சிறுகதை
-
வரிசையில் நின்ற கடவுள்- சிறுகதை
வழக்கமாக நடை சாத்துவதற்கு முன்பு செய்யப்படும் கைங்கர்யம் எதுவும் செய்யப்படவில்லை. நங்கையர் குறை தீர்க்கும் நல்லாண்டானுக்கு சந்தேகம், ‘தாலாட்டு ஏன் இன்னும் பாடப்படவில்லை?’. அசதியின் காரணமாக அதை பொருட்படுத்தாமல் உறங்கிப் போனார். வைகுண்டராஜன் தன் துயில் கலையும் போது சுப்ரபாத ஒலி கேட்கும் என்று எதிர்பார்த்தார். அதுவும் இல்லை. குழப்பமடைந்தவர், வைகுண்டத்திலிருந்து நேரடியாக மலை மீது இறங்கினார். கோவிலே வெறிச்சோடிக் கிடந்தது. வாசலில் பல்லக்கு கேட்பாரற்று கிடந்தது. வெகுதொலைவில், மலை அடிவாரத்தில் ஓடிக் கொண்டிருந்தவர்கள் புள்ளியாக தெரிந்தார்கள். Continue reading
-
நகுலனின் நாய்- சிறுகதைத் தொகுப்பு
என்னுடைய முதல் சிறுகதைத் தொகுப்பு ‘நகுலனின் நாய்’ அந்தாதி பதிப்பக வெளியீடாக வந்துள்ளது என்பதை பகிர்வதில் மகிழ்கிறேன். மொத்தம் ஒன்பது சிறுகதைகள் இதில் இடம்பெற்றுள்ளன. ஈ-புத்தகமாகவும் கிடைக்கிறது. பிரிண்ட் புத்தகம் வாங்க விரும்புவோர் கீழே உள்ள Discount code-ஐ பயன்படுத்திக் கொள்ளலாம். நகுலனின் நாய்-Paperback பக்கங்கள்: 96 விலை: Rs 50 (free shipping) புத்தகத்தை வாங்க இங்கே கிளிக் செய்யவும் நகுலனின் நாய்-e-book-Pdf விலை: Rs 20 Available Format: Pdf ஈ-புத்தகத்தை வாங்க இங்கே கிளிக் Continue reading
-
கண்ணீர்த் துளிகளில் கரைந்த கனவுகள்
மு.கு: இது கல்கி நினைவுச் சிறுகதை போட்டி 2014-யில் பிரசுரத்திற்கு தேர்வான கதை. நன்றி கல்கி. *** வேகமாக திறக்கப்பட்ட அந்த ஜன்னல்களினூடே புகுந்த சூரிய ஓளி தூக்கக் கலக்கத்திலிருந்த அவன் கண்களை கூசச் செய்தது. சோம்பல் முறித்தவாரே அவன் ஜன்னல் வழியே வீதியில் செல்பவர்களை பார்த்துக்கொண்டிருந்தான். ஜேஜே என மக்கள் இங்கும்அங்கும் ஓடி கொண்டிருந்தார்கள். அதை காண்பவர்களுக்கு ஆடி மாத திருவிழாவோ என ஐயப்பாடு எழலாம். ஆனால் அந்த சேரியை பொறுத்த வரையில் தினமும் காலையில் Continue reading