tamil stories

  • ஏரியை ஒட்டியிருந்த வீடு- திகில் கதை

    எங்கள் வீட்டின் பின்னாடி தான் ஹெப்சிபா அத்தையின் வீடிருந்தது. அவர்கள் வீட்டின் கொல்லைப்புறத்தில் இருந்து பார்த்தால் பரந்து விரிந்த சிட்லபாக்கம் ஏரி தெரியும். சாந்தமும் அழகும் நிறைந்த விஷயங்கள் எல்லாமும் பயமுறுத்தக் கூடிய தன்மையையும் தனக்குள் கொண்டிருப்பதை போல், அந்த ஏரி மௌனமானதொரு பயத்தை பார்ப்பவர்களுக்கு கொடுத்து கொண்டிருந்தது என்றே நினைக்கிறேன். அதனால்தான் என்னவோ எவ்வளவோ பேர் வந்து பார்த்தும் யாரும் அந்த வீட்டிற்கு குடிவரவில்லை. ஹெப்சிபா அத்தை தன் மகள் ஜெனிபர் அக்காவோடு நாகர்கோயிலில் தங்கி Continue reading

  • ராபர்ட் மெக்கீயின் ‘கதை’ -2

    *** 2 ஆர்க் பிளாட், மினி பிளாட் மற்றும் ஆன்டி பிளாட் The Writer Must Believe in What He Writes- Robert Mckee *** ஆர்க் பிளாட் (Arch Plot), மினி பிளாட் (Mini Plot) மற்றும் ஆன்டி பிளாட் (Anti Plot) என்பதே மெக்கீ சொல்லும் மூன்று பிரதான பிளாட் வகைகள். ஒரு கதையை நகர்த்துவதற்கு எண்ணற்ற சாத்தியக்கூறுகள் இருந்தாலும், அவை இந்த மூன்று பிரதான வகைகளுக்குள்தான் வரும் என்கிறார் மெக்கீ. மேலும் Continue reading

  • ரஸ்தா- சிறுகதை

    சாலை நீண்டுகொண்டே போனது. இன்னும் கொஞ்ச தூரம் என்று சொல்லியே நந்தி அனைவரையும் ஐநூறு கிலோமீட்டர் அழைத்து வந்துவிட்டான். நான்கரை நாட்களாக நடந்தும் விஜயவாடாவை தான் அடைந்திருந்தார்கள். அதே வேகத்தில் நடந்தால் புவனேஸ்வர், ஒடிஷா வழியாக பீஹாரை அடைய இரண்டு வாரங்கள் கூட ஆகலாம். அது நீண்ட வழி தான். சம்பல்புர் வழியாக சென்றால் இன்னும் துரிதமாக ஊரை அடைந்து விடலாம். ஆனால் ஒடிஷா தான் பிரச்சனை இல்லாத வழி, போலீஸ் கெடுபிடி அதிகம் இல்லை, ஆங்காங்கே Continue reading

  • நான் ஒரு கதைசொல்லி

    நான் ஒரு கதை சொல்லி ஆழ் கடல் பொங்கி உயிர்களை விழுங்கி உலகம்  எரிந்து உறவுகள் பிரிந்து நாகரிக உலகம்- பின்நோக்கி சுழன்று சமகால  மனிதன் நிர்வாண மனிதனாய்- மீண்டும் உருமாறி நரமாமிசம்  தின்று அக்றிணை உயர்திணை  அனைத்தும் அழிந்து,வெந்து போனாலும் எனக்கு மரணமில்லை ஏனெனில் நான் ஒரு கதை சொல்லி காலங்கள்  மாறலாம் காட்சிகள் மாறலாம் கதைகள் மாறிடா ! கதை சொல்லியின் புகழ் அழிந்திடா ! கதைகளே  உலகியலுக்கு அடிப்படை. கடவுளர் கதை காதலர் Continue reading

  • ஓடிப்போனக் கடவுள்

    நான் எப்படி இங்கு வந்தேன் என்பது இன்னும் விளங்கவில்லை.இது ஒரு பெரிய கோவில். மிக உயர்ந்த மதில் சுவர்கள். நிச்சயம் ஏதோ ஒரு மிகப்பெரிய அரசனால் கட்டப்பட்ட கோவிலென்பது திண்ணம். சிற்றரசர்கள் பெரியக் கோவில்களை உருவாக்கியதில்லை.பிரகாரம் முழுக்க ஏதேதோ குட்டிக் கடவுள்களின் சிதிலமடைந்த சிலைகள். அனைத்தையும் கடந்து நான் மூல ஸ்தானத்தை நோக்கி சென்றேன். மூலமே என் நோக்கு வெருச்சோடிக் கிடந்த கோவில் காணவில்லை கடவுள்; இது என்ன கோவில் என்பது விளங்கவில்லை. கற்பக்ரஹத்தில் மூலவர் சிலையை Continue reading

  • திருடன் போலிஸ்-ஒரு நிமிடக் கதை

    “அவன போடணும்டா. இனி அவன உயிரோட விட்டு வைக்க கூடாது”என்றான் அண்ணன் தன் தம்பியிடம். “ஆமா, அண்ணே! போன முறை திருடும்போதே நம்மல புடிச்சுருப்பான்.அவன் கிட்ட இருந்து தப்பிக்கிறதுக்குள்ள உசுரே போயிருச்சு”இது தம்பி. அண்ணனுக்கு வயது பன்னிரண்டு . தம்பிக்கு வயது பத்து. ஆனால் இந்த சிறு வயதிலும் அவர்களுக்கு அந்த போலிஸ்காரன் மீது வன்மம் அதிகமாயிருந்தது. அவன் வருகைக்காக சுவர் மறைவில் காத்திருந்து அவன் அருகில் வந்ததும் இருவரும் அந்த சிறு துப்பாக்கியால் சுட்டனர்.அவன் சுருண்டு Continue reading

  • அட்டு பீசு-ஒரு நிமிடக் கதை

    பேருந்திற்காக அந்த நான்கு பெண்களும் காத்துக்கொண்டிருந்த வேலையில் அங்கே வந்து சேர்ந்தான் அந்தக் குறுந்தாடிக்காரன்.  “கடவுளே! என்ன ஏன் இந்த மாதிரி அட்டு பீசுங்கள பார்க்க வைக்கிற!” என்று அவர்களை கேலி செய்ய தொடங்கினான்.சகித்துக்கொண்டிருப்பதை தவிர அந்த பெண்களால் வேறொன்றும் செய்ய இயலவில்லை.அந்த நேரம் பார்த்து அவர்களை  காப்பாற்றுவதற்க்காகவே  ஆபத்பாண்டவன்போல் அங்கு வந்து சேர்ந்தான் இன்னொருவன்.  “என்னமா! கலாய்க்கிறானா? டேய்! இதுவே உன் கூடப் பிறந்தவங்களா இருந்தா இப்படி கிண்டல் பண்ணுவியா? “  “அதான் கூடப் பொறக்கலையே”  “என்னடா தெனாவட்டா பேசுற……”  “இன்னும் Continue reading

  • கறுப்புப் பெண்

    வண்ணத் தொலைக்காட்சியிலும் கருப்பாகவே தெரிந்தாள் அந்த கறுப்புப் பெண்   அவளை பார்த்தவாறே கரமைதுனம் செய்கிறான் இளைஞன், வெள்ளை தோளை நினைத்துக்கொண்டே…   தோளில் கூடவா அந்நிய மோகம் ! உதாசீனப்படுத்திவிட்டு தொடர்கிறான்   பின்னொரு நாள்-கருப்பான தன் மனையாளை பெண்டாள்கிறான் வெள்ளை நடிகையை நினைத்துக்கொண்டே… Continue reading

  • ஒழுங்கற்ற நெறிமுறைகள்

    முன் குறிப்பு: கடந்த வருடம் இந்த கதையை முதன் முதலில் ஆங்கிலத்தில் எழுதும்போது எளிதாகவே  இருந்தது. ஆனால் தமிழ் மொழி பெயர்ப்பு அவ்வளவு எளிதாக அமைந்துவிடவில்லை. இது ஒரு முயற்சியே. இந்த கதை எந்த  கோட்பாடுகளிலும் அடங்காமல் போகும் பட்சத்தில் என்னுடைய புது முயற்சி என எடுத்துக் கொள்ளவும்.. ……………………………….. அந்த காரின் கதவுகள் வேகமாக திறந்தன. அவள் சிரித்துக்கொண்டே அந்த வெள்ளை நிறக் காரில் ஏறினாள். அவள் அணிந்திருந்த அந்த சீன ரோலெக்ஸ் கடிகாரம் 6.30  எனக் Continue reading

  • கடவுளும் ப்ளாக் டிக்கெட்டும்

    கி.பி. 2220 வெள்ளிக்கிழமை. மார்கழி மாதம் .காலை7.30 . பூலோகத்தில் ஆண்டவருக்கு பால் அபிஷேகம்  அமோகமாக நடந்துக் கொண்டிருந்தது. ‘ஆண்டவா ஆண்டவா’ என்று எழும்பிய பேரொலி, காற்றைக் கிழித்துக் கொண்டு பயணித்து வைகுண்டத்தில் உறங்கி கொண்டிருந்த ஆண்டவரின் காதில் விழ, திடுக்கிட்டு கண்விழித்தார் ஆண்டவர். அருகில் அவரது துணைவியார் சாந்தமாக உறங்கிக் கொண்டிருந்தார். இரா முழுதும் வேலை செய்து களைத்திருந்த ஆண்டவர் சோம்பல் முறித்தவாரே ஒலி வரும் திசையை நோக்கினார். ஒலி உலகின் தெற்குப் பகுதியில் அமைந்திருந்த இந்திய Continue reading