மெட்ராஸ் கதைகள்

  • மெட்ராஸ் கதைகள்

    மெட்ராஸ்’ தான், 2015-க்கு பிறகுநான் எழுதிய பெரும்பாலான கதைகளில் பேசு பொருளாக இருந்திருக்கிறது. அது எனக்கு தெரிந்த, நான் வாழும் மெட்ராஸ். எதிலிருந்து எதுவரை மெட்ராஸ் நீள்கிறது என்பதில் ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து இருக்கக் கூடும். மந்தவெளியில் இருப்பவர்களுக்கு தாம்பரம் வெளியூராக தெரியும். என்னை போன்ற தாம்பரம் வாசிகளுக்கு கிண்டியை தாண்டி போவதே நெடும் பயணமாக தோன்றும். வெவ்வேறு அனுபவங்களின் தொகுப்பே இந்த பெருநகரம். அந்த அனுபவங்களின் வெளிப்பாடே என்னுடைய ‘மெட்ராஸ் கதைகள்’. கண்டதை உணர்ந்ததை மனதிற்கு Continue reading

  • 3 பி.ஹெச்.கே வீடு- சிறுகதை

    தினமணி-சிவசங்கரி சிறுகதை போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற என்னுடைய ‘3 பி.ஹெச்.கே வீடு’ என்கிற சிறுகதை தினமணி கதிரில் வெளியாகி இருக்கிறது. கதையை இணையத்தில் வாசிக்க இங்கே சொடுக்கவும். Continue reading

  • தைப்பூசம்- சிறுகதை

    இதை விட அதிக கூட்டத்தை சிறுவயதில் பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு தைப்பூசத்தின் போதும் சானடோரியத்திலிருந்து அம்மா நடக்க வைத்தே அழைத்து செல்வாள். வெகு தூரம் நடந்த களைப்பு கோவில் வாசலில் அண்டாவில் இருக்கும் புளியோதரையைப் பார்த்ததுமே பறந்து போய்விடும்.அம்மா, “சாமி கும்பிட்டா தான் தருவாங்க…” என்பாள்.அது உண்மையில்லை என்பது வளரவளர தான் தெரிய ஆரம்பித்தது. Continue reading

  • கொரோனா நாட்கள்-நெடுங்கதை

    இன்று இந்த தளம் தன்னுடைய பத்தாவது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. ஊக்கமளிக்கும் அனைவருக்கும் நன்றி. அரவிந்த் சச்சிதானந்தம் கொரோனா நாட்கள்-நெடுங்கதை ஒன்று வண்டி ஓட்டுவது என்றாலே கப்பல் ஓட்டுவது போல் தான் எனக்கு. கப்பல் ஓட்டுவது கடினமான வேலையா என்று தெரியாது. அவ்வளவு பெரிய கடலில் மிதந்து போவதை நினைக்கும் போது பயமாக தான் இருக்கிறது. அதனால் கப்பல் ஓட்டுவது கடினமான வேலை என்று மனதில் நிலைத்துவிட்டது. நம்மை பயமுறுத்தும் விஷயங்கள் எல்லாமே நமக்கு கடினம் தான் போல! வண்டி ஓட்டும் போதெல்லாம் யாராவது வந்து இடித்துவிடுவார்களா, அல்லது நான் யார் மேலேயாவது இடித்து விடுவேனா என்ற பயம் எப்போதும் இருக்கும். அதனாலேயே எனக்கு வண்டி ஓட்டுவது என்றாலே கப்பல் ஓட்டுவது போல் தான். கப்பல் ஓட்டுவது கடினமான வேலையா என்று தெரியாது. அவ்வளவு பெரிய கடலில்… சரி, கப்பலுக்கு நங்கூரம் பாய்ச்சி நிறுத்திவிடுவோம். வண்டி தான் பயம். வண்டியே அதிகம் ஓட்டிடாத எனக்கு கொரோனா காலத்தில் தினமும் வண்டி ஓட்ட வேண்டும் என்றதும் கூடுதல் பயம் வந்துவிட்டது. அலுவலகத்தில் நான் வேலைக்கு வந்தே ஆகவேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். என் வீடு கிழக்கு தாம்பரத்தில் இருந்தது. நான் வேலை செய்யும் வங்கியோ மந்தைவெளியில். இடைப்பட்ட இருபத்தைந்து கிலோ மீட்டரை கடக்க வண்டி ஓட்டி ஆக வேண்டும். குரோம்பேட்டையிலிருந்து செல்லும் நண்பர் எம்.வியின் வண்டியில் ஏறிக்கொள்ளலாம் என்று பார்த்தேன்.   “சோசியல் டிஸ்டன்சிங் ப்ரோ. சாரி ப்ரோ” என்று சொல்லிவிட்டார். “மாஸ்க் க்ளவுஸ்லாம் போட்டுகிட்டு தான் ப்ரோ வருவேன்” அவர் சமாதானம் ஆகவில்லை. “வீட்ல குழந்தைங்கலாம் இருக்கு ப்ரோ. எனக்கு வந்தா நான் தாங்குவேன். ஆனா என் மூலமா அவங்களுக்கு வந்திரக் கூடாது! நீங்க வேற உங்க எதிர்வீட்டுக்காரு வெளிநாட்ல இருந்து வந்திருக்காருன்னு சொல்றீங்க…” என்றார். “எதிர்வீட்டுகாரு வெளிநாட்ல இருந்து வரல ப்ரோ. அவர் வீட்டு காரு தான் வெளிநாட்ல இருந்து வந்திருக்கு. ஜெர்மன் கார்” என்றேன். கொஞ்சம் சுதாரித்துக்கொண்டு கேட்டார், “அதான். கார்ல் கொரோனா வரும்ல…!” “இல்ல. Continue reading

  • லவ் @ 30- சிறுகதை

    21G-யில் ஏறுவது என்பது இப்போதெல்லாம் பெரும் போராட்டமாக ஆகிவருகிறது.  யார்யாரோ எங்கிருந்தோ வந்து இந்த நகரத்தில் குடியேறிக்கொண்டே இருக்கிறார்கள். இந்த நகரம் அத்தனைப் பேரையும் முகம் சுழிக்காமல் தாங்கிக்கொள்கிறது. அவ்வளவு பேருக்கும் இங்கு இடமிருக்கிறது என்பது ஆச்சர்யம் தான். ஆனால் பேருந்தில்தான் இடமிருப்பதில்லை. அதுவும் 21G-யில் இரண்டு கால்களையும் ஊன்றி நிற்க இடம் கிடைத்தாலே போதும். ஆனந்தம் தான். அமர இடம் கிடைத்தால் பேரானந்தம். ஆனால் ஆனந்தம் போதும். இந்த நகரத்தின் பேருந்துகள் ஆசையை அடக்கக் கற்றுத்தரும் Continue reading

  • அடி- சிறுகதை

    ‘டப் டப்’ என்ற சப்தம்தான் முதலில்  கேட்டது. பின் ‘பளார் பளார்’ என்ற சப்தம்.  சப்தம் வரும் திசையில் மனித தலைகள் மட்டுமே தெரிந்தது. எனக்கு நான்கு புறமுமே மனித தலைகள் தான். எள்ளுப் போட்டா எள்ளு எடுக்க முடியாது என்று எங்கள் ஊர் பக்கம் சொல்வார்கள்.  அந்த அளவிற்கு கூட்டம். தினமும் இந்த நிலை தான். ஒன்றரை நிமிடங்களில் கடந்துவிடக் கூடிய அந்த நடை மேம்பாலத்தை, ஊர்ந்து கடக்க பத்து நிமிடங்கள் ஆகின்றன. திருப்பதி பெருமாள் Continue reading

  • அவள்- சிறுகதை

    அன்று கோவிந்தசாமி வரவில்லை. அவர் எங்கள் தெருவுக்கு வந்த இந்த ஒரு வருடத்தில் அன்றுதான் அவர் முதன்முதலில் வரவில்லை. அவருடன் வேலைக்கு வரும் காக்கையன் வராமல் போனாலும், கோவிந்தசாமி வந்துவிடுவார். காலை நான் வாசலில் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருக்கும் போது “அம்மா குப்பை” என்று ஒரு குரல் கேட்கும்போதே சொல்லிவிடலாம் மணி சரியாக ஏழு என்று. சிலநாட்கள் நான் வாசலில் இல்லாமல் உள்ளே வேலையாக இருந்தால், “சார்” என்று சன்னமாக ஒரே ஒரு குரல் மட்டும் Continue reading

  • பூங்காவை ஒட்டியிருந்த வீடு- சிறுகதை

    ‘காந்தி பூங்கா’, அவன் வீட்டிலிருந்து மூன்று தெருக்கள் தள்ளி இருந்தது. ராஜாஜி  தெரு, பட்டேல் தெரு, நேதாஜி தெரு, இந்த மூன்றையும் கடந்தால் அந்தப் பூங்காவை அடைந்துவிடலாம். இதில் பட்டேல் தெரு மட்டும் மிக சிறியது. அதில், வலது புறம் மூன்று வீடுகள், இடது புறம் மூன்று வீடுகள் என்று மொத்தம் ஆறு வீடுகள் தான் இருந்தன. இப்போது ஒரு வீட்டை இடித்து அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று கட்டிக் கொண்டிருப்பதால் வீடுகளின் எண்ணிக்கை அதிகரிக்கலாம். ஆனாலும் அதை Continue reading

  • ஸ்கூல் சீசன்- சிறுகதை

    எனக்கு முடியை வித்தியாசமாக, ஸ்டைலாக வெட்டிக் கொள்ள வேண்டுமென்றெல்லாம் ஆசை இல்லை. ஆனால்  இந்த முறை எப்பவும் போல், பள்ளி பிள்ளைப்போல் முடிவெட்டிக்கொள்ளக் கூடாது என்று அக்கா சொன்னாள். “எலி கரண்டுன மாதிரி கரண்டிட்டு வந்தா வீட்டுக்குள்ள விடமாட்டேன்” வாசலைவிட்டு  இறங்கும்போது அக்கா மீண்டும் சொன்னாள். சிறுவயதில் அம்மா வேறுமாதிரி சொல்வாள், “முன்னாடி முடியவிட்டுட்டு வராத. ஒட்ட வெட்டிட்டு வா” நானும் தோரயமாக அம்மாவிற்குப் பிடித்த மாதிரியும், எனக்குப் பிடித்த மாதிரியும் வெட்டிக் கொண்டு வந்து நிற்பேன். Continue reading

  • பாலாவிற்காக… – சிறுகதை

    ஆனால் பாலா தூய்மையான கடல்காற்றை போல் இருந்தாள். அவளிடம் கட்டுப்பாடு இல்லை. பேசிக்கொண்டே இருந்தாள் Continue reading