‘நான்’ கதைகள்
-
9.45- சிறுகதை
காலை 9.45 மணிக்குள் போகவில்லை என்றால் ‘ஆப்சென்ட்’ போட்டுவிடுவார்கள். நியாமான காரணத்தால் தாமதம் என்றாலும் ஏற்றுக் கொள்ளப்படாது. நான் படித்த பள்ளிகூடத்தைப் பற்றி சொல்லவில்லை. நான் வேலை செய்யும் அலுவலகத்தில் அண்மைக்காலத்தில் தோன்றிய வி(யா)தி இது. ஒன்பது நாற்பத்தைந்து என்றால் ஒன்பது நாற்பத்தைந்து தான். ஒரு நொடியும் தாமதம் ஆகக் கூடாது. முன்பெல்லாம் வருகைப் பதிவேட்டில் கையெழுத்து போட்டால் மட்டும் போதும். இப்போது ‘ஃபினக்கில்’ மென்பொருளில் லாகின் செய்ய வேண்டும். அலுவலகம் மூன்றாவது மாடியில் இருந்தது. லிப்ட் Continue reading
-
நண்பனின் கடிதங்கள்- நெடுங்கதை
அதே தாம்பரம் பீச் ரயில், கேண்டீன் அருகே வந்து நிற்கும் அதே பெட்டி, தம்பி அக்காக்கு காசு கொடு என்று கேட்கும் அதே திருநங்கைகள். ‘பாஸ் கொஞ்சம் நகுந்து உட்காருங்களேன்’. ‘இறங்கி ஏறு. இறங்கி ஏறுங்கப்பா’ ‘சார் மேஜிக் புக் சார் மேஜிக் புக். இருபது ரூவாய் தான்’ ‘நான் பாடும் பாடல் நலமாக வேண்டும்’ ‘தயவு செய்து பயணிகள் வண்டி நடை மேடையில் நின்ற பின்பு இறங்கவும்’ வழக்கமான இத்தியாதிகளுக்கு மத்தியில் அந்த Continue reading
-
சிகண்டினி- சிறுகதை
நான் அவளுடன் உரையாடியதில்லை. நான் இந்த வீட்டிற்கு குடிவந்த இரண்டு வருடத்தில், என் ஹவுஸ் ஓனர் தவிர அக்கம்பக்கத்தில் இருக்கும் யாரிடமும் உரையாடியதில்லை. மாடியில்தான் என்னுடைய அறை. தினமும் காலையில் மொட்டை மாடியில் எட்டு நடைப்பயிற்சி செய்வேன். பின் சிறிதுநேரம் தெருவை வேடிக்கைப் பார்ப்பேன். அமைதியான குறுகலான தெரு. தெருவின் ஒரு மூலையில் பெரிய சுப்ரமணிய சாமி கோவிலும், இன்னொரு மூலையில் சூலக்கரை மாரியம்மன் கோவிலும் இருக்கிறது. அங்கே மட்டும் அவ்வப்போது கூட்டத்தை காணலாம். மற்றப்படி சலனமற்ற Continue reading
