அரவிந்த் சச்சிதானந்தம்
-
லவ் @ 30- சிறுகதை
Originally posted on Aravindh Sachidanandam: 21G-யில் ஏறுவது என்பது இப்போதெல்லாம் பெரும் போராட்டமாக ஆகிவருகிறது.? யார்யாரோ எங்கிருந்தோ வந்து இந்த நகரத்தில் குடியேறிக்கொண்டே இருக்கிறார்கள். இந்த நகரம் அத்தனைப் பேரையும் முகம் சுழிக்காமல் தாங்கிக்கொள்கிறது. அவ்வளவு பேருக்கும் இங்கு இடமிருக்கிறது என்பது ஆச்சர்யம் தான். ஆனால் பேருந்தில்தான் இடமிருப்பதில்லை. அதுவும் 21G-யில் இரண்டு கால்களையும் ஊன்றி நிற்க இடம் கிடைத்தாலே போதும். ஆனந்தம் தான். அமர இடம் கிடைத்தால் பேரானந்தம். ஆனால் ஆனந்தம் போதும். இந்த… Continue reading
-
தைப்பூசம்- சிறுகதை
Originally posted on Aravindh Sachidanandam: ராஜேந்திர பிரசாத் சாலையில் இருந்தே வாகன நெரிசல் ஆரம்பமாகிவிட்டது. கோவில் அமைந்திருந்த தெருவுக்குள் காரை திருப்புவது என்பது தேவையில்லாத ஜம்பம். காரை ரிவர்ஸ் எடுத்து அகநானூறு தெருவில், இங்கே வாகனங்கள் நிறுத்தாதீர் என்ற பலகை மாட்டப்பட்டிருந்த வீட்டின் முன்பு? காரை நிறுத்தினேன். “கொஞ்ச தூரம் நடக்கணும்…” என்றேன் தேப்தூத் ரேவிடம். “திக் ஆச்சே.. திக் ஆச்சே…” என்றவாறே உடன் நடந்தான். அவனுக்கு இரவு பன்னிரண்டு மணிக்கு தான் விமானம். கொல்கத்தாவிலிருந்து… Continue reading
-
தட்பம் தவிர்- மீண்டும்
ஓஷோ சொல்லியிருப்பார், “The choice between good and evil is all a matter of doctrine. In reality, one always has to choose between the greater evil and the lesser evil” . அதை வேறுமாதிரி புரிந்துகொண்டால்! “the real fight is not between the good and the evil but between the good and the greater good” தட்பம் தவிர் நாவலுக்கான ஐடியா இதுதான். இரண்டு நல்லவர்கள். ஒருவன் போலீஸ்காரன் இன்னொருவன் சீரியல் கில்லர். நான்… Continue reading
-
ஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி- புதிய பதிப்பு
ஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி – புதிய பதிப்பு வெளியாகி இருக்கிறது என்பதை பகிர்வதில் மகிழ்கிறேன். ஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி- அரவிந்த் சச்சிதானந்தம்.அந்தாதி பதிப்பகம் 46 ஆவது சென்னை புத்தகத் திருவிழாவில் ‘பனுவல் புத்தக நிலையத்தில் கிடைக்கும். அரங்கு எண் 199 & 200. நன்றி Continue reading
-
புத்தகப் பரிந்துரை எனும் மாயை
புத்தகக் காட்சியின் போது புத்தக பட்டியல்களும் பரிந்துரைகளும் தவறாமல் வெளியாவது தவிர்க்க முடியாத சம்ரதாயமாகிவிட்டது. சமூக வலைத்தளங்களின் ஆதிக்கத்திற்கு பிறகு வருடாவருடம் பட்டியல்களின் எண்ணிக்கையும் ‘நான் வாங்க விரும்பும் புத்தகங்கள்’ அல்லது ‘கவனிக்க வேண்டிய புத்தகங்கள்’ போன்ற பட்டியல்களை வெளியிடும் எழுத்தாளர்கள்-விமர்சகர்கள்-அதிதீவிர வாசகர்களின் எண்ணிக்கையும் கூடிக் கொண்டே போகிறது. அவர்கள் அந்த புத்தகங்களை வாங்குகிறீர்களா அல்லது வாசித்துவிட்டுதான் அடிக்கோடிட்டு காண்பிக்கிறார்களா என்பது அவர்களுக்கே வெளிச்சம். பலதரப்பட்ட புத்தகங்களை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துவது தான் பட்டியல்களின் நோக்கம் என்றால் பிரச்சனை… Continue reading
-
கதை- கிண்டில் புத்தகம்
கதை-கிண்டில் புத்தகம் ராபர்ட் மெக்கீயின் ‘ஸ்டோரி’ புத்தகத்த்தின் வரிக்கு வரி மொழிபெயர்ப்பாகவோ, சுருக்கப்பட்ட மொழிபெயர்ப்பாகவோ அல்லாமல் அவர் சொன்ன சில முக்கிய உத்திகளை விவாதப் புள்ளியாக எடுத்துக் கொண்டு எழுதப்பட்ட இந்த கட்டுரைகள் திரைக்கதை எழுத முயல்பவர்களுக்கு நிச்சயம் பயன்படும் நன்றி Click to Buy Continue reading
-
ராபர்ட் மெக்கீயின் ‘கதை’ – இறுதிப் பகுதி
7 Screenwriting is like ironing. You move forward a little bit and go back and smooth things out- Paul Thomas Anderson ‘திரைக்கதை’ வடிவமைப்பு கடந்த அத்தியாயங்களில் கதாப்பாத்திரம், கான்பிளிக்ட் மற்றும் பிளாட் பற்றியெல்லாம் பேசினோம். இந்த புரிதோலோடு ஒரு திரைக்கதையை எங்கிருந்து தொடங்குவது? ஒரு கதையோ கருவோ கதாப்பாத்திரமோ எந்த புள்ளியில், தருணத்தில் திரைக்கதையாக வளர்கிறது? Inciting Incident என்பதை இதற்கு பதிலாக சொல்லலாம். அதாவது கதை ஏதோ… Continue reading
-
என் புத்தகங்கள்
என்னுடைய புத்தகங்களை (Paperback), அந்தாதி பதிப்பகத்தின் தளத்தில் வாங்கலாம். புத்தக கண்காட்சியை முன்னிட்டு 10% டிஸ்கவுண்ட் கிடைக்கும். இணைப்பு கீழே https://andhadhipathippagam.myinstamojo.com/ நன்றி அரவிந்த் சச்சிதானந்தம் Continue reading