fifteen-year old son has cerebral palsy. And within eighteen months, I will be dead…” பிரேக்கிங் பேட்டில் வரும் இந்த… Continue reading
-
தமிழில் ஆன்லைன் செல்ஃப்-பப்ளிஷிங் ஏன் அவசியம்?
‘செல்ஃப்-பப்ளிஷிங்’ (Self-Publishing) என்ற வார்த்தை அண்மை காலத்தில் பிரபலமான வார்த்தையாக இருக்கலாம். ஆனால் தமிழில் ஏதோ ஒரு வகையில் செல்ஃப்-பப்ளிஷிங் கான்செப்ட் வெகு காலமாகவே இருந்து கொண்டிருக்கிறது. பெரும்பான்மையான நேரங்களில் எழுத்தாளர்கள் தங்கள் ஆரம்ப நாட்களில் தங்களுடைய படைப்புகளை தாங்களே பிரசுரித்து வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு வேறு வழி இருந்திருக்கவில்லை. ஆனாலும் செல்ஃப்-பப்ளிஷிங் என்று அவர்கள் அதை அழைக்க வில்லை. ஒரு எழுத்தாளன் தன் படைப்புகளை தானே பிரசுரித்துக்கொள்ளும் முறை தான் செல்ஃப்-பப்ளிஷிங் எனப்படுகிறது. இப்போது உலகளவில் செல்ஃப் பப்ளிஷிங்கிற்கு ஏராளமான… Continue reading
-
ப்ரிசன் ப்ரேக் சொல்லித்தரும் திரைக்கதை-2
ப்ரிசன் ப்ரேக் சொல்லித்தரும் திரைக்கதை-2 முதல் பாகத்தை இங்கே படிக்கலாம் ப்ரிசன் ப்ரேக் சொல்லித்தரும் திரைக்கதை-1 சிறையிலிருந்து தப்பிக்கும் ஸ்கோஃபீல்ட் அண்ட் கோ-வை FBI அதிகாரி அலெக்சான்டர் மஹோன் துரத்துகிறார். அவர் கம்பெனியின் ஆள். ஸ்கோஃபீல்டையும், லிங்கனையும், மற்ற ஆறு பேரையும் கொல்வதே அவரது நோக்கம். இன்னொரு புறம் சிறை அதிகாரி பிராட் பெல்லிக் துரத்துகிறார். ஒவ்வொருவரும் தத்தம் போக்கில் பயணிக்கின்றனர். அவர்களை பிடிக்க முடியாததால் பிராட் பெல்லிக்கிற்கு வேலை போகிறது. ஸ்கோஃபீல்டையும் அவன் அண்ணனையும் பிடித்துக்கொடுத்தால்,… Continue reading
-
ஸ்பைடர் மேன்
உலகின் மிக பிரபலமான சூப்பர் ஹீரோக்கள் வரிசையில் ஸ்பைடர் மேனுக்கென்று தனி இடம் இருக்கிறது. அனைவரையும் கவரக் கூடிய வகையில் ஸ்பைடர் மேன் செய்யும் பல விஷேச சாகசங்கள் தான் அதற்கு காரணம். விரல் நுனியை பயன்படுத்தி சிலந்தி வலை பின்னும் ஸ்பைடர் மேனை யாருக்குதான் பிடிக்காது? 1962 ஆண்டு காமிக் உலகிற்கு அறிமுகமான ஸ்பைடர் மேன், 1977-ஆம் ஆண்டு தான் வெள்ளித்திரையில் முதன்முதலில் தோன்றினார். காமிக் புத்தக ஹீரோக்களின் மவுசு, திரையில் குறைந்து கொண்டிருந்த கால… Continue reading
-
திரிஷ்யம்
கடந்த ஆண்டு இறுதியில் இந்தியாவைத் திரும்பிப் பார்க்க வைத்த இரண்டு த்ரில்லர் படங்களில் மலையாளப் படமான திரிஷ்யமும் ஒன்று. இன்னொன்று கன்னடப் படமான லூசியா. இரண்டு படங்களையுமே இப்போது தமிழில் எடுக்கிறார்கள். லூசியாவைப் பற்றி பின் விவாதிப்போம்..திரிஷ்யமின் கதை இதுதான். ஜார்ஜ் குட்டி (மோகன்லால்) ஒரு சிறு கிராமத்தில் வசிக்கும் கேபில் டிவி ஆப்பரேட்டர். படிப்பறிவு மிகக் குறைவு. ஆனால் அனுபவ அறிவு மிகமிக அதிகம். பல மொழித் திரைப்படங்களைப் பார்த்தே தன் அறிவை வளர்த்துக் கொள்கிறான்.… Continue reading
-
ப்ரிசன் ப்ரேக் சொல்லித்தரும் திரைக்கதை-1
அமெரிக்க, இங்கிலாந்து தொலைக்காட்சி தொடர்களை இரண்டு முக்கிய காரணங்களுக்காக பார்க்கலாம். ஒன்று, அவை அனைத்தும் முழு நீள படங்களுக்கு இணையான தரத்தில், மிகவும் சுவாரஸ்யமாக உருவாக்கப்பட்டிருக்கும். சில நேரங்களில் படங்களை விட தொலைக்காட்சி தொடர்கள் சுவாரஸ்யமாக இருக்கும். இரண்டு, அத்தகைய தொடர்களை கூர்ந்து கவனிப்பதன் மூலம் திரைக்கதை உத்திகளை புரிந்து கொள்ளலாம். சினிமா திரைக்கதைகளை விட தொலைக்காட்சி தொடர்களின் திரைக்கதைகளுக்கு அதிக உழைப்பு தேவை. கதையை சுவாரஸ்யமான இடத்தில் முடித்தால் தான், மீண்டும் அடுத்த வாரம் பார்வையாளர்கள்… Continue reading
-
யாமிருக்க பயமே
ஒரு பேய் படமெனில் அது நம்மை பயமுறுத்த வேண்டும். சரி. அதுவே நம்மை வயிறுகுழுங்க சிரிக்கவும் வைத்தால்? அதுவே ஹாரர் காமெடி எனப்படும் genre. Scary movie series, ஹிந்தியில் கடந்த ஆண்டு வெளியான Go Goa Gone போன்ற படங்களை அதற்கு உதாரணமாக சொல்லலாம். நம்மூரில் ஹாரர் படங்களே குறைவு. இதில் எங்கிருந்து ஹாரர் காமெடி எடுப்பது ! ஆனால் அப்படி ஒரு படத்தை இப்போது எடுத்திருக்கிறார்கள். யாமிருக்க பயமே ஒரு ஹாரர் காமெடி படம். ஆரம்ப… Continue reading
-
ஆஸ்கார் 2014
நன்றி ஆழம் ஏப்ரல் 2014 ஆஸ்கார் போட்டியின் மீது ஏராளமான விமர்சனங்கள் எழுந்தாலும், ஆஸ்கார் விருதுக்கு இருக்கும் மவுசுமட்டும் குறைவதில்லை. அந்த வகையில், இந்த ஆண்டு அதிக எதிர்பார்ப்புகளுக்கிடையே நடந்து முடிந்த ஆஸ்கார் போட்டியில் எந்தெந்த படங்கள் எந்தெந்த பிரிவுகளில் விருதுகளை வென்றன என்பதை இங்கே பார்ப்போம். கிராவிட்டி இந்த ஆண்டு அதிக விருதுகளை வென்றுள்ள படம், கிராவிட்டி. சிறந்த இயக்குனர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த படத்தொகுப்பு, சிறந்த இசை உட்பட மொத்தம் ஏழு விருதுகளை இந்த… Continue reading
-
ஹாலிவுட் ஓநாய்-மார்டின் ஸ்கார்ஸேஸி
அமெரிக்க புதுஅலை சினிமாவின் முக்கிய படைப்பாளியாக கருதப்படும் மார்டின் ஸ்கார்ஸேஸியின் இயக்கத்தில், அண்மையில் வெளிவந்திருக்கும் படம் வொல்ஃப் ஆஃப் வால் ஸ்ட்ரீட். ஜோர்டான் பெல்ஃபோர்ட் என்கிற பங்குசந்தை தரகருடைய வாழ்க்கையை பற்றி இந்த படம் பேசுகிறது. தொண்ணூறுகளில் அமெரிக்க பங்குசந்தையை கலக்கியவர் பெல்ஃபோர்ட். பல புதுவித மோசடிகளை செய்து பங்குச்சந்தையில் பல கோடி ரூபாய் லாபம் ஈட்டிய அவர் தன்னுடைய அனுபவங்களை புத்தகமாக எழுதினார். அந்த புத்தகம் தான் இப்போது படமாக வந்திருக்கிறது. படத்தில், ஜோர்டான் பெல்ஃபோர்ட்டாக நடித்திருக்கிறார்… Continue reading