tamil self publishing
-
Kindle: Pen to Publish ஏன் அவசியம்!
Amazon Kindle Pen to publish போட்டியின் மார்கெட்டிங் அல்லது லாபியிங் பிரச்சனைகளாக முன்வைக்கப்படும் விஷயங்கள் வெறும் கிண்டிலுக்கு மட்டுமே உரித்தானவை அல்ல என்பதை உறுதியாக சொல்ல முடியும். பொதுவாகவே தமிழ் எழுத்துலகில் கொஞ்சம் ‘காண்டக்ட்ஸ்’ உள்ள அல்லது தொடர்புகளை வளர்த்துக்கொள்ளக் கூடிய ஒரு எழுத்தாளரால் சுமாரான ஒரு படைப்பை தமிழின் ஆகச்சிறந்த படைப்பு என்ற தோற்றத்தை உருவாக்கிவிட முடியும். அதுவும் சமூக வலைத்தளங்களின் வருகைக்குப்பின் இது இன்னும் எளிதாகி விட்டது. போதாகுறைக்கு ஏரளாமான சிறுசிறு குழுக்கள் பல விருதுகளை Continue reading
-
ஊச்சு- ஹாரர் துப்பறியும் நாவல்
என்னுடைய இரண்டாவது நாவல் ‘ஊச்சு (The Fear)’ அமேசான் தளத்தில் ஈ-புத்தகமாக வெளியாகி இருக்கிறது என்பதை பகிர்வதில் மகிழ்கிறேன். கதைச் சுருக்கம் ஜாஸ்மின், நகுல், சுமித் மற்றும் மனிஷ், நால்வரும் நெருங்கிய நண்பர்கள். ஆவணப் படம் எடுப்பதற்காக மர்மங்கள் நிறைந்த மேல்பாறை நோக்கி பயணப்படுகிறார்கள். அந்த காட்டின் அமானுஸ்யத்தை அவர்கள் முழுவதுமாக உணர்ந்துகொள்வதற்குள், ஒவ்வொருவராக காணாமல் போகிறார்கள். இன்ஸ்பெக்டர் அர்ஜுன் அவர்களைத் தேடி சென்னையிலிருந்து புறப்படுகிறார். ஒருபுறம், நண்பர்கள் தொலைந்து போனதைப் பற்றி ஊரில் ஒவ்வொருவரும் ஒரு Continue reading
-
இலவச ஈ-புத்தகங்களும் கூகிள் ப்ளேவும்
கூகிள் ப்ளே ஸ்டோரில் பல புத்தகங்கள் இலவசமாக கிடைக்கின்றன. முதன்முதலில் புத்தகத்தை டவுன்லோட் செய்ய முற்படும் போது, கிரெடிட் அல்லது டெபிட் கார்ட் விவரங்களை தர வேண்டும். முதல் முறை மட்டும் நம் வங்கிக்கணக்கில் இருந்து ஐம்பது ரூபாய் பிடித்துக்கொள்வார்கள். ஓரிரு நாட்களில் அந்த பணம் திருப்பி தரப்பட்டுவிடும். இது நாம் அளித்த விவரங்கள் உண்மையானதா என்று சரி பார்க்க. கூகிள், பேபால் உட்பட பல தளங்களும் இப்படிதான் இயங்குகின்றன. இது அவர்களுடைய பாலிசி. மேலும் நாம் Continue reading
-
தட்பம் தவிர்- free e-book
தட்பம் தவிர் க்ரைம் நாவலை இலவச ஈ-புத்தகமாக இங்கே பகிர்வதில் மகிழ்கிறேன். இந்த நாவல் முதன்முதலில் ஆன்லைனில் Self Publish செய்யப்பட்டபோது அதை வாங்கிய அனைவருக்கும் நன்றி… கதைச் சுருக்கம்: சென்னையில், ஒரு பிரபலமான அரசு பொறியியல் கல்லூரியில் பேராசிரியர் ஒருவர் கொடூரமான முறையில் கொல்லப்படுகிறார். இன்ஸ்பெக்டரான கதாநாயகன் விசாரணையில் ஈடுபடுகிறான். போலீசின் கவனம் முழுக்க கல்லூரியின் மீதிருக்க, கோயம்புத்தூரில் இன்னொரு கொலை நடக்கிறது. கொலைகாரன் வேண்டுமென்றே இன்ஸ்பெக்டருக்கு துப்பு கொடுத்துவிட்டு செல்ல, முதல் கொலை நடந்த கல்லூரியில், மாணவனொருவன் Continue reading
-
தமிழில் ஆன்லைன் செல்ஃப்-பப்ளிஷிங் ஏன் அவசியம்?
‘செல்ஃப்-பப்ளிஷிங்’ (Self-Publishing) என்ற வார்த்தை அண்மை காலத்தில் பிரபலமான வார்த்தையாக இருக்கலாம். ஆனால் தமிழில் ஏதோ ஒரு வகையில் செல்ஃப்-பப்ளிஷிங் கான்செப்ட் வெகு காலமாகவே இருந்து கொண்டிருக்கிறது. பெரும்பான்மையான நேரங்களில் எழுத்தாளர்கள் தங்கள் ஆரம்ப நாட்களில் தங்களுடைய படைப்புகளை தாங்களே பிரசுரித்து வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு வேறு வழி இருந்திருக்கவில்லை. ஆனாலும் செல்ஃப்-பப்ளிஷிங் என்று அவர்கள் அதை அழைக்க வில்லை. ஒரு எழுத்தாளன் தன் படைப்புகளை தானே பிரசுரித்துக்கொள்ளும் முறை தான் செல்ஃப்-பப்ளிஷிங் எனப்படுகிறது. இப்போது உலகளவில் செல்ஃப் பப்ளிஷிங்கிற்கு ஏராளமான Continue reading
-
தட்பம் தவிர் அத்தியாயம் 8 பகுதி 2
*** சானடோரியம் ப்ரிட்ஜை ஒட்டி அமைந்திருந்த தனியார் வங்கி ஏடிஎம்-யில் பணம் எடுத்துவிட்டு வெளியே வந்தார் ரங்கதுரை. வெளியே அரைப்போதையில் அமர்ந்திருந்த ஏடிஎம் காவலாளி காக்கையன் ரங்கதுரையைப் பார்த்து வணக்கம் வைத்தான். ரங்கதுரை சிறு புன்னகை புரிந்து விட்டு நகர, அவன், “சார்” என்றான். துரை அவனிடம் ஒரு பத்துரூபாயை நீட்ட அவன் சந்தோஷமாகப் பெற்றுக்கொண்டு, “சாரு மனைவி மக்களோட ரொம்ப நாள் வாழணும்” என்று வாழ்த்தினான். “என் பொண்டாட்டி செத்து பலவருஷம் ஆகுதுயா” என்று சொல்லி Continue reading
-
தட்பம் தவிர்- க்ரைம் நாவல்
என்னுடைய முதல் க்ரைம் நாவல் ‘தட்பம் தவிர்’ ஈ-புத்தகமாக வெளியாகி இருக்கிறது. எங்களுடைய ஸ்பார்க் க்ரூஸ் பப்ளிக்கேஷன்ஸ் செல்ஃப்-பப்ளிஷ் செய்யும் முதல் நாவல் இது. Pothi தளத்தில் கிடைக்கிறது. பிரிண்ட் புத்த்கம் விரைவில் வெளிவரும். கதைச் சுருக்கம்: சென்னையில், ஒரு பிரபலமான அரசு பொறியியல் கல்லூரியில் பேராசிரியர் ஒருவர் கொடூரமான முறையில் கொல்லப்படுகிறார். இன்ஸ்பெக்டரான கதாநாயகன் விசாரணையில் ஈடுபடுகிறான். போலீசின் கவனம் முழுக்க கல்லூரியின் மீதிருக்க, கோயம்புத்தூரில் இன்னொரு கொலை நடக்கிறது. கொலைகாரன் வேண்டுமென்றே இன்ஸ்பெக்டருக்கு Continue reading
