தமிழ் சினிமா
-
ராபர்ட் மெக்கீயின்‘கதை’ -3
3 க்ளீச்சே (Cliche) Creativity means creative choices of inclusion and exclusion- Robert Mckee ஒரு சுவாரஸ்யமற்ற திரைக்கதையை எழுதிவிட வேண்டும் என்ற கொள்கையோடு யாரும் திரைக்கதையை எழுதத் தொடங்கமாட்டார்கள். மிகச் சாதரணமான, எளிமையானதொரு கதையாக இருந்தாலும் எல்லோரும் விரும்பும் விதத்தில் திரைக்கதையை அமைத்துவிட வேண்டும் என்பதே ஒவ்வொரு திரைக்கதையாசிரியரின் எண்ணமாக இருக்கும். அப்படி இருந்தும் ஏன் பல படங்கள் சுவாரஸ்யமற்று தோன்றுகின்றன! ‘சுவாரஸ்யம்’ என்றதுமே பெரும் மாயங்களை காட்சிகளில் நிகழ்த்திவிட வேண்டும் என்று Continue reading
-
ஓகே கண்மணி
மணிரத்னம் படங்களுக்கே உரித்தான டிரைன், மழை, கண்ணாடி, குடை, ஃபிரேம் இன் ஃபிரேம் உத்தி இத்தியாதி இத்தியாதிகளுக்கு குறைவில்லாமல் வந்திருக்கும் அழகான படமிது. மணிரத்னத்தின் மேக்கிங்கை விட்டுவிடுங்கள். மேக்கிங் தாண்டிய விஷயம் இந்தப் படத்தில் ஏராளம். Continue reading
-
தொடரும் சினிமா (free e-book)
கடந்த ஓர் ஆண்டில் பல்வேறு நேரங்களில் பல்வேறு களங்களில் வெளியான திரைக் கட்டுரைகளின் தொகுப்பு இது. தொடரும் சினிமா – சினிமா கட்டுரைகள்- அரவிந்த் சச்சிதானந்தம் Cover Photography© Premkumar Sachidanandam கூகிள் ப்ளே ஸ்டோரில் free download செய்ய இங்கே கிளிக் செய்யவும் நேரடியாக PDF download செய்ய இங்கே கிளிக் செய்யவும் Continue reading
-
யாமிருக்க பயமே
ஒரு பேய் படமெனில் அது நம்மை பயமுறுத்த வேண்டும். சரி. அதுவே நம்மை வயிறுகுழுங்க சிரிக்கவும் வைத்தால்? அதுவே ஹாரர் காமெடி எனப்படும் genre. Scary movie series, ஹிந்தியில் கடந்த ஆண்டு வெளியான Go Goa Gone போன்ற படங்களை அதற்கு உதாரணமாக சொல்லலாம். நம்மூரில் ஹாரர் படங்களே குறைவு. இதில் எங்கிருந்து ஹாரர் காமெடி எடுப்பது ! ஆனால் அப்படி ஒரு படத்தை இப்போது எடுத்திருக்கிறார்கள். யாமிருக்க பயமே ஒரு ஹாரர் காமெடி படம். ஆரம்ப Continue reading
-
கடல்
உதிரிப்பூக்கள், cape Fear, கடல்- இந்த மூன்று படத்த்திருக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. கதையில் அல்ல…. உதிரிப்பூக்கள் ‘விஜயன்’, Cape fear ‘Robert De Niro’ , கடல் ‘அர்ஜுன்’-இந்த மூன்று கதாப்பாதிரமும் ஒரே மாதிரியாக வடிக்கப்பட்டவை. இறுதி வரை தான் பிடித்த பிடியில் உறுதியாக இருக்கும் கதாப்பாத்திரங்கள் இவை மூன்றும். கெட்டவனாக இருப்பதே எளிது என எண்ணிக் கொண்டு மற்றவர்களை கேலியாக பார்க்கும் கதாபாத்திரங்கள் இவை… உதிரிப்பூகளில் விஜயன் தனித்து தெரிந்ததை போல் இதில் அர்ஜுன் Continue reading
-
மாற்றான்
சில படங்கள் முதல் காட்சியிலிருந்தே மெதுவாக நகர்ந்து, இது நல்லப் படம்தானா என்பன போன்ற சந்தேங்களை ஏற்படுத்தி, இறுதியில் சிகரம் வைத்தாற்போல் அருமையாக நிறைவுபெற்று, படமென்றால் இதுதான் படமென்று நம்மை சொல்லச் செய்து, நம்மை எழுந்து நின்று கைத்தட்ட வைக்கும். சில படங்கள் தொடக்கம் முதலே நல்லப் படம் போல காட்சியளித்து, தனக்கே உரித்தான ஜிகுணா வேலைகளையெல்லாம் செய்துக் கொண்டு, இறுதியில் ‘இதெல்லாம் ஒரு படமா’ என்று எண்ண வைக்கும். ‘மாற்றான்’ இதில் இரண்டாவது வகை. ஓட்டிப் Continue reading
-
முகமூடி
உலகில் எத்தனையோ சூப்பர் ஹீரோ படங்கள் எடுக்கப் பட்டுவிட்டன. எல்லா சூப்பர் ஹீரோக்களும் ஏதோ ஒரு வகையில் extraordinary power கொண்டிருப்பார்கள். அவர்கள் extraordinary league-ஐ சார்ந்தவர்களாகவோ, வேற்று கிரகத்தை சார்ந்தவர்களாகவோ, நிழல் உலகத்தை சார்ந்தவர்களாகவோ, மியூட்டண்ட்களாகவோ (mutants) இருப்பார்கள்.Iron Man மட்டும் சற்று வித்யாசமானவர். ஆனால் மிக சாதாரண மனிதன் ஒருவன் எந்த ஒரு அமானுஷ்ய சக்தியின் உதவியின்றி , தன் சொந்த உந்துதலின் அடிப்படையில் மிகவும் விளையாட்டாக சூப்பர் ஹீரோவாக உருவெடுப்பதுபோன்ற கதையை இதுவரை Continue reading
-
பில்லா II-ஒரு பார்வையும், தமிழ் ரசிகர்களுக்கு சில வேண்டுகோள்களும்
ஒரு படத்தை பற்றிய விமர்சனம் அந்த படத்தை எந்த வகையிலும் பாதிக்கப் போவதில்லை. படம் பார்ப்பவர்கள் பார்த்துக் கொண்டுதான் இருப்பார்கள். பார்க்க விரும்பாதவர்கள் எந்த காலத்திலும் பார்க்கப் போவதில்லை. ஆனால் முத்தாய்ப்பாக வரும் நல்ல படங்களை கொண்டாடவேண்டிய கடமை நமக்கிருக்கிறது. அதை சமயத்தில் பில்ட்-அப்போடு வந்து ஊரை ஏமாற்ற முயற்சிக்கும் படங்களை அலச வேண்டிய பொறுப்பும் நமக்கிருக்கிறது.கால புத்தகத்தில் படங்களின் இருப்பை பற்றிய கருத்துக்களை பதிவு செய்யவேண்டியது ரசிகர்களின் கடமை… இங்கு ரசிகர்கள் என்று குறிப்பிடப்படுபவர்கள், திரைப்படங்களின் Continue reading