புனைவுகள்
-
தட்பம் தவிர்- புத்தக வடிவில்
‘தட்பம் தவிர்’ புத்தக வடிவில் அந்தாதி பதிப்பக வெளியீடாக வந்துள்ளது என்பதை பகிர்வதில் மகிழ்கிறேன்… தட்பம் தவிர்- அரவிந்த் சச்சிதானந்தம் (Paperback) பக்கங்கள்: 174 அந்தாதி பதிப்பகம் விலை: Rs 75 (free shipping to India) புத்தகத்தை வாங்க இங்கே கிளிக் செய்யவும் Continue reading
-
அவன் பன்றியாக மாறிக்கொண்டிருக்கிறான்-சிறுகதை
“பன்றிகளுடன் சண்டைப் போட்டால் பன்றியாக மாறிவிடுவாய்” இப்படியாக பாபா சொன்னதாக ஆசிஷ் மிஸ்ரா என்னிடம் ஒருமுறை சொன்னபோது நான் அதைப் பொருட்படுத்தவில்லை. பாபா பொருட்படுத்தக் கூடிய ஆசாமியாக எனக்கு படவில்லை. எப்போது பார்த்தாலும், காப்கா என்றோ காம்யூ என்றோ பேசும் அவனை பொருட்படுத்தாமல் இருப்பதே நல்லது. நான், பாபா, மிஸ்ரா மூவரும் ஒரே வங்கியில் ஐந்து வருடங்களுக்கு முன்பு வேலைக்குச் சேர்ந்தோம். அங்குதான் மூவரும் முதன்முதலில் சந்தித்துக் கொண்டோம். இரண்டு வருடங்களிலேயே பாபா வேலையைவிட்டு முழு நேர Continue reading
-
லாலாகதைகள் 2- படைப்பின் உச்சம்
“ஆஆஆஆ-வோட ‘தாபு’ நாவல படிங்க. அவரோட படைப்பின் உச்சம்” பிரபல எழுத்தாளர் ஆஆஆஆவின் தீவிர வாசகர்/பக்தர் சொன்னார். நான் அந்த நாவலை படித்திருக்கிறேன், ஆனால் அவ்வளவாக பிடிக்கவில்லை என்பதை தயங்கி தயங்கி சொன்னேன். “புடிக்கலயா? புரிலனு சொல்லுங்க. அதெல்லாம் ஆயிர பக்க காவியம். ஒரு வாசிப்புல புரிஞ்சிறாது. திரும்ப வாசிங்க” பதட்டமாக பேசினார். நான் சரி என்று தலையாட்டிவிட்டு, “உங்களுக்கு புரிஞ்சிதா?” என்றேன். அக்கம்பக்கம் பார்த்துவிட்டு “சபரிமலைக்கு மாலை போட்ருக்கேன். பொய் சொல்லக்கூடாது” என்று சொன்னார். நான் Continue reading
-
லாலாகதைகள் 1- நான்கு பிரதிகள் விற்ற புத்தகம்
“இது தமிழின் ஆகச்சிறந்த நாவல்..” பிரபல்ஆஆஆஆ எழுத்தாளர் சொல்லிக்கொண்டிடுருக்கும்போதே அவர் காதை கடித்தார் அந்த புத்தகத்தை எழுதிய பிரபல்அ எழுத்தாளர், “ஐயா அது சிறுகதைத் தொகுப்பு நாவல் இல்ல” சுதாரித்துக் கொண்ட ஆஆஆஆ “நாவல் அளவிற்கு ஆழமான சிறுகதைகளை கொண்ட தொகுப்பு” என்று சொல்லி முடித்தார். ‘ஆஆஆஆ’வின் தீவிர பக்தர்கள் முன்னூறு பேரும் முந்நூற்றியொரு புத்தகங்களை வாங்கி தங்கள் வீட்டில் அடுக்கிக் கொண்டனர். சில மாதம் கழித்து அதில் ஒரு பக்தர், “ஒரே நாள்ல 300 பிரதி Continue reading
-
வரிசையில் நின்ற கடவுள்- சிறுகதை
வழக்கமாக நடை சாத்துவதற்கு முன்பு செய்யப்படும் கைங்கர்யம் எதுவும் செய்யப்படவில்லை. நங்கையர் குறை தீர்க்கும் நல்லாண்டானுக்கு சந்தேகம், ‘தாலாட்டு ஏன் இன்னும் பாடப்படவில்லை?’. அசதியின் காரணமாக அதை பொருட்படுத்தாமல் உறங்கிப் போனார். வைகுண்டராஜன் தன் துயில் கலையும் போது சுப்ரபாத ஒலி கேட்கும் என்று எதிர்பார்த்தார். அதுவும் இல்லை. குழப்பமடைந்தவர், வைகுண்டத்திலிருந்து நேரடியாக மலை மீது இறங்கினார். கோவிலே வெறிச்சோடிக் கிடந்தது. வாசலில் பல்லக்கு கேட்பாரற்று கிடந்தது. வெகுதொலைவில், மலை அடிவாரத்தில் ஓடிக் கொண்டிருந்தவர்கள் புள்ளியாக தெரிந்தார்கள். Continue reading