aravindhskumar.com

  • வழக்கு எண் 18/9

    சினிமா என்பது 24 lies per second (24 பொய்கள்) என்று ஒரு பெரிய இயக்குனர் குறிப்பிட்டார்.அவ்வாறிருக்கவேண்டிய அவசியமில்லை, சினிமாவில் சினிமாத்தனம் கலக்காத எதார்த்தமும் சாத்தியம் என்பது உலக சினிமா அறிந்தவர்களின் கருத்து. அந்த கருத்து மீண்டும் ஒரு முறை தமிழ் சினிமாவில் நிரூபிக்கப் பட்டிருக்கிறது, வழக்கு எண் 18/9 என்ற ஒரு உன்னத படைப்பின் மூலம்…. திரைக்குப் பின் பணிப்புரிந்திருக்கும் தேர்ந்த படைப்பாளிகள், திரையில் வெறும் புது முகங்களை உலாவவிட்டு ஒவ்வொரு காட்சிகளையும் செதுக்கி இருக்கிறார்கள்.… Continue reading

  • ஓடிப்போனக் கடவுள்

    நான் எப்படி இங்கு வந்தேன் என்பது இன்னும் விளங்கவில்லை.இது ஒரு பெரிய கோவில். மிக உயர்ந்த மதில் சுவர்கள். நிச்சயம் ஏதோ ஒரு மிகப்பெரிய அரசனால் கட்டப்பட்ட கோவிலென்பது திண்ணம். சிற்றரசர்கள் பெரியக் கோவில்களை உருவாக்கியதில்லை.பிரகாரம் முழுக்க ஏதேதோ குட்டிக் கடவுள்களின் சிதிலமடைந்த சிலைகள். அனைத்தையும் கடந்து நான் மூல ஸ்தானத்தை நோக்கி சென்றேன். மூலமே என் நோக்கு வெருச்சோடிக் கிடந்த கோவில் காணவில்லை கடவுள்; இது என்ன கோவில் என்பது விளங்கவில்லை. கற்பக்ரஹத்தில் மூலவர் சிலையை… Continue reading

  • திருடன் போலிஸ்-ஒரு நிமிடக் கதை

    “அவன போடணும்டா. இனி அவன உயிரோட விட்டு வைக்க கூடாது”என்றான் அண்ணன் தன் தம்பியிடம். “ஆமா, அண்ணே! போன முறை திருடும்போதே நம்மல புடிச்சுருப்பான்.அவன் கிட்ட இருந்து தப்பிக்கிறதுக்குள்ள உசுரே போயிருச்சு”இது தம்பி. அண்ணனுக்கு வயது பன்னிரண்டு . தம்பிக்கு வயது பத்து. ஆனால் இந்த சிறு வயதிலும் அவர்களுக்கு அந்த போலிஸ்காரன் மீது வன்மம் அதிகமாயிருந்தது. அவன் வருகைக்காக சுவர் மறைவில் காத்திருந்து அவன் அருகில் வந்ததும் இருவரும் அந்த சிறு துப்பாக்கியால் சுட்டனர்.அவன் சுருண்டு… Continue reading

  • அட்டு பீசு-ஒரு நிமிடக் கதை

    பேருந்திற்காக அந்த நான்கு பெண்களும் காத்துக்கொண்டிருந்த வேலையில் அங்கே வந்து சேர்ந்தான் அந்தக் குறுந்தாடிக்காரன்.  “கடவுளே! என்ன ஏன் இந்த மாதிரி அட்டு பீசுங்கள பார்க்க வைக்கிற!” என்று அவர்களை கேலி செய்ய தொடங்கினான்.சகித்துக்கொண்டிருப்பதை தவிர அந்த பெண்களால் வேறொன்றும் செய்ய இயலவில்லை.அந்த நேரம் பார்த்து அவர்களை  காப்பாற்றுவதற்க்காகவே  ஆபத்பாண்டவன்போல் அங்கு வந்து சேர்ந்தான் இன்னொருவன்.  “என்னமா! கலாய்க்கிறானா? டேய்! இதுவே உன் கூடப் பிறந்தவங்களா இருந்தா இப்படி கிண்டல் பண்ணுவியா? “  “அதான் கூடப் பொறக்கலையே”  “என்னடா தெனாவட்டா பேசுற……”  “இன்னும்… Continue reading

  • நைட் ஷிப்ட்

    “Every Guilty Person is his Own hangman”-Lucius Annaeus Seneca “தூ நைட் ஷிப்ட் மே ஆஜா ” திடிர்னு ஒருநாள் என் பாஸ் சொன்னான். பொதுவா ‘நைட் ஷிப்ட்’ யாரும் வரமாட்டங்க. எல்லாம் கல்யாணம் ஆனவனுங்க. இத்தனைக்கும் என்னோட சின்ன பசங்க. இங்கெல்லாம் அப்படித்தான். ரொம்ப சீக்கிரம் கல்யாணம் செஞ்சுபாங்க.  ராத்திரில மட்டும்தான்  பெண்டாளானும் யாரோ சொல்லிவச்சிட்டு செத்த எழுதப் படாத அந்த கவைக்குதவாத சட்டத்தை கண்மூடித்தனமா பின்பற்றுற நாட்டுல அவனுங்க ‘நைட் ஷிப்ட்’ வர மாட்டேனு சொன்னது ஒன்னும்… Continue reading

  • கறுப்புப் பெண்

    வண்ணத் தொலைக்காட்சியிலும் கருப்பாகவே தெரிந்தாள் அந்த கறுப்புப் பெண்   அவளை பார்த்தவாறே கரமைதுனம் செய்கிறான் இளைஞன், வெள்ளை தோளை நினைத்துக்கொண்டே…   தோளில் கூடவா அந்நிய மோகம் ! உதாசீனப்படுத்திவிட்டு தொடர்கிறான்   பின்னொரு நாள்-கருப்பான தன் மனையாளை பெண்டாள்கிறான் வெள்ளை நடிகையை நினைத்துக்கொண்டே… Continue reading

  • முனைவர் முருகேசன்

    1 பல அறிஞர்களையும் விஞ்ஞானிகளையும் உருவாக்கிவிட்ட பின்னும் அந்த கல்லூரி தலைக் கனமின்றி அமைதியாகவே இயங்கிக் கொண்டிருந்தது. அங்கு ஓர் வகுப்பறை மட்டும் சற்று சப்தமாகவே காணப்பட்டது. பல கூத்துகளும் கிண்டல்களும் அங்கு அரங்கேறிக்கொண்டிருந்தன. இவ்வளவு சலசலப்புகளுக்கு மத்தியிலும் மாணவர்கள் யாரையோ எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். திடீரென உள்ளே நுழைந்தார் வகுப்பாசிரியர்  முருகேசன். வகுப்பே நிசப்தமாயிற்று. அவர் மேலிருக்கும் மரியாதையினாலோ, பயத்தினாலோ அன்று. அவர் கூறும் வழக்கமான அந்த மூன்று சொற்களை எதிர்பார்த்து, “டுடே நோ கிளாஸ்” அவர்… Continue reading

  • தமிழ் எழுத்தாளனின் மரணம்

    அந்த தமிழ் எழுத்தாளன் மாண்டுவிட்டான் அழுவதற்கு யாருமில்லை சாகும்வரை பலஆயிரம் பக்கங்களை சில நூறுப் பேர்களுக்காக  மட்டும் எழுதியவன் மாண்டுவிட்டான் தமிழ்நாட்டில் தமிழில் எழுதும் கீழ்த்தரமான செயலை இறுதிவரை செய்தவன் மாண்டுவிட்டான் நீசன் எனக்கூறி பலர் அவனை ஒதுக்கிவிட்டனர் சபையில் ஆபாசம் பேசுகிறான் எனக்கூறி அறிவிலிகள் பலர் ஒதுங்கிநின்றனர் ஒதுக்கியவர்களாலோ ஒதுங்கியவர்களாலோ ஒடுக்கமுடியவில்லை அவனை இறுதிவரை வளையா முதுகெலும்புடன் எழுதியவன் மாண்டுவிட்டான் பக்கத்துக்கு பக்கம் சார்த்தர் பாரதி என பிதற்றினான்-அவனுக்காக அழுவதற்கு சார்த்தரோ பாரதியோ இல்லை அழ நினைத்த நண்பர்களோ-ஏனோ… Continue reading

  • விடாது பைக்

    மணி காலை ஒன்பது.வினோத்தை பொறுத்த வகையில் அது அதிகாலை. வீட்டிலிருந்து வெளியே வந்தவனுக்கு காத்திருந்தது ஆச்சர்யம். வாசலருகே நின்றுகொண்டிருந்தது அந்த விலையுயர்ந்த பைக். “யாருதா இருக்கும் ? இத இந்த தெருவுல பார்த்ததே இல்லையே. பூட்டாம வெச்சுருக்கான் !” என்றபடி சுற்றும் முற்றும் பார்த்தான். தெருவே நிசப்தமாக இருந்தது. “யாருதா இருந்த என்ன, இன்னைக்கு இது என் பைக்.” பெரும் சப்தத்துடன் பைக் அங்கிருந்து கிளம்பியது. வினோத்திற்கு சிறு வயதிலிருந்தே பைக் மீது ஆசை அதிகம். ஒவ்வொரு… Continue reading

  • ஏன் இந்த கொலைவெறி- ஓர் ஆய்வு கட்டுரை

    ஏன் இந்த கொலைவெறி- ஓர் ஆய்வு கட்டுரை   எல்லா பத்திரிக்கைகளும் கொலைவெறி பற்றியே பேசுகின்றன. எம்.டிவியில் ஒளிபரப்பப்பெற்ற முதல் தமிழ் பாடல், ஒரே வாரத்தில் யுட்யுபில் (Youtube) ஒரு கோடி பார்வையாளர்களை கொண்ட பாடல் என இப்பாடலின் சாதனை பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. இதோ இப்போது இந்த கட்டுரையை எழுதும் தருவாயிலும் கூட சோனி மேக்ஸில் இந்த பாடல் ஓடிக்கொண்டிருக்கிறது. தமிழ் தெரியாத பலரும் இந்த பாடலை முணுமுணுத்துக் கொண்டிருப்பதால்,இந்த பாடலை நாம் தத்துவார்த்த ரீதியாக, சமுக… Continue reading