அரவிந்த் சச்சிதானந்தம்
-
ஊச்சு- ஹாரர் துப்பறியும் நாவல்
என்னுடைய இரண்டாவது நாவல் ‘ஊச்சு (The Fear)’ அமேசான் தளத்தில் ஈ-புத்தகமாக வெளியாகி இருக்கிறது என்பதை பகிர்வதில் மகிழ்கிறேன். கதைச் சுருக்கம் ஜாஸ்மின், நகுல், சுமித் மற்றும் மனிஷ், நால்வரும் நெருங்கிய நண்பர்கள். ஆவணப் படம் எடுப்பதற்காக மர்மங்கள் நிறைந்த மேல்பாறை நோக்கி பயணப்படுகிறார்கள். அந்த காட்டின் அமானுஸ்யத்தை அவர்கள் முழுவதுமாக உணர்ந்துகொள்வதற்குள், ஒவ்வொருவராக காணாமல் போகிறார்கள். இன்ஸ்பெக்டர் அர்ஜுன் அவர்களைத் தேடி சென்னையிலிருந்து புறப்படுகிறார். ஒருபுறம், நண்பர்கள் தொலைந்து போனதைப் பற்றி ஊரில் ஒவ்வொருவரும் ஒரு… Continue reading
-
The Writer’s Journey- Christopher Vogler – சினிமா புத்தகங்கள்- 4
உலகம் முழுக்க தொன்று தொட்டு சொல்லப்பட்டுவரும் தொன்மங்கள், புராணங்கள், பழங்கதைகள் எல்லாவற்றிலும் ஒரு ஒற்றைத் தன்மை இருப்பதாக சொல்கிறார் அறிஞர் ஜோசப் கேம்பல். இதை அவர் ‘Monomyth’ என்கிறார். எல்லாக் கதைகளும் அடிப்படையில் ஒரு ஹீரோவின் பயணமாக இருப்பதால் தான் அந்த ஒற்றைத் தன்மை வெளிப்படுகிறது என்பது அவரது கூற்று. ‘Hero with thousand faces’ என்ற புத்தகத்தில் அவர் விவரித்திருக்கும் இந்த கூற்று ஒரு முக்கியமான திரைக்கதை உத்தி என்று சொல்கிறார் திரைக்கதையாசிரியர் கிறிஸ்டோபர் வாக்லர்.… Continue reading
-
நண்பனின் கடிதங்கள்- நெடுங்கதை
அதே தாம்பரம் பீச் ரயில், கேண்டீன் அருகே வந்து நிற்கும் அதே பெட்டி, தம்பி அக்காக்கு காசு கொடு என்று கேட்கும் அதே திருநங்கைகள். ‘பாஸ் கொஞ்சம் நகுந்து உட்காருங்களேன்’. ‘இறங்கி ஏறு. இறங்கி ஏறுங்கப்பா’ ‘சார் மேஜிக் புக் சார் மேஜிக் புக். இருபது ரூவாய் தான்’ ‘நான் பாடும் பாடல் நலமாக வேண்டும்’ ‘தயவு செய்து பயணிகள் வண்டி நடை மேடையில் நின்ற பின்பு இறங்கவும்’ வழக்கமான இத்தியாதிகளுக்கு மத்தியில் அந்த… Continue reading
-
அவன் பன்றியாக மாறிக்கொண்டிருக்கிறான்-சிறுகதை
“பன்றிகளுடன் சண்டைப் போட்டால் பன்றியாக மாறிவிடுவாய்” இப்படியாக பாபா சொன்னதாக ஆசிஷ் மிஸ்ரா என்னிடம் ஒருமுறை சொன்னபோது நான் அதைப் பொருட்படுத்தவில்லை. பாபா பொருட்படுத்தக் கூடிய ஆசாமியாக எனக்கு படவில்லை. எப்போது பார்த்தாலும், காப்கா என்றோ காம்யூ என்றோ பேசும் அவனை பொருட்படுத்தாமல் இருப்பதே நல்லது. நான், பாபா, மிஸ்ரா மூவரும் ஒரே வங்கியில் ஐந்து வருடங்களுக்கு முன்பு வேலைக்குச் சேர்ந்தோம். அங்குதான் மூவரும் முதன்முதலில் சந்தித்துக் கொண்டோம். இரண்டு வருடங்களிலேயே பாபா வேலையைவிட்டு முழு நேர… Continue reading
-
கொஞ்சம் திரைக்கதை- e-book
நல்ல திரைக்கதைகளை கொண்ட சில அமெரிக்கத் தொலைக்காட்சி தொடர்களின் திரைக்கதை சிறப்பசங்களை பற்றி பேசும் இந்த புத்தகம், வெவ்வேறு காலகட்டங்களில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு. click for kindle version Continue reading
-
ஓரிரு
என்னிடம் காசில்லை இதுவா கவிதை என்ன செய்ய செத்துமடி எவ்வளவு செலவாகும் இதுதான் கவிதை விருது வேண்டும் எவ்வளவு கொடுப்பாய் *** புத்தகம் பதிப்பிக்கனும் எழுத்தாளர் ரா.கு. படிச்சிருக்கியா? இதுவரை இல்ல அவரையே இன்னும் படிக்கலையா? நீயெல்லாம் எப்படி எழுதுவ? கையில தான். *** தம்பி என்ன வேலை பண்ணுது? கதை எழுதுறேனுங்க அது சரி, பொழப்புக்கு என்ன பண்றீங்க? கதை எழுதுறதுதாங்க என் வேலை பொழப்பு எல்லாம் மாசம் கைக்கு என்ன வரும் வலி வரும்.… Continue reading
-
நகுலனின் நாய்- சிறுகதைத் தொகுப்பு
என்னுடைய முதல் சிறுகதைத் தொகுப்பு ‘நகுலனின் நாய்’ அந்தாதி பதிப்பக வெளியீடாக வந்துள்ளது என்பதை பகிர்வதில் மகிழ்கிறேன். மொத்தம் ஒன்பது சிறுகதைகள் இதில் இடம்பெற்றுள்ளன. ஈ-புத்தகமாகவும் கிடைக்கிறது. பிரிண்ட் புத்தகம் வாங்க விரும்புவோர் கீழே உள்ள Discount code-ஐ பயன்படுத்திக் கொள்ளலாம். நகுலனின் நாய்-Paperback பக்கங்கள்: 96 விலை: Rs 50 (free shipping) புத்தகத்தை வாங்க இங்கே கிளிக் செய்யவும் நகுலனின் நாய்-e-book-Pdf விலை: Rs 20 Available Format: Pdf ஈ-புத்தகத்தை வாங்க இங்கே கிளிக்… Continue reading
-
நகுலனின் நாய்-Goodreads Book Giveaway
என்னுடைய முதல் சிறுகதைத் தொகுப்பு நகுலனின் நாய் விரைவில் வெளியாக இருக்கிறது. அதன் இரண்டு பிரதிகளை இலவசமாக தர இருக்கிறோம். விருப்பமுள்ளவர்கள் இந்த லிங்கில் தங்கள் விவரங்களை பதிவு செய்துகொள்ளலாம். Goodreads தளத்தால் தேர்ந்தெடுக்கப் படும் இருவருக்கு புத்தகம் இலவசமாக அனுப்பி வைக்கப்படும். நன்றி. Continue reading