aravindhskumar

  • தட்பம் தவிர்- க்ரைம் நாவல்

     என்னுடைய முதல் க்ரைம் நாவல் ‘தட்பம் தவிர்’ ஈ-புத்தகமாக வெளியாகி இருக்கிறது.   எங்களுடைய ஸ்பார்க் க்ரூஸ் பப்ளிக்கேஷன்ஸ் செல்ஃப்-பப்ளிஷ் செய்யும் முதல் நாவல் இது.  Pothi தளத்தில் கிடைக்கிறது. பிரிண்ட் புத்த்கம் விரைவில் வெளிவரும்.   கதைச் சுருக்கம்: சென்னையில், ஒரு பிரபலமான அரசு பொறியியல் கல்லூரியில் பேராசிரியர் ஒருவர் கொடூரமான முறையில் கொல்லப்படுகிறார். இன்ஸ்பெக்டரான கதாநாயகன் விசாரணையில் ஈடுபடுகிறான். போலீசின் கவனம் முழுக்க கல்லூரியின் மீதிருக்க, கோயம்புத்தூரில் இன்னொரு கொலை நடக்கிறது. கொலைகாரன் வேண்டுமென்றே இன்ஸ்பெக்டருக்கு… Continue reading

  • ப்ரிசன் ப்ரேக் சொல்லித்தரும் திரைக்கதை-2

    ப்ரிசன் ப்ரேக் சொல்லித்தரும் திரைக்கதை-2 முதல் பாகத்தை இங்கே படிக்கலாம் ப்ரிசன் ப்ரேக் சொல்லித்தரும் திரைக்கதை-1 சிறையிலிருந்து தப்பிக்கும் ஸ்கோஃபீல்ட் அண்ட் கோ-வை FBI அதிகாரி அலெக்சான்டர் மஹோன் துரத்துகிறார். அவர் கம்பெனியின் ஆள். ஸ்கோஃபீல்டையும், லிங்கனையும், மற்ற ஆறு பேரையும் கொல்வதே அவரது நோக்கம். இன்னொரு புறம் சிறை அதிகாரி பிராட் பெல்லிக் துரத்துகிறார். ஒவ்வொருவரும் தத்தம் போக்கில் பயணிக்கின்றனர். அவர்களை பிடிக்க முடியாததால் பிராட் பெல்லிக்கிற்கு வேலை போகிறது. ஸ்கோஃபீல்டையும் அவன் அண்ணனையும் பிடித்துக்கொடுத்தால்,… Continue reading

  • திரிஷ்யம்

    கடந்த ஆண்டு இறுதியில் இந்தியாவைத் திரும்பிப் பார்க்க வைத்த இரண்டு த்ரில்லர் படங்களில் மலையாளப் படமான திரிஷ்யமும் ஒன்று. இன்னொன்று கன்னடப் படமான லூசியா. இரண்டு படங்களையுமே இப்போது தமிழில் எடுக்கிறார்கள். லூசியாவைப் பற்றி பின் விவாதிப்போம்..திரிஷ்யமின் கதை இதுதான். ஜார்ஜ் குட்டி (மோகன்லால்) ஒரு சிறு கிராமத்தில் வசிக்கும் கேபில் டி‌வி ஆப்பரேட்டர். படிப்பறிவு மிகக் குறைவு. ஆனால் அனுபவ அறிவு மிகமிக அதிகம். பல மொழித் திரைப்படங்களைப் பார்த்தே தன் அறிவை வளர்த்துக் கொள்கிறான்.… Continue reading

  • ப்ரிசன் ப்ரேக் சொல்லித்தரும் திரைக்கதை-1

    அமெரிக்க, இங்கிலாந்து தொலைக்காட்சி தொடர்களை இரண்டு முக்கிய காரணங்களுக்காக பார்க்கலாம். ஒன்று, அவை அனைத்தும் முழு நீள படங்களுக்கு இணையான தரத்தில், மிகவும் சுவாரஸ்யமாக உருவாக்கப்பட்டிருக்கும். சில நேரங்களில் படங்களை விட தொலைக்காட்சி தொடர்கள் சுவாரஸ்யமாக இருக்கும். இரண்டு, அத்தகைய தொடர்களை கூர்ந்து கவனிப்பதன் மூலம் திரைக்கதை உத்திகளை புரிந்து கொள்ளலாம். சினிமா திரைக்கதைகளை விட தொலைக்காட்சி தொடர்களின் திரைக்கதைகளுக்கு அதிக உழைப்பு தேவை. கதையை சுவாரஸ்யமான இடத்தில் முடித்தால் தான், மீண்டும் அடுத்த வாரம் பார்வையாளர்கள்… Continue reading

  • யாமிருக்க பயமே

    ஒரு பேய் படமெனில் அது நம்மை பயமுறுத்த வேண்டும். சரி. அதுவே நம்மை வயிறுகுழுங்க சிரிக்கவும் வைத்தால்? அதுவே ஹாரர் காமெடி எனப்படும் genre. Scary movie series, ஹிந்தியில் கடந்த ஆண்டு வெளியான  Go Goa Gone போன்ற படங்களை  அதற்கு உதாரணமாக சொல்லலாம். நம்மூரில் ஹாரர் படங்களே குறைவு. இதில் எங்கிருந்து ஹாரர் காமெடி எடுப்பது ! ஆனால் அப்படி ஒரு படத்தை இப்போது எடுத்திருக்கிறார்கள். யாமிருக்க பயமே ஒரு ஹாரர் காமெடி படம். ஆரம்ப… Continue reading

  • ஆஸ்கார் 2014

    நன்றி ஆழம் ஏப்ரல் 2014 ஆஸ்கார் போட்டியின் மீது ஏராளமான விமர்சனங்கள் எழுந்தாலும், ஆஸ்கார் விருதுக்கு இருக்கும் மவுசுமட்டும் குறைவதில்லை. அந்த வகையில், இந்த ஆண்டு அதிக எதிர்பார்ப்புகளுக்கிடையே நடந்து முடிந்த ஆஸ்கார் போட்டியில் எந்தெந்த படங்கள் எந்தெந்த பிரிவுகளில் விருதுகளை வென்றன என்பதை இங்கே பார்ப்போம். கிராவிட்டி இந்த ஆண்டு அதிக விருதுகளை வென்றுள்ள படம், கிராவிட்டி. சிறந்த இயக்குனர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த படத்தொகுப்பு, சிறந்த இசை உட்பட மொத்தம் ஏழு விருதுகளை இந்த… Continue reading

  • கருவிலே ஓர் போதிசத்துவர்

    காலை எத்தி எத்தி வெளியே வர துடிக்கிறது குழந்தை இருள் கவிந்த கர்பப் பையினிலிருந்து பேரொளி நோக்கி பல கனவுகளுடன் தலையை வெளியே நீட்டியது, அதன் கண் கூசிற்று . மருத்துவன் ஓர் தாதியை  உரச, இன்னொரு தாதி அதை வன்மமாய் பார்க்க உதவியாளன் செவிலியர்களை கண்களாலே காமுற குழந்தையின் உளம்  கூசிற்று . பேரொளியா இது ! பேரிருள் என் தாயின்க ருவறையே சாந்தி சூனியம் சுவர்க்கம். இழுத்துக் கொண்டது தலையை மீண்டும் உள்ளே. வெளிவர… Continue reading

  • சுஜாதா விருது-2014

    உயிர்மை பதிப்பகமும் சுஜாதா அறக்கட்டளையும் இணைந்து வழங்கும் சுஜாதா விருது (பிரிவு: சிறந்த இணையம்) இந்தாண்டு என்னுடைய இணையதளத்திற்கு (www.aravindhskumar.com) கிட்டியுள்ளது என்பதை பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்..  நன்றி, உயிர்மை பதிப்பகத்திற்கு, சுஜாதா அறக்கட்டளைக்கு மற்றும் தேர்வு குழுவிற்கு  நன்றி, எழுத ஊக்குவித்துவரும் அத்துணை பேருக்கும், என் இணைய வாசகர்களுக்கும் நன்றி, முழு நேரம் எழுத முடிவெடுத்து வேலையை விட்டுவிட்டு வந்த நாளிலிருந்து, உறுதுணையாய் இருக்கும் அண்ணனுக்கும், அண்ணனாய் இருக்கும் நண்பர்களுக்கும்.. அரவிந்த் சச்சிதானந்தம் Continue reading

  • ஹாலிவுட் ஓநாய்-மார்டின் ஸ்கார்ஸேஸி

    அமெரிக்க புதுஅலை சினிமாவின் முக்கிய படைப்பாளியாக கருதப்படும் மார்டின் ஸ்கார்ஸேஸியின் இயக்கத்தில், அண்மையில் வெளிவந்திருக்கும் படம் வொல்ஃப் ஆஃப் வால் ஸ்ட்ரீட்.  ஜோர்டான் பெல்ஃபோர்ட் என்கிற பங்குசந்தை தரகருடைய வாழ்க்கையை பற்றி இந்த படம் பேசுகிறது. தொண்ணூறுகளில் அமெரிக்க பங்குசந்தையை கலக்கியவர் பெல்ஃபோர்ட். பல புதுவித மோசடிகளை செய்து பங்குச்சந்தையில் பல கோடி ரூபாய் லாபம் ஈட்டிய அவர் தன்னுடைய அனுபவங்களை புத்தகமாக எழுதினார். அந்த புத்தகம் தான் இப்போது படமாக வந்திருக்கிறது. படத்தில், ஜோர்டான் பெல்ஃபோர்ட்டாக நடித்திருக்கிறார்… Continue reading

  • நகுலனின் நாய்-சிறுகதை

    இரு கைகளையும் நிலத்திலூன்றி. ஒரு காலால் முட்டியிட்டு, மற்றொரு காலைத் தூக்கி, நாக்கை வெளியே நீட்டி நாயைப் போல் குரைத்துக் காட்டினான் நகுலன். அவனின் பெற்றோர் அதனை ரசித்துக் கொண்டிருந்தனர். ஆண்டே மிஷா தம்பதியரின் ஒரே மகன் நகுலன். கார்ப்பரேட் தம்பதிகள். அவர்கள் சேர்ந்து வாழத் தொடங்கி ஐந்து வருடங்காளாகின்றன. ஒரு வருடத்திற்கு முன்தான் திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திற்கு முன் குழந்தையைப் பற்றிக் கவலைப்படாத அவர்கள் திருமணம் என்ற சம்ப்ரதாயத்திற்கு உட்பட்டவுடன் சம்ப்ரதாயமாக ஒரு குழந்தைக்கு ஏங்கத்… Continue reading