aravindhskumar
-
நான்காவது பிறந்தநாள்- aravindhskumar.com
வணக்கம். இந்த தளத்திற்கு இன்று நான்காவது பிறந்தநாள் என்பதை பகிர்வதில் மகிழ்ச்சி. மனமார்ந்த நன்றிகள், வாசகர்களுக்கும் நண்பர்களுக்கும்… ‘நகுலனின் நாய் சிறுகதைத் தொகுப்பு’- பிரிண்ட் புத்தகத்தை அடுத்த சில நாட்களுக்கு ஐம்பது சதவீத கழிவில் இங்கே வாங்கலாம். ask4 என்ற discount code-ஐ பயன்படுத்தி கொள்ளுங்கள் நன்றி அரவிந்த் சச்சிதானந்தம் Continue reading
-
ஒன்றுமில்லை- கவிதை
என் வீட்டின் மேல் வட்டமிட்ட அந்த புறா முட்டையிட்டு சென்றது ஒருநாள்… முட்டையை நான் பாதுகாத்தேன் மிதமான சூட்டில்… ஒரு நாள் கண்டேன் உடைந்த முட்டை அதனருகில் ஓர் பாம்பு இன்னும் விளங்கவில்லை ! புறா முட்டையிலிருந்து எப்படி வந்தது பாம்பு ! *** நிறைந்த மூட்டையோடு வந்தான் அவன் உள்ளே என்ன என்றேன் ஒன்றுமில்லை என்றான் மூட்டையை அவிழ்த்தேன் ஆம் ஒன்றுமே இல்லை. Continue reading
-
கேம் ஆஃப் த்ரோன்ஸ் சொல்லித்தரும் திரைக்கதை
‘அரண்மனை சதி’. வரலாற்றுப் புனைவுகளுக்கு மிக எளிதாக அமையக்கூடிய ப்ளாட் இதுவாக தான் இருக்கமுடியும். பெரும்பாலான புனைவுகள் இதை வைத்துதான் உருவாகி இருக்கின்றன. ஆட்சிக்கு உரித்தான ஒருவர் எங்கோ இருக்க, ஆட்சிக்கு சம்மந்தம் இல்லாத பலரும் சிம்மாசனத்திற்காக தந்திரம் செய்து அடித்துக் கொள்வதுதான் இந்த பிளாட். கேம் ஆப் த்ரோன்ஸ் நாடகமும் இந்த வகை தான். ஆனால் இது ஒரு ஃபேண்டஸி கதை. ஒரு காலத்தில் இங்கிலாந்தின் ராஜ்ஜியத்திற்காக லான்காஸ்டர் மற்றும் யார்க்குகளுக்கிடையே நடந்த யுத்தத்தை தழுவி Continue reading
-
நகுலனின் நாய்- சிறுகதைத் தொகுப்பு
என்னுடைய முதல் சிறுகதைத் தொகுப்பு ‘நகுலனின் நாய்’ அந்தாதி பதிப்பக வெளியீடாக வந்துள்ளது என்பதை பகிர்வதில் மகிழ்கிறேன். மொத்தம் ஒன்பது சிறுகதைகள் இதில் இடம்பெற்றுள்ளன. ஈ-புத்தகமாகவும் கிடைக்கிறது. பிரிண்ட் புத்தகம் வாங்க விரும்புவோர் கீழே உள்ள Discount code-ஐ பயன்படுத்திக் கொள்ளலாம். நகுலனின் நாய்-Paperback பக்கங்கள்: 96 விலை: Rs 50 (free shipping) புத்தகத்தை வாங்க இங்கே கிளிக் செய்யவும் நகுலனின் நாய்-e-book-Pdf விலை: Rs 20 Available Format: Pdf ஈ-புத்தகத்தை வாங்க இங்கே கிளிக் Continue reading
-
அமெரிக்கன் ஹாரர் ஸ்டோரி சொல்லித்தரும் திரைக்கதை
இது ஒரு ஹாரர் ஆந்தாலஜி சீரிஸ். நான்கு சீஸன்கள். ஒவ்வொன்றிலும் வெவ்வேறு கதைகள். இதில் நிறைய பேய்கள் வருகின்றன. ஆனால் வழக்கமான பேய் கதைகளில் வருவது போல் காட்சிகள் அமானுஷ்யமாக இருக்காது. பேய்கள் மனிதர்களுக்கு மத்தியில் மனிதர்களைப் போல் நடமாடுகின்றன. சில எபிசோட்களில் சுவாரஸ்யம் குன்றினாலும், பல இடங்களில் இதன் திரைக்கதை மிக நேர்த்தியாக எழுதப்பட்டிருக்கும். நான்கு சீஸனுமே சிங்கிள் செட்டிங் கதைக்களம் கொண்டவை. ஒரு குறிப்பிட்ட இடத்தை சுற்றியே கதை பின்னப்பட்டிருக்கும். முதல் சீசன் முழுக்க Continue reading
-
ஸ்பார்ட்டகஸ் சொல்லித்தரும் திரைக்கதை
ஒரே திரைக்கதையில் ஏராளமான கிளைக்கதைகள் சொல்ல முற்படும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பதை ஸ்பார்ட்டகஸ் தொடரிலிருந்து புரிந்துக் கொள்ளலாம். Continue reading
-
நேர்காணல்
இந்தியா நியூஸ் ரீல் தளத்தில் என்னுடைய நேர்காணல் வெளியாகி உள்ளது. இணைப்பு இங்கே. http://www.indianewsreel.com/Education/Features/20151513071539/Multi-faceted-Aravindh.aspx Continue reading
-
இலவச ஈ-புத்தகங்களும் கூகிள் ப்ளேவும்
கூகிள் ப்ளே ஸ்டோரில் பல புத்தகங்கள் இலவசமாக கிடைக்கின்றன. முதன்முதலில் புத்தகத்தை டவுன்லோட் செய்ய முற்படும் போது, கிரெடிட் அல்லது டெபிட் கார்ட் விவரங்களை தர வேண்டும். முதல் முறை மட்டும் நம் வங்கிக்கணக்கில் இருந்து ஐம்பது ரூபாய் பிடித்துக்கொள்வார்கள். ஓரிரு நாட்களில் அந்த பணம் திருப்பி தரப்பட்டுவிடும். இது நாம் அளித்த விவரங்கள் உண்மையானதா என்று சரி பார்க்க. கூகிள், பேபால் உட்பட பல தளங்களும் இப்படிதான் இயங்குகின்றன. இது அவர்களுடைய பாலிசி. மேலும் நாம் Continue reading
-
தட்பம் தவிர்- free e-book
தட்பம் தவிர் க்ரைம் நாவலை இலவச ஈ-புத்தகமாக இங்கே பகிர்வதில் மகிழ்கிறேன். இந்த நாவல் முதன்முதலில் ஆன்லைனில் Self Publish செய்யப்பட்டபோது அதை வாங்கிய அனைவருக்கும் நன்றி… கதைச் சுருக்கம்: சென்னையில், ஒரு பிரபலமான அரசு பொறியியல் கல்லூரியில் பேராசிரியர் ஒருவர் கொடூரமான முறையில் கொல்லப்படுகிறார். இன்ஸ்பெக்டரான கதாநாயகன் விசாரணையில் ஈடுபடுகிறான். போலீசின் கவனம் முழுக்க கல்லூரியின் மீதிருக்க, கோயம்புத்தூரில் இன்னொரு கொலை நடக்கிறது. கொலைகாரன் வேண்டுமென்றே இன்ஸ்பெக்டருக்கு துப்பு கொடுத்துவிட்டு செல்ல, முதல் கொலை நடந்த கல்லூரியில், மாணவனொருவன் Continue reading