பொது
-
Kindle: Pen to Publish ஏன் அவசியம்!
Amazon Kindle Pen to publish போட்டியின் மார்கெட்டிங் அல்லது லாபியிங் பிரச்சனைகளாக முன்வைக்கப்படும் விஷயங்கள் வெறும் கிண்டிலுக்கு மட்டுமே உரித்தானவை அல்ல என்பதை உறுதியாக சொல்ல முடியும். பொதுவாகவே தமிழ் எழுத்துலகில் கொஞ்சம் ‘காண்டக்ட்ஸ்’ உள்ள அல்லது தொடர்புகளை வளர்த்துக்கொள்ளக் கூடிய ஒரு எழுத்தாளரால் சுமாரான ஒரு படைப்பை தமிழின் ஆகச்சிறந்த படைப்பு என்ற தோற்றத்தை உருவாக்கிவிட முடியும். அதுவும் சமூக வலைத்தளங்களின் வருகைக்குப்பின் இது இன்னும் எளிதாகி விட்டது. போதாகுறைக்கு ஏரளாமான சிறுசிறு குழுக்கள் பல விருதுகளை Continue reading
-
ஒன்பதாவது ஆண்டில்…
இந்தத் தளம் இன்று தன் ஒன்பதாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்தத் தளம் தான் எனக்கான சிற்றிதழ், வெகுஜன இதழ், திரைக்கதை இதழ் என எல்லாமுமாக இருக்கிறது. Versatile-ஆகா, Consistent-ஆகா கதைகள் எழுதவே இந்தத் தளத்தை தொடங்கினேன். அதை விடாமல் செய்யமுடிகிறது என்பதில் மகிழ்ச்சி உண்டு. என்ன எழுத வேண்டும், என்னவெல்லாம் எழுதிவிடக் கூடாது, எந்தத் தொனியில் எழுதிவிடக் கூடாது என்று சொல்லித்தந்தது இந்தத் தளம் தான். மணிரத்னம் படைப்புகள் புத்தகத்தை படித்து, “Translation is pathetic” Continue reading
-
முன்னுரை: அந்த ஆறு நாட்கள்- ஆரூர் பாஸ்கர்
நண்பர் ஆரூர் பாஸ்கரின் ‘அந்த ஆறு நாட்கள்’ குறுநாவலுக்காக எழுதிய முன்னுரையிலிருந்து… புயலுக்கு முன்… கடல் கடவுள் போசிடானின் கோபமே புயலாக, சூறாவளியாக வெளிப்படுகிறது என்ற பண்டைகால கிரேக்கர்களின் நம்பிக்கைக்கும், கடலின் மேற்பரப்பில் ஏற்படும் காற்றழுத்த தாழ்வு நிலையே புயலாக உருவெடுக்கிறது என்ற புரிதலுக்குமிடையே மனித இனம் பெரிதும் வளர்ந்துவிட்டது. மனிதன் கண்டுகொண்ட தொழிநுட்பமும் பெரிதாக வளர்ந்துவிட்டது. ஆனால் இயற்கை இயற்கையாகவே சீரிய காலம் போய், கடந்த அறைநூற்றாண்டில் மனிதனின் பேராசைகள் இயற்கையை அதிகமாகவே சீண்டி (சுரண்டி)விட்டதால்தான், இயற்கை Continue reading
-
கதை, திரைக்கதை- காப்பிரைட்: அவசியங்கள், வழிமுறைகள்
உலக நாடுகளோடு ஒப்பிடுகையில் அறிவுசார் சொத்துரிமை தரவரிசை பட்டியலில் இந்தியா வெகுநாட்களாகவே கடைசி பத்து இடங்களுக்குள் தான் இருக்கிறது. அறிவுசார் சொத்துரிமை என்பது காப்புரிமை, பதிப்புரிமை, வர்த்தக குறியீடு என இன்னும் பல படைப்புகளின் (கண்டுபிடிப்புகளின்) உரிமையை உள்ளடக்கியது. அதாவது படைப்புகளின் உரிமை படைத்தவர்க்கே சொந்தம் என்பதே அறிவுசார் சொத்துரிமை கொள்கை. பல ஆண்டுகளாக நாம் இதில் பின்தங்கி இருந்ததற்கான காரணம் வெறும் விழிப்புணர்வு சார்ந்தது மட்டும் அல்ல. இங்கே படைப்புரிமை கோருவதற்கான வழிமுறைகள் அவ்வளவு எளிதாக இல்லாமல் Continue reading
-
ஸ்மார்ட் போன் இல்லா பெரு வாழ்வு
ஸ்மார்ட் போன் இல்லா பெரு வாழ்வு எப்படி இருக்கும் என்ற ஆர்வத்தில் 2018-யில் தொடர்ச்சியாக பலமாதங்கள் ஸ்மார்ட்போன் இல்லாமல் ஒரு பேசிக் போன் வைத்து கழித்த (சேகரித்த) அனுபவம் 1. நம்முடைய சுற்றத்தை அதிகம் கவனிக்க ஆரம்பிப்போம். மன அமைதி கிட்டும். ரயிலில், பஸ்ஸில், ஷேர் ஆட்டோவில் யாரெல்லாம் வழக்கமாக உடன் பயணிக்கிறார்கள், என்ன உரையாடுகிறார்கள் யார் எங்கே இறங்குகிறார்கள் எல்லாமே கவனத்தில் வரும். எப்போதும் தலையை ஃபோனில் வைத்துக் கொள்ள மாட்டோம். சக பயணிகளை பார்த்து Continue reading
-
நான்காவது பிறந்தநாள்- aravindhskumar.com
வணக்கம். இந்த தளத்திற்கு இன்று நான்காவது பிறந்தநாள் என்பதை பகிர்வதில் மகிழ்ச்சி. மனமார்ந்த நன்றிகள், வாசகர்களுக்கும் நண்பர்களுக்கும்… ‘நகுலனின் நாய் சிறுகதைத் தொகுப்பு’- பிரிண்ட் புத்தகத்தை அடுத்த சில நாட்களுக்கு ஐம்பது சதவீத கழிவில் இங்கே வாங்கலாம். ask4 என்ற discount code-ஐ பயன்படுத்தி கொள்ளுங்கள் நன்றி அரவிந்த் சச்சிதானந்தம் Continue reading
-
நகுலனின் நாய்-Goodreads Book Giveaway
என்னுடைய முதல் சிறுகதைத் தொகுப்பு நகுலனின் நாய் விரைவில் வெளியாக இருக்கிறது. அதன் இரண்டு பிரதிகளை இலவசமாக தர இருக்கிறோம். விருப்பமுள்ளவர்கள் இந்த லிங்கில் தங்கள் விவரங்களை பதிவு செய்துகொள்ளலாம். Goodreads தளத்தால் தேர்ந்தெடுக்கப் படும் இருவருக்கு புத்தகம் இலவசமாக அனுப்பி வைக்கப்படும். நன்றி. Continue reading
-
நேர்காணல்
இந்தியா நியூஸ் ரீல் தளத்தில் என்னுடைய நேர்காணல் வெளியாகி உள்ளது. இணைப்பு இங்கே. http://www.indianewsreel.com/Education/Features/20151513071539/Multi-faceted-Aravindh.aspx Continue reading
-
இலவச ஈ-புத்தகங்களும் கூகிள் ப்ளேவும்
கூகிள் ப்ளே ஸ்டோரில் பல புத்தகங்கள் இலவசமாக கிடைக்கின்றன. முதன்முதலில் புத்தகத்தை டவுன்லோட் செய்ய முற்படும் போது, கிரெடிட் அல்லது டெபிட் கார்ட் விவரங்களை தர வேண்டும். முதல் முறை மட்டும் நம் வங்கிக்கணக்கில் இருந்து ஐம்பது ரூபாய் பிடித்துக்கொள்வார்கள். ஓரிரு நாட்களில் அந்த பணம் திருப்பி தரப்பட்டுவிடும். இது நாம் அளித்த விவரங்கள் உண்மையானதா என்று சரி பார்க்க. கூகிள், பேபால் உட்பட பல தளங்களும் இப்படிதான் இயங்குகின்றன. இது அவர்களுடைய பாலிசி. மேலும் நாம் Continue reading