கட்டுரை

  • மணிரத்னம் படைப்புகள் ஓர் உரையாடல்

    இந்தியாவில். சினிமா பேசும், சினிமாவை பற்றி பேசும் புத்தகங்கள் மிகக் குறைவு. அதுவும் தமிழில், சினிமாவை பற்றிய அறிவைபரப்பும் புத்தகங்கள் அதிகம் வந்ததில்லை. அந்தவகையில், ஆங்கிலத்தில் வெளிவந்த Conversation with Maniratnam என்ற மிக முக்கியமான இந்த புத்தகத்தை, தமிழில் கொண்டு வந்துள்ளது கிழக்கு பதிப்பகம். ஒரு படைப்பாளி தன்னுடைய இருபத்தியொரு படைப்புகளை பற்றியும், அவை உருவான பின்னணியை பற்றியும் இந்த புத்தகத்தில் மனம் திறக்கிறார். ஏன், எதற்கு, எப்படி என்பதை தாண்டி மிகவும் நுட்பமான கேள்விகளை… Continue reading

  • கிராவிட்டியும் ஆஸ்காரும்

    கடந்த ஆண்டு வெளியான லைஃப் ஆப் பை படத்திற்கும் இந்த ஆண்டு வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் கிராவிட்டி படத்திற்கும் ஒரு ஒற்றுமை உண்டு. நடுக்கடலில் தன்னந்தனியாக தத்தளிக்கும் சிறுவனை பற்றிய படம் லைஃப் ஆஃப் பை. விண்வெளியில் உயிருக்கு போராடும் பெண்ணை பற்றிய சயின்ஸ் பிக்ஷன் படம், கிராவிட்டி. இரண்டு படங்களுமே, தன்னம்பிக்கை இருந்தால் எத்தகைய ஆபத்தான சூழலையும் எதிர்கொள்ளலாம் என்ற கருத்தையே முன்வைக்கின்றன. லைஃப் ஆப் பை பல ஆஸ்கார் விருதுகளை குவித்தது போல கிராவிட்டி… Continue reading

  • தி குட் ரோடும் ஆஸ்காரும்

    1956-ஆம் ஆண்டு தொடங்கி ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்க படங்கள் அல்லாத மற்ற படங்களை அங்கீகரிக்கும் வகையில் சிறந்த வெளிநாட்டு திரைப்படம் என்றொரு விருதை ஆஸ்கார் குழுவினர் வழங்கி வருகின்றனர். அந்த விருதிற்காக ஒவ்வொரு நாடும் போட்டி போட்டுக் கொண்டு ஆஸ்காருக்கு படங்களை அனுப்புவது வழக்கம். இந்த ஆண்டு அதிக சர்ச்சைகளுக்கும் பாராட்டுகளுக்குமிடையே “தி குட் ரோட்” என்கிற குஜராத்தி திரைப்படத்தை ஆஸ்காருக்கு பரிந்துரை செய்திருக்கிறது இந்திய திரைப்பட கூட்டமைப்பு. தொண்ணூறுகளின் தொடக்கத்திலேயே குஜராத் திரைத்துறை அழிவை சந்திக்க… Continue reading

  • தி காஞ்ஜூரிங்

    நன்றி ஆழம்  உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு எடுக்கப்படும் பேய் படங்களுக்கு எப்பொழுதுமே மவுசு அதிகம். அந்த வகையில், அமெரிக்காவில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தின் திரை வடிவமே, அண்மையில் வெளியான, தி காஞ்ஜூரிங். உலகளவில் பெரும் வரவேற்ப்பை பெற்றுவரும் இந்த படத்தில் அப்படி என்ன தான் இருக்கிறது என்று பார்த்துவிடுவோம். பெரோன் தம்பதியர், தங்கள் ஐந்து மகள்களுடன் புது வீட்டிற்கு குடி புகுகிறார்கள். ஆனால் அவர்களின் செல்ல நாய் மட்டும் வீட்டிற்குள் காலடி எடுத்து வைக்க… Continue reading

  • சூப்பர் மேன்-75

    உலகின் மிக பெரிய சூப்பர் ஹீரோவாக கருதப்படும் சூப்பர்மேன், முதன்முதலில் வில்லனாகதான் உருவாக்கப்பட்டார் என்றால் நம்பமுடிகிறதா? ஆம். 1933-யில், ஒரு ஆங்கில சிறுகதையில் வில்லனாக அறிமுகமான சூப்பர் மேன் மிக வேகமாக வளர்ந்து ஹீரோவான கதையை பார்க்கும் முன்பு, அண்மையில் வெளியான மேன் ஆப் ஸ்டீல் படத்தை பற்றி பார்த்துவிடுவோம். மேன் ஆப் ஸ்டீல், சூப்பர் மேனின் சாகசங்களை மட்டும் மையப்படுத்தி எடுக்கப்பட்ட படமன்று. அனைவரும் அறிந்த சூப்பர் மேன் வரலாற்றை புதிய பாணியில் சொல்லும் படம்… Continue reading

  • ஆழம் கட்டுரைகள்

    ஆழம் இதழில் எழுதிய கட்டுரைகள். http://www.aazham.in/?author=96 நன்றி Continue reading

  • யே ஜவானி ஹே தீவானி

    இந்திய சினிமாவில் காதல் கதைகளுக்கு பஞ்சமில்லை. நாயகனும் நாயகி சந்தித்து, காதலிக்கலாமா வேண்டாமா என யோசித்து, பின் காதல் செய்வதுதான் இந்திய படங்களின் வழக்கமான திரைக்கதை. அந்தவகையில், யே ஜவானி ஹே தீவானி எந்த வகையில் மாறுபட்டிருகிறது என்று பார்க்கலாம். கபீர் (ரன்பீர் கபூர்), அவி (ஆதித்யா ராய் கபுர்), அதித்தி (கல்கி கோய்ச்லின்) ஆகிய மூவரும் நெருங்கிய நண்பர்கள். விடுமுறையை கழிக்க மணாலி செல்லலாம் என முடிவெடுகின்றனர். இவர்கள் பயணத்தில் வந்து இணைகிறார் நைனா (தீபிகா… Continue reading

  • சினிமா மேட் இன் சீனா

    உலகிலேயே அதிக படங்கள் தயாரிக்கும் நாடுகளின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கும் நாடு சீனா. அமெரிக்காவும் இந்தியாவும் முறையே முதல் மற்றும் இரண்டாம் இடத்தில் இருக்கின்றன. சீனாவில் படைப்பு சுதந்திரம் குறைவு என்பதால், சீன ரசிகர்களின் எதிர்பார்ப்பை சீன படைப்பாளிகளால் பூர்த்திசெய்ய முடியவில்லை. அதனால் சீனர்கள் ஹாலிவுட்டை ஆதரிக்கத் தொடங்கிவிட்டனர். விளைவு, சீனாவில் ஆண்டுக்கு பல நூறு படங்கள் தயாரிக்கப்பட்டாலும், சீனா அதிகம் கல்லாக் கட்டுவது ஹாலிவுட் படங்களின் மூலமே.. 1960-களில் சீனாவில் நடந்த கலாச்சார புரட்சியின்… Continue reading

  • பில்லா II-ஒரு பார்வையும், தமிழ் ரசிகர்களுக்கு சில வேண்டுகோள்களும்

    ஒரு படத்தை பற்றிய விமர்சனம் அந்த படத்தை எந்த வகையிலும் பாதிக்கப் போவதில்லை. படம் பார்ப்பவர்கள் பார்த்துக் கொண்டுதான் இருப்பார்கள். பார்க்க விரும்பாதவர்கள் எந்த காலத்திலும் பார்க்கப் போவதில்லை. ஆனால் முத்தாய்ப்பாக வரும் நல்ல படங்களை கொண்டாடவேண்டிய கடமை நமக்கிருக்கிறது. அதை சமயத்தில் பில்ட்-அப்போடு வந்து ஊரை ஏமாற்ற முயற்சிக்கும் படங்களை அலச வேண்டிய பொறுப்பும் நமக்கிருக்கிறது.கால புத்தகத்தில் படங்களின் இருப்பை பற்றிய கருத்துக்களை பதிவு செய்யவேண்டியது ரசிகர்களின் கடமை… இங்கு ரசிகர்கள் என்று குறிப்பிடப்படுபவர்கள், திரைப்படங்களின்… Continue reading

  • ஏன் இந்த கொலைவெறி- ஓர் ஆய்வு கட்டுரை

    ஏன் இந்த கொலைவெறி- ஓர் ஆய்வு கட்டுரை   எல்லா பத்திரிக்கைகளும் கொலைவெறி பற்றியே பேசுகின்றன. எம்.டிவியில் ஒளிபரப்பப்பெற்ற முதல் தமிழ் பாடல், ஒரே வாரத்தில் யுட்யுபில் (Youtube) ஒரு கோடி பார்வையாளர்களை கொண்ட பாடல் என இப்பாடலின் சாதனை பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. இதோ இப்போது இந்த கட்டுரையை எழுதும் தருவாயிலும் கூட சோனி மேக்ஸில் இந்த பாடல் ஓடிக்கொண்டிருக்கிறது. தமிழ் தெரியாத பலரும் இந்த பாடலை முணுமுணுத்துக் கொண்டிருப்பதால்,இந்த பாடலை நாம் தத்துவார்த்த ரீதியாக, சமுக… Continue reading