புத்தகம்
-
ஹாரர் கிங்- ஸ்டீபன் கிங்
Excerpts from On Writing: Memoirs of the Craft by Stephen King தமிழில்: அரவிந்த் சச்சிதானந்தம் *** 1950-களில் இலக்கிய அர்வலர் பாரஸ்ட் J அக்கர்மன் ஸ்பேஸ்மேன் என்ற இதழை சிறிதுகாலம் நடத்தினார். அதில் பெரும்பாலும் அறிவியல் புனைவு படங்களைப் பற்றிய கட்டுரைகள் இடம்பெற்றன. நான் 1960-யில் என்னுடைய கதை ஒன்றை அந்த இதழுக்கு அனுப்பி வைத்தேன். அதுதான் பிரசுரத்திற்கு நான் அனுப்பி வைத்த முதல் கதை என்று நினைக்கிறேன். அதன் தலைப்பு எனக்கு Continue reading
-
இரண்டு கலர் கோடுகள்- குறுநாவல்
என்னுடைய தந்தையின் பிறந்தநாளான இன்று, என்னுடைய அடுத்த குறுநாவலை இங்கே வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இரண்டு கலர் கோடுகள்- குறுநாவல் சோபியா. வயது இருபத்தியைந்து. மென்பொருள் நிறுவன வேலை, நட்பு, குடும்பம் என எல்லாம் அவளுக்கு அமைதியான வாழ்க்கையை தந்திருந்தது. ஒருநாள், அந்த அமைதியை குலைக்கும் விதமாக அவளுடைய pregnancy Test ரிப்போர்ட் வந்தது. அவர் கருவுற்றிருந்தாள். ஆனால் அவள் அதை விரும்பவில்லை. காரணம், அவளுக்கு திருமணம் ஆகியிருக்கவில்லை. சமூகம் தன் ஆயுதங்களை அவள்மேல் எறிய தயாராக Continue reading
-
இலவச கிண்டில் புத்தகங்கள்
என்னுடைய எட்டு நூல்களை இன்று (14.11.2019) மற்றும் நாளை (15.11.2019) கிண்டிலில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். சிறுகதைத் தொகுப்பு: நகுலனின் நாய், நகைச்சுவைக் கதைகள் நாவல்: தட்பம் தவிர், ஊச்சு குறுநாவல்: பிறழ்ந்த இரவுகள் திரைக்கதை கட்டுரைகள்: கொஞ்சம் திரைக்கதை, ஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி. சிறார் நாவல்: சித்திரமலை ரகசியம் Have a good & versatile read நன்றி Click here to download Continue reading
-
புத்தகம்- ஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி
பொதுவாக, திரைக்கதை எழுதுவது எப்படி என்று சொல்லும் புத்தகங்கள் இங்கே ஏராளம் இருக்கின்றன. ஆனால் குறிப்பிட்ட ஒரு ஜானரை (Genre) எப்படி எழுதுவது என்று பேசும் புத்தகங்கள் அதிகமில்லை. அந்த குறையைப் போக்கும் பொருட்டு William C Martell எழுதிய புத்தகம் தான் ‘The Secrets of Action Screenwriting’. புத்தகத்தின் தலைப்பு உணர்த்துவது போல இந்த புத்தகம், பிரத்தியேகமாக, ஆக்சன் கதைகள் எழுதுதலைப் பற்றி விலாவரியாக விவாதிக்கிறது. அதற்கு நாம் பின்பற்ற வேண்டிய சில உத்திகளையும் அடிகோடிட்டுக் காட்டுகிறது. Continue reading
-
புதிய புத்தகம்
புத்தகம் 12: ஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி- திரைக்கதை புத்தகம் வில்லியம் மார்ட்டல் எழுதிய ‘தி சீக்ரெட்ஸ் ஆப் ஆக்சன் ஸ்க்ரீன்ரைட்டிங்’ என்ற புத்தகத்தை மையப்படுத்தி ‘ஆக்சன் கதைகள் எழுதுவது எப்படி’ என்பதைப் பற்றி இந்த புத்தகம் பேசுகிறது. ஆனால் மார்ட்டலின் புத்தகத்திற்கு வெறும் அறிமுகம் போல் இல்லாமல் அவர் சொன்ன உத்திகளை பேசு பொருளாக வைத்து, தகுந்த தமிழ் படங்களை உதாரணமாக எடுத்துக்கொண்டு, விலாவரியாக ஆக்சன் திரைக்கதை எழுதுவதைப் பற்றி இந்த புத்தகத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. புதிதாக Continue reading
-
ஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி-1
பொதுவாக, திரைக்கதை எழுதுவது எப்படி என்று சொல்லும் புத்தகங்கள் இங்கே ஏராளம் இருக்கின்றன. ஆனால் குறிப்பிட்ட ஒரு genre-ஐ எப்படி எழுதுவது என்று பேசும் புத்தகங்கள் அதிகமில்லை. அந்த குறையை போக்கும் பொருட்டு William C Martell எழுதிய புத்தகம் தான் ‘The Secrets of Action Screenwriting’. புத்தகத்தின் தலைப்பு உணர்த்துவது போல இந்த புத்தகம், பிரத்தியேகமாக, ஆக்சன் கதைகள் எழுதுதலைப் பற்றி விலாவரியாக விவாதிக்கிறது. அதற்கு நாம் பின்பற்ற வேண்டிய சில உத்திகளையும் அடிகோடிட்டுக் காட்டுகிறது. ஆனால், Continue reading
-
ஊச்சு- ஹாரர் துப்பறியும் நாவல்
என்னுடைய இரண்டாவது நாவல் ‘ஊச்சு (The Fear)’ அமேசான் தளத்தில் ஈ-புத்தகமாக வெளியாகி இருக்கிறது என்பதை பகிர்வதில் மகிழ்கிறேன். கதைச் சுருக்கம் ஜாஸ்மின், நகுல், சுமித் மற்றும் மனிஷ், நால்வரும் நெருங்கிய நண்பர்கள். ஆவணப் படம் எடுப்பதற்காக மர்மங்கள் நிறைந்த மேல்பாறை நோக்கி பயணப்படுகிறார்கள். அந்த காட்டின் அமானுஸ்யத்தை அவர்கள் முழுவதுமாக உணர்ந்துகொள்வதற்குள், ஒவ்வொருவராக காணாமல் போகிறார்கள். இன்ஸ்பெக்டர் அர்ஜுன் அவர்களைத் தேடி சென்னையிலிருந்து புறப்படுகிறார். ஒருபுறம், நண்பர்கள் தொலைந்து போனதைப் பற்றி ஊரில் ஒவ்வொருவரும் ஒரு Continue reading
-
சாக்ரட் கேம்ஸ்- நாவல், திரையாக்கம், கொஞ்சம் திரைக்கதை
உலக சினிமாவில் நாவல்கள் படமாக்கப்படுவது ஒன்றும் புதிதல்ல. ஆனால் சமகால இந்திய சினிமாவில் நாவல்கள் திரையாக்கம் செய்யப்படுவது அரிதாகவே நடக்கிறது. இங்கே எழுதப்பட்ட சில நாவல்களை மிக எளிதாகவே திரைக்கதையாக மாற்றி விடமுடியும். ஆனாலும் இந்தியாவில் நாவலுக்கும் சினிமாவிற்கும் ஒரு பெரும் இடைவெளி இருந்துகொண்டே தான் இருக்கிறது. எப்போதாவது ஒரு நாவல் சினிமாவாக உருப்பெற்றால், அதுவும் சிறந்த முறையில் திரையாக்கம் செய்யப்பட்டால் அதை கவனிப்பது நிச்சயம் நல்லதொரு திரைக்கதைப் பயிற்சியாக இருக்கும். நெட்பிலிக்ஸ் சீரியலாக வந்திருக்கும் விக்ரம் Continue reading
