தட்பம் தவிர்- free e-book


தட்பம் தவிர் க்ரைம் நாவலை இலவச ஈ-புத்தகமாக இங்கே பகிர்வதில் மகிழ்கிறேன். இந்த நாவல் முதன்முதலில் ஆன்லைனில் Self Publish செய்யப்பட்டபோது அதை வாங்கிய அனைவருக்கும் நன்றி…

கதைச் சுருக்கம்:

சென்னையில், ஒரு பிரபலமான அரசு பொறியியல் கல்லூரியில் பேராசிரியர் ஒருவர் கொடூரமான முறையில் கொல்லப்படுகிறார். இன்ஸ்பெக்டரான கதாநாயகன் விசாரணையில் ஈடுபடுகிறான். போலீசின் கவனம் முழுக்க கல்லூரியின் மீதிருக்க, கோயம்புத்தூரில் இன்னொரு கொலை நடக்கிறது. கொலைகாரன் வேண்டுமென்றே இன்ஸ்பெக்டருக்கு துப்பு கொடுத்துவிட்டு செல்ல, முதல் கொலை நடந்த கல்லூரியில், மாணவனொருவன் தற்கொலைக்கு முயல்கிறான். அவன்தான் முதல் கொலையின் விட்னெஸ். கல்லூரி நிர்வாகத்தால், தான் மனரீதியான சித்ரவதைக்கு ஆளானதால் தற்கொலைக்கு முயன்றதாக மாணவன் சொல்ல, இன்ஸ்பெக்டருக்கு உண்மைகள் புரியத் தொடங்குகின்றன. கல்லூரியில் ரகசிய விசாரணை மேற்கொள்கிறார். பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் எந்த அளவிற்கு கொடுமைபடுத்தப்படுகிறார்கள் என்பதை அறிந்து திடுக்கிடுகிறார். விசாரணையில், கல்லூரியின் முன்னாள் மாணவன்தான் கொலைகாரன் என்று தெரியவருகிறது. மனநிலை பாதிக்கப்பட்ட அவனை கைது செய்கிறார் இன்ஸ்பெக்டர். ஆனால் கொலைகள் தொடர்கின்றன. பின் ஏராளமான திருப்பங்கள் நிகழ்கின்றன. உண்மையான கொலைகாரன் யார்? தப்பு செய்தவர்கள் தண்டிக்கப் படுவார்களா? மிகப்பெரிய மனோதத்துவ விளையாட்டில் சிக்கிக்கொண்ட இன்ஸ்பெக்டர் பிழைப்பாரா?


To download in Google Play Store  click here

To buy PDF Click here

நாவலை பற்றிய கருத்துக்களை இங்கே படிக்கலாம்

Advertisements

4 thoughts on “தட்பம் தவிர்- free e-book

 1. நீங்கள் குறிப்பிட்டபடி ரூ 50 பிடித்துவிட்டு, 15 நிமிடத்தில் திரும்பக் கொடுத்துவிட்டார்கள். ஆனாலும் கூகுள் டேக் அவே மூலம் டவுன்லோட் செய்தால் எச்.டி.எம்.எல் வடிவில்தான் கிடைக்கிறது (ஆன்லைனில் படிப்பதில் பிரச்னை இல்லை). இ-பப் வடிவில் தரவிறக்க வழியுண்டா?

  Like

  • கூகிள் ப்ளேவில் நான் pdf பார்மாட்டில் upload செய்வதால் epub டவுன்லோட் சாத்தியமில்லை. PDF டவுன்லோட் சாத்தியம். ஆனால் எந்த பார்மாட்டில் டவுன்லோட் செய்தாலும் அது ACSM பைலாக தான் டவுன்லோட் ஆகும். கணினியில் அதை படிக்க Adobe digital edition தேவைப்படும். ஆனால் android சாதனங்களில் டவுன்லோட் செய்து நேரடியாக படித்திட முடியும்.

   Like

   • நன்றி! விண்டோஸ் டேப்லட் என்ற அதிசயப் பிறவியை வைத்திருக்கிறேன். இதல் கூகுள் பிளே ஸ்டோர் கிடையாது! எனினும் அடபி டிஜிட்டல் எடிஷன்ஸ் நிறுவ முடியும். பிடிஎஃப் படிப்பதில் தடங்கல் இல்லை என்றாலும் கொள்ள்ளவு சாதாரணமாக அதிகம் இருக்கும் என்பதால் கேட்டேன். மீண்டும் நன்றி.

    Like

Comments are closed.