psychological stories
-
பிறழ்ந்த இரவுகள்- நெடுங்கதை
கடந்த ஆறு மாதங்களாக இங்கே வந்துக் கொண்டிருக்கிறேன். என் மனைவி தான் என்னை முதன்முதலில் இங்கே அழைத்து வந்தாள். நான் செய்த பாவம் என் மனைவிக்கு தெரியும். அவள் என்னை மன்னித்துவிட்டதாக சொன்னாள். உண்மையில், இந்த விஷயத்தில் மன்னிக்கும் உரிமை அவளிடம் இல்லை. ஒருவேளை என்னை தண்டிப்பதனால் எந்தப் பயனும் இல்லை என்பதால் அவள் அப்படி சொல்லியிருக்கலாம். “நீங்க இதை மறந்துதான் ஆகனும்” டாக்டர் என்னிடம் சொன்னார். என்னால் மறக்கமுடியாது என்பது அவருக்குத் தெரியும். நான் எதுவும் பேசாமல் ஜன்னலுக்கு வெளியே பார்த்தேன். தோட்டத்தில், Continue reading
-
ஆவி எழுத்தாளன் (எ) தமிழ் சினிமா கதாசிரியன்- சிறுகதை
‘ஆவி எழுத்தாளன்’ என்றதும் அமானுஷ்ய சக்திகளைப் பற்றி எழுதி மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிப்பவன் என்றுதான் பலரும் நினைக்கின்றனர். பிளாட்பாரக் கடைகளில் கிடைக்கும் ‘அமானுஷ்ய உலகம்’ புத்தகத்தை எழுதுபவன் சத்தியமாக நான் இல்லை. பதினைந்து ரூபாய் கொடுத்து அந்தப் புத்தகத்தை நானும் வாங்கிப் படித்திருக்கிறேன். ‘முப்பது நாட்களில் ஆங்கிலம் கற்பது எப்படி’ என்பது போல ‘முப்பது நாட்களில் சூனியம் வைப்பது எப்படி’ என்று அந்தப் புத்தகத்தில் நிறைய இருக்கும். வெள்ளைச்சட்டை போட்ட ஒரு கருப்பு உருவத்தின் படத்தைப் Continue reading
-
நகுலனின் நாய்-சிறுகதை
இரு கைகளையும் நிலத்திலூன்றி. ஒரு காலால் முட்டியிட்டு, மற்றொரு காலைத் தூக்கி, நாக்கை வெளியே நீட்டி நாயைப் போல் குரைத்துக் காட்டினான் நகுலன். அவனின் பெற்றோர் அதனை ரசித்துக் கொண்டிருந்தனர். ஆண்டே மிஷா தம்பதியரின் ஒரே மகன் நகுலன். கார்ப்பரேட் தம்பதிகள். அவர்கள் சேர்ந்து வாழத் தொடங்கி ஐந்து வருடங்காளாகின்றன. ஒரு வருடத்திற்கு முன்தான் திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திற்கு முன் குழந்தையைப் பற்றிக் கவலைப்படாத அவர்கள் திருமணம் என்ற சம்ப்ரதாயத்திற்கு உட்பட்டவுடன் சம்ப்ரதாயமாக ஒரு குழந்தைக்கு ஏங்கத் Continue reading
-
விடாது பைக்
மணி காலை ஒன்பது.வினோத்தை பொறுத்த வகையில் அது அதிகாலை. வீட்டிலிருந்து வெளியே வந்தவனுக்கு காத்திருந்தது ஆச்சர்யம். வாசலருகே நின்றுகொண்டிருந்தது அந்த விலையுயர்ந்த பைக். “யாருதா இருக்கும் ? இத இந்த தெருவுல பார்த்ததே இல்லையே. பூட்டாம வெச்சுருக்கான் !” என்றபடி சுற்றும் முற்றும் பார்த்தான். தெருவே நிசப்தமாக இருந்தது. “யாருதா இருந்த என்ன, இன்னைக்கு இது என் பைக்.” பெரும் சப்தத்துடன் பைக் அங்கிருந்து கிளம்பியது. வினோத்திற்கு சிறு வயதிலிருந்தே பைக் மீது ஆசை அதிகம். ஒவ்வொரு Continue reading