இந்திய சினிமா
-
ராபர்ட் மெக்கீயின்‘கதை’ -3
3 க்ளீச்சே (Cliche) Creativity means creative choices of inclusion and exclusion- Robert Mckee ஒரு சுவாரஸ்யமற்ற திரைக்கதையை எழுதிவிட வேண்டும் என்ற கொள்கையோடு யாரும் திரைக்கதையை எழுதத் தொடங்கமாட்டார்கள். மிகச் சாதரணமான, எளிமையானதொரு கதையாக இருந்தாலும் எல்லோரும் விரும்பும் விதத்தில் திரைக்கதையை அமைத்துவிட வேண்டும் என்பதே ஒவ்வொரு திரைக்கதையாசிரியரின் எண்ணமாக இருக்கும். அப்படி இருந்தும் ஏன் பல படங்கள் சுவாரஸ்யமற்று தோன்றுகின்றன! ‘சுவாரஸ்யம்’ என்றதுமே பெரும் மாயங்களை காட்சிகளில் நிகழ்த்திவிட வேண்டும் என்று Continue reading
-
தொடரும் சினிமா (free e-book)
கடந்த ஓர் ஆண்டில் பல்வேறு நேரங்களில் பல்வேறு களங்களில் வெளியான திரைக் கட்டுரைகளின் தொகுப்பு இது. தொடரும் சினிமா – சினிமா கட்டுரைகள்- அரவிந்த் சச்சிதானந்தம் Cover Photography© Premkumar Sachidanandam கூகிள் ப்ளே ஸ்டோரில் free download செய்ய இங்கே கிளிக் செய்யவும் நேரடியாக PDF download செய்ய இங்கே கிளிக் செய்யவும் Continue reading
-
திரிஷ்யம்
கடந்த ஆண்டு இறுதியில் இந்தியாவைத் திரும்பிப் பார்க்க வைத்த இரண்டு த்ரில்லர் படங்களில் மலையாளப் படமான திரிஷ்யமும் ஒன்று. இன்னொன்று கன்னடப் படமான லூசியா. இரண்டு படங்களையுமே இப்போது தமிழில் எடுக்கிறார்கள். லூசியாவைப் பற்றி பின் விவாதிப்போம்..திரிஷ்யமின் கதை இதுதான். ஜார்ஜ் குட்டி (மோகன்லால்) ஒரு சிறு கிராமத்தில் வசிக்கும் கேபில் டிவி ஆப்பரேட்டர். படிப்பறிவு மிகக் குறைவு. ஆனால் அனுபவ அறிவு மிகமிக அதிகம். பல மொழித் திரைப்படங்களைப் பார்த்தே தன் அறிவை வளர்த்துக் கொள்கிறான். Continue reading
-
யாமிருக்க பயமே
ஒரு பேய் படமெனில் அது நம்மை பயமுறுத்த வேண்டும். சரி. அதுவே நம்மை வயிறுகுழுங்க சிரிக்கவும் வைத்தால்? அதுவே ஹாரர் காமெடி எனப்படும் genre. Scary movie series, ஹிந்தியில் கடந்த ஆண்டு வெளியான Go Goa Gone போன்ற படங்களை அதற்கு உதாரணமாக சொல்லலாம். நம்மூரில் ஹாரர் படங்களே குறைவு. இதில் எங்கிருந்து ஹாரர் காமெடி எடுப்பது ! ஆனால் அப்படி ஒரு படத்தை இப்போது எடுத்திருக்கிறார்கள். யாமிருக்க பயமே ஒரு ஹாரர் காமெடி படம். ஆரம்ப Continue reading
-
தி குட் ரோடும் ஆஸ்காரும்
1956-ஆம் ஆண்டு தொடங்கி ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்க படங்கள் அல்லாத மற்ற படங்களை அங்கீகரிக்கும் வகையில் சிறந்த வெளிநாட்டு திரைப்படம் என்றொரு விருதை ஆஸ்கார் குழுவினர் வழங்கி வருகின்றனர். அந்த விருதிற்காக ஒவ்வொரு நாடும் போட்டி போட்டுக் கொண்டு ஆஸ்காருக்கு படங்களை அனுப்புவது வழக்கம். இந்த ஆண்டு அதிக சர்ச்சைகளுக்கும் பாராட்டுகளுக்குமிடையே “தி குட் ரோட்” என்கிற குஜராத்தி திரைப்படத்தை ஆஸ்காருக்கு பரிந்துரை செய்திருக்கிறது இந்திய திரைப்பட கூட்டமைப்பு. தொண்ணூறுகளின் தொடக்கத்திலேயே குஜராத் திரைத்துறை அழிவை சந்திக்க Continue reading
-
யே ஜவானி ஹே தீவானி
இந்திய சினிமாவில் காதல் கதைகளுக்கு பஞ்சமில்லை. நாயகனும் நாயகி சந்தித்து, காதலிக்கலாமா வேண்டாமா என யோசித்து, பின் காதல் செய்வதுதான் இந்திய படங்களின் வழக்கமான திரைக்கதை. அந்தவகையில், யே ஜவானி ஹே தீவானி எந்த வகையில் மாறுபட்டிருகிறது என்று பார்க்கலாம். கபீர் (ரன்பீர் கபூர்), அவி (ஆதித்யா ராய் கபுர்), அதித்தி (கல்கி கோய்ச்லின்) ஆகிய மூவரும் நெருங்கிய நண்பர்கள். விடுமுறையை கழிக்க மணாலி செல்லலாம் என முடிவெடுகின்றனர். இவர்கள் பயணத்தில் வந்து இணைகிறார் நைனா (தீபிகா Continue reading
-
கடல்
உதிரிப்பூக்கள், cape Fear, கடல்- இந்த மூன்று படத்த்திருக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. கதையில் அல்ல…. உதிரிப்பூக்கள் ‘விஜயன்’, Cape fear ‘Robert De Niro’ , கடல் ‘அர்ஜுன்’-இந்த மூன்று கதாப்பாதிரமும் ஒரே மாதிரியாக வடிக்கப்பட்டவை. இறுதி வரை தான் பிடித்த பிடியில் உறுதியாக இருக்கும் கதாப்பாத்திரங்கள் இவை மூன்றும். கெட்டவனாக இருப்பதே எளிது என எண்ணிக் கொண்டு மற்றவர்களை கேலியாக பார்க்கும் கதாபாத்திரங்கள் இவை… உதிரிப்பூகளில் விஜயன் தனித்து தெரிந்ததை போல் இதில் அர்ஜுன் Continue reading
-
பர்ஃபி
எதிர்பார்ப்புகள் ஏமாற்றமளிக்கும் என்பதற்கிணங்க, மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வந்த பல திரைப்படங்கள் தோல்வியை தழுவியது நமக்கு நினைவிருக்கலாம். ஆனால் சில படங்கள் மட்டுமே எதிர்பார்த்ததைவிட பல மடங்கு சிறந்ததாக அமைந்து கால புத்தகத்தில் தனக்கென்று ஒரு இடத்தை நிரந்தரமாக பிடித்துக் கொள்ளும்.அவ்வாறான ஒரு படமே ‘பர்ஃபி’. இந்த படத்தின் ட்ரைலரே பல வகையான எதிர்பார்ப்புகளை உருவாக்கியது. பாலிவுட்டின் முன்னணி கதாநாயகிகள் எல்லாம் கவர்ச்சி பாதையை தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டிருக்க, கவர்ச்சியாக நடித்துக் கொண்டிருந்த பிரியங்கா சோப்ரா மனநலம் குன்றிய Continue reading
-
மாற்றான்
சில படங்கள் முதல் காட்சியிலிருந்தே மெதுவாக நகர்ந்து, இது நல்லப் படம்தானா என்பன போன்ற சந்தேங்களை ஏற்படுத்தி, இறுதியில் சிகரம் வைத்தாற்போல் அருமையாக நிறைவுபெற்று, படமென்றால் இதுதான் படமென்று நம்மை சொல்லச் செய்து, நம்மை எழுந்து நின்று கைத்தட்ட வைக்கும். சில படங்கள் தொடக்கம் முதலே நல்லப் படம் போல காட்சியளித்து, தனக்கே உரித்தான ஜிகுணா வேலைகளையெல்லாம் செய்துக் கொண்டு, இறுதியில் ‘இதெல்லாம் ஒரு படமா’ என்று எண்ண வைக்கும். ‘மாற்றான்’ இதில் இரண்டாவது வகை. ஓட்டிப் Continue reading