tamil short stories
-
அடி- சிறுகதை
‘டப் டப்’ என்ற சப்தம்தான் முதலில் கேட்டது. பின் ‘பளார் பளார்’ என்ற சப்தம். சப்தம் வரும் திசையில் மனித தலைகள் மட்டுமே தெரிந்தது. எனக்கு நான்கு புறமுமே மனித தலைகள் தான். எள்ளுப் போட்டா எள்ளு எடுக்க முடியாது என்று எங்கள் ஊர் பக்கம் சொல்வார்கள். அந்த அளவிற்கு கூட்டம். தினமும் இந்த நிலை தான். ஒன்றரை நிமிடங்களில் கடந்துவிடக் கூடிய அந்த நடை மேம்பாலத்தை, ஊர்ந்து கடக்க பத்து நிமிடங்கள் ஆகின்றன. திருப்பதி பெருமாள் Continue reading
-
அவள்- சிறுகதை
அன்று கோவிந்தசாமி வரவில்லை. அவர் எங்கள் தெருவுக்கு வந்த இந்த ஒரு வருடத்தில் அன்றுதான் அவர் முதன்முதலில் வரவில்லை. அவருடன் வேலைக்கு வரும் காக்கையன் வராமல் போனாலும், கோவிந்தசாமி வந்துவிடுவார். காலை நான் வாசலில் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருக்கும் போது “அம்மா குப்பை” என்று ஒரு குரல் கேட்கும்போதே சொல்லிவிடலாம் மணி சரியாக ஏழு என்று. சிலநாட்கள் நான் வாசலில் இல்லாமல் உள்ளே வேலையாக இருந்தால், “சார்” என்று சன்னமாக ஒரே ஒரு குரல் மட்டும் Continue reading
-
பாலாவிற்காக… – சிறுகதை
ஆனால் பாலா தூய்மையான கடல்காற்றை போல் இருந்தாள். அவளிடம் கட்டுப்பாடு இல்லை. பேசிக்கொண்டே இருந்தாள் Continue reading
-
நண்பர்களற்றவனின் கதை- சிறுகதை

எனக்கு நண்பர்கள் இல்லை என்று சொன்னால் நீங்கள் நம்ப மறுக்கலாம். அப்படியே நம்பினாலும் நண்பர்களின்றி வாழ்பவனின் வாழ்க்கையை தெரிந்துக் கொள்வதில் என்ன சுவாரஸ்யம் இருந்துவிடப் போகிறது என்று எண்ணலாம். உண்மையில், உலக வாழ்கையே சுவரஸ்யமற்றது தான். சுவரஸ்யமென்பது வாழ்கையினுள் நாம் வழிய திணித்துக் கொள்ளும் பொய். அதனால் என் வாழ்க்கை சுவாரஸ்யமற்று போனதைப் பற்றி நான் அலட்டிக் கொள்வதில்லை. ஆனால் சிலபல நண்பர்களோடு திரிந்த நான் இப்படி நண்பர்களற்றுப் போனதை எண்ணும் போது ஆச்சர்யமாக இருக்கிறது. பத்து Continue reading
-
சுழற்சி- சிறுகதை
இன்னும் ஆறுமாதங்கள் தான் வீட்டில் அவகாசம் கொடுத்திருக்கிறார்கள். அதற்குள் எதுவும் நடக்காமல் போனால், அவன் மீண்டும் ஏதாவது வேலைக்கு செல்ல வேண்டும். வருங்காலம் அப்போது தான் பிரகாசமாக இருக்கும் என்றுஅப்பா சொல்கிறார். அவர் சொல்வதும் உண்மைதான் என்று எண்ணினான். அவன் வேலையைவிட்டு வந்து ஒன்றரை வருடங்கள் ஒடிவிட்டது. இன்னும் சினிமாவில் எதையும் சாதித்ததாக ஞாபகமில்லை. ஒரு படத்தில் ஒரே ஒரு நாள் மட்டும் உதவி இயக்குனராக வேலை செய்துவிட்டு திரும்பிவிட்டான். அதுவும் பீல்ட் க்ளியர் என்று கத்துவது Continue reading
-
ஆவி எழுத்தாளன் (எ) தமிழ் சினிமா கதாசிரியன்- சிறுகதை
‘ஆவி எழுத்தாளன்’ என்றதும் அமானுஷ்ய சக்திகளைப் பற்றி எழுதி மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிப்பவன் என்றுதான் பலரும் நினைக்கின்றனர். பிளாட்பாரக் கடைகளில் கிடைக்கும் ‘அமானுஷ்ய உலகம்’ புத்தகத்தை எழுதுபவன் சத்தியமாக நான் இல்லை. பதினைந்து ரூபாய் கொடுத்து அந்தப் புத்தகத்தை நானும் வாங்கிப் படித்திருக்கிறேன். ‘முப்பது நாட்களில் ஆங்கிலம் கற்பது எப்படி’ என்பது போல ‘முப்பது நாட்களில் சூனியம் வைப்பது எப்படி’ என்று அந்தப் புத்தகத்தில் நிறைய இருக்கும். வெள்ளைச்சட்டை போட்ட ஒரு கருப்பு உருவத்தின் படத்தைப் Continue reading
-
நிகழ்தகவுகள் – சிறுகதை
உடல் களைத்திருந்தது. எங்காவது சிறிது நேரம் அமர்ந்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது. இன்னும் சிறிது தூரம் நடந்தால் பூங்காவையே அடைந்துவிடலாம் என்பதால் முயன்று நடந்தான். சாலை ஓரமாக ஒரு கிழவர் பல வெள்ளை சட்டைகளை அடுக்கி வைத்து வியாபாரம் செய்துக் கொண்டிருந்தார். அந்த பக்கம் வரும் போதெல்லாம் அவரை பார்த்திருக்கிறான். அவரிடம் யாரும் சட்டை வாங்கி அவன் பார்த்ததில்லை. அவருக்கு என்ன வருமானம் வரும் என்ற கேள்வி மட்டும் அவரை பார்க்கும்போதெல்லாம் மனதில் எழும். எப்படி Continue reading
-
தாத்தாவின் கதை-சிறுகதை
பள்ளிக்கூட மணி அடிப்பதற்கு முன்பே, தாத்தாவின் வருகையை எதிர்பார்த்து வாசலை பார்க்கத் தொடங்கிவிடுவது வழக்கம். கேட்டை கடந்து வெளியே வரும்போது, இரண்டு பொட்டலங்களுடன் தாத்தா காத்திருப்பார். எப்போது வந்திருப்பார் என்று நாங்கள் கேட்டதே இல்லை. ஆனால் எல்லா நாட்களிலும் தாத்தா எங்களுக்கு முன் வந்து காத்திருப்பார். தினமும் காலை வீட்டிலிருந்து பள்ளியில் எம்.ஐ.டியில் டிராப் செய்வது அப்பாவின் வேலை என்றால், பள்ளியிலிருந்து எங்களை வீட்டுக்கு அழைத்து செல்வது தாத்தாவின் வேலை. சைக்கிள் கேரியரில் முதலில் என்னை தூக்கி Continue reading
-
நைட் ஷிப்ட்-சிறுகதை
“Every Guilty Person is his Own hangman” “தூ நைட் ஷிப்ட் மே ஆஜா “திடீர்னு ஒருநாள் என் பாஸ் சொன்னான். பொதுவா ‘நைட் ஷிப்ட்’ யாரும் வரமாட்டாங்க. எல்லாம் கல்யாணம் ஆனவனுங்க. இத்தனைக்கும் என்னோட சின்ன பசங்க. இங்கெல்லாம் அப்படித்தான். ரொம்ப சீக்கிரம் கல்யாணம் செஞ்சுப்பாங்க. ராத்திரியில மட்டும்தான் பெண்டாளானும் யாரோ சொல்லிவச்சிட்டுச் செத்த எழுதப் படாத அந்தக் கவைக்குதவாத சட்டத்தைக் கண்மூடித்தனமா பின்பற்றுற நாட்டுல அவனுங்க ‘நைட் ஷிப்ட்’ வர மாட்டேனு சொன்னது Continue reading
-
கண்-சிறுகதை
கண்களில் எரிச்சல் உண்டாக ஆரம்பித்தது. பதினைந்து நிமிடங்களுக்குக் கண்களைத் திறக்கக்கூடாது என்று சொல்லிவிட்டு தான் அந்த நர்ஸ் கண்களில் மருந்தை ஊற்றினாள். நான்கு மணி நேரத்திற்குப் பார்வை மங்கலாக இருக்கும் என்றாள். ஆனால் கண் எரியும் என்று அவள் சொல்லவில்லை. இன்னும் பதினான்கு நிமிடங்கள் நான் கண்களை மூடியே வைத்திருக்க வேண்டும். கண்களைத் திறந்துவிடலாமா என்று எண்ணினேன். ஆனால் கண்களைத் திறந்து, வெளிச்சம் கண்ணில் பட்டுப் பார்வை போய் விட்டால்? நினைக்கும் போதே கிலி ஏற்படுகிறது பார்வை Continue reading