-
ஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி-1
பொதுவாக, திரைக்கதை எழுதுவது எப்படி என்று சொல்லும் புத்தகங்கள் இங்கே ஏராளம் இருக்கின்றன. ஆனால் குறிப்பிட்ட ஒரு genre-ஐ எப்படி எழுதுவது என்று பேசும் புத்தகங்கள் அதிகமில்லை. அந்த குறையை போக்கும் பொருட்டு William C Martell எழுதிய புத்தகம் தான் ‘The Secrets of Action Screenwriting’. புத்தகத்தின் தலைப்பு உணர்த்துவது போல இந்த புத்தகம், பிரத்தியேகமாக, ஆக்சன் கதைகள் எழுதுதலைப் பற்றி விலாவரியாக விவாதிக்கிறது. அதற்கு நாம் பின்பற்ற வேண்டிய சில உத்திகளையும் அடிகோடிட்டுக் காட்டுகிறது. ஆனால்,… Continue reading
-
சித்திரமலை ரகசியம்- (சிறார்) கதை
1 கி.பி. 2063. அடர்ந்த காட்டினுள்விரிந்து சென்ற நீண்ட அந்த ஒத்தையடிப் பாதையின் முன்பு வந்து நின்றனர் பேராசிரியர் ராகவும், அவரது மகன் சஞ்சையும். சஞ்சையின் மகன் ‘கே’வும், மகள் ‘பிரக்ன்யா’வும் உடன் இருந்தார்கள். அவர்கள்இரண்டு மாதங்களுக்கு முன்பு தமிழகத்திலிருந்து ராகவின் தலைமையில் உற்சாகமாக புறப்பட்டனர். அப்போது குழுவில் இருபது பேர் இருந்தனர். தங்களின் நெடுநாள் பிரச்சனைக்கு தீர்வு கண்டுவிடலாம் என்ற நம்பிக்கையோடு கிளம்பிய அந்த குழுவில் பலரும் பல காரணங்களால் வழியிலேயே பிரிந்துபோக இப்போது… Continue reading
-
என் ஆசான்- அகிரா குரோசவா
1974 ஆகஸ்ட் மாதம், என்னுடைய குருநாதர் யமா-சண் (எ) யமாமோட்டோ கஜிரோ படுத்த படுக்கையாக இருக்கிறார், அவர் நலம் பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்ற செய்தி என்னை வந்தடைந்தது. என்னுடைய படமான டெர்ஷு உஷாலாவை (Dersu Uzala) தொடங்குவதற்காக நான் சோவியத் யூனியன் செல்லவிருந்த தருணம் அது. படப்பிடிப்பு ஒருவருடத்திற்கு மேல் நடக்கும் என்பதை நான் அறிந்திருந்தேன். அந்த நேரத்தில் யமா சண் அவர்களுக்கு ஏதாவது நிகழ்ந்தால் என்னால் ஜப்பானிற்கு திரும்பி வர இயலாது என்பதை அறிந்த… Continue reading
-
யாரோ ஒருவர்
உங்கள் குழந்தையை முதன்முதலில் நீங்கள் கையில் வாங்கும் அதே நேரத்தில் தான் குழந்தை வேண்டி நிற்கும் யாரோ ஒரு பெண்ணுக்கு கரு கலைந்து போகிறது உங்கள் வீட்டு பிள்ளைகளுக்கு நீங்கள் பிரம்மாண்டமாக திருமணம் நடத்தி வைக்கும் நேரத்தில் தான் யாரோ ஒருவர் வரணை எதிர்ப்பார்த்து வறுமையில் காத்துகொண்டிருக்கிறார் உங்கள் காதல் உங்களுக்கு சலித்து போய் நீங்களாகவே பிரியும் நேரத்தில் தான் யாரோ ஒரு காதல் ஜோடி அதே காதலுக்காக வெட்டிக் கொல்லப்படுகிறார்கள் நீங்கள் முதலீட்டிற்காக மூன்றாவது வீடு… Continue reading
-
9.45- சிறுகதை
காலை 9.45 மணிக்குள் போகவில்லை என்றால் ‘ஆப்சென்ட்’ போட்டுவிடுவார்கள். நியாமான காரணத்தால் தாமதம் என்றாலும் ஏற்றுக் கொள்ளப்படாது. நான் படித்த பள்ளிகூடத்தைப் பற்றி சொல்லவில்லை. நான் வேலை செய்யும் அலுவலகத்தில் அண்மைக்காலத்தில் தோன்றிய வி(யா)தி இது. ஒன்பது நாற்பத்தைந்து என்றால் ஒன்பது நாற்பத்தைந்து தான். ஒரு நொடியும் தாமதம் ஆகக் கூடாது. முன்பெல்லாம் வருகைப் பதிவேட்டில் கையெழுத்து போட்டால் மட்டும் போதும். இப்போது ‘ஃபினக்கில்’ மென்பொருளில் லாகின் செய்ய வேண்டும். அலுவலகம் மூன்றாவது மாடியில் இருந்தது. லிப்ட்… Continue reading
-
முன்னுரை: அந்த ஆறு நாட்கள்- ஆரூர் பாஸ்கர்
நண்பர் ஆரூர் பாஸ்கரின் ‘அந்த ஆறு நாட்கள்’ குறுநாவலுக்காக எழுதிய முன்னுரையிலிருந்து… புயலுக்கு முன்… கடல் கடவுள் போசிடானின் கோபமே புயலாக, சூறாவளியாக வெளிப்படுகிறது என்ற பண்டைகால கிரேக்கர்களின் நம்பிக்கைக்கும், கடலின் மேற்பரப்பில் ஏற்படும் காற்றழுத்த தாழ்வு நிலையே புயலாக உருவெடுக்கிறது என்ற புரிதலுக்குமிடையே மனித இனம் பெரிதும் வளர்ந்துவிட்டது. மனிதன் கண்டுகொண்ட தொழிநுட்பமும் பெரிதாக வளர்ந்துவிட்டது. ஆனால் இயற்கை இயற்கையாகவே சீரிய காலம் போய், கடந்த அறைநூற்றாண்டில் மனிதனின் பேராசைகள் இயற்கையை அதிகமாகவே சீண்டி (சுரண்டி)விட்டதால்தான், இயற்கை… Continue reading
-
ஊச்சு- Giveaway
ஊச்சு நாவலை அடுத்த இரண்டு நாட்களுக்கு இங்கே இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். Have a happy and thrilling read… Click here to download Continue reading
-
கதை, திரைக்கதை- காப்பிரைட்: அவசியங்கள், வழிமுறைகள்
உலக நாடுகளோடு ஒப்பிடுகையில் அறிவுசார் சொத்துரிமை தரவரிசை பட்டியலில் இந்தியா வெகுநாட்களாகவே கடைசி பத்து இடங்களுக்குள் தான் இருக்கிறது. அறிவுசார் சொத்துரிமை என்பது காப்புரிமை, பதிப்புரிமை, வர்த்தக குறியீடு என இன்னும் பல படைப்புகளின் (கண்டுபிடிப்புகளின்) உரிமையை உள்ளடக்கியது. அதாவது படைப்புகளின் உரிமை படைத்தவர்க்கே சொந்தம் என்பதே அறிவுசார் சொத்துரிமை கொள்கை. பல ஆண்டுகளாக நாம் இதில் பின்தங்கி இருந்ததற்கான காரணம் வெறும் விழிப்புணர்வு சார்ந்தது மட்டும் அல்ல. இங்கே படைப்புரிமை கோருவதற்கான வழிமுறைகள் அவ்வளவு எளிதாக இல்லாமல்… Continue reading