sparkcrews studios
-
தட்பம் தவிர்- க்ரைம் நாவல்
என்னுடைய முதல் க்ரைம் நாவல் ‘தட்பம் தவிர்’ ஈ-புத்தகமாக வெளியாகி இருக்கிறது. எங்களுடைய ஸ்பார்க் க்ரூஸ் பப்ளிக்கேஷன்ஸ் செல்ஃப்-பப்ளிஷ் செய்யும் முதல் நாவல் இது. Pothi தளத்தில் கிடைக்கிறது. பிரிண்ட் புத்த்கம் விரைவில் வெளிவரும். கதைச் சுருக்கம்: சென்னையில், ஒரு பிரபலமான அரசு பொறியியல் கல்லூரியில் பேராசிரியர் ஒருவர் கொடூரமான முறையில் கொல்லப்படுகிறார். இன்ஸ்பெக்டரான கதாநாயகன் விசாரணையில் ஈடுபடுகிறான். போலீசின் கவனம் முழுக்க கல்லூரியின் மீதிருக்க, கோயம்புத்தூரில் இன்னொரு கொலை நடக்கிறது. கொலைகாரன் வேண்டுமென்றே இன்ஸ்பெக்டருக்கு Continue reading
-
மணிரத்னம் படைப்புகள் ஓர் உரையாடல்
இந்தியாவில். சினிமா பேசும், சினிமாவை பற்றி பேசும் புத்தகங்கள் மிகக் குறைவு. அதுவும் தமிழில், சினிமாவை பற்றிய அறிவைபரப்பும் புத்தகங்கள் அதிகம் வந்ததில்லை. அந்தவகையில், ஆங்கிலத்தில் வெளிவந்த Conversation with Maniratnam என்ற மிக முக்கியமான இந்த புத்தகத்தை, தமிழில் கொண்டு வந்துள்ளது கிழக்கு பதிப்பகம். ஒரு படைப்பாளி தன்னுடைய இருபத்தியொரு படைப்புகளை பற்றியும், அவை உருவான பின்னணியை பற்றியும் இந்த புத்தகத்தில் மனம் திறக்கிறார். ஏன், எதற்கு, எப்படி என்பதை தாண்டி மிகவும் நுட்பமான கேள்விகளை Continue reading
-
நானும் ஒரு உதவி இயக்குனர்
சினிமாவிற்கும் படைப்பிலக்கனமுண்டு, அதை உலகிற்கு உணர்த்திட வணிக சினிமாவில் இலக்கியத்தை புகுத்திட பொதுவாழ்வினுள் பின்நவீனத்துவம் பேசிட உலகமே திரும்பி பார்த்திடும் திரைப்படத்தை இயக்கிட-முடிவு செய்து சென்னை வந்திட்ட பலரில் நானும் ஒருவன். என்னை உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்னை போல் பலருண்டு அவர்களை தெரிந்து கொள்ள நீங்கள் விரும்பியதுமில்லை வலதுகையில் உலக இலக்கியம்-இடதுகையில் சிகரெட்-என விட்டத்தை பார்த்தவாறே தொடங்கியது என் சராசரி வாழ்க்கை.. காசின்றி சினிமா பார்க்க உங்களால் முடியாது, ஆனால் என்னால் முடிந்தது ! என்னுள் Continue reading
-
கைகுட்டைகளும் ட்ரான்ஸ்வெஸ்டிசமும்-சிறுகதை
“Transvestism (also called transvestitism) is the practice of cross-dressing, which is wearing clothing traditionally associated with the opposite sex.”-Wikipedia கைக்குட்டை என்பது உங்களுக்கு வேண்டுமென்றால் ஒரு சாதாரண விடயமா இருக்கலாம். எனக்கு அதிமுக்கியமான ஓர் விடயம். கைகுட்டைக்கென்ன பெரிய முக்கியத்துவம் இருந்துவிடப்போகுதென்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் கடந்த இரண்டு மாதங்களில் நான் ஆயிரம் ரூபாய்க்குக் கைகுட்டை வாங்கிட்டேன்னு சொன்னால் , அதனுடைய முக்கியத்துவம் உங்களுக்குப் புரியும். ஒரு வருடத்திற்குச் சுமார் ஆறாயிரம் ரூபாய் கைகுட்டைக்கே Continue reading