tamil short stories
-
3BHK திரைப்படம்
என்னுடைய ‘3BHK வீடு’ என்கிற சிறுகதை திரு. அருண் விஷ்வா அவர்களின் தயாரிப்பில்,திரு. ஶ்ரீ கணேஷ் அவர்களின் எழுத்து-இயக்கத்தில் திரைப்படமாகி இருக்கிறது என்பதை பகிர்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். ‘3BHK வீடு’ ஒரு எளிய குடும்பத்தின் முக்கிய பிரச்சினையை, கனவை உணர்வுபூர்வமாக பேசும் கதை. தினமணி சிவசங்கரி போட்டியில் இரண்டாவது பரிசு பெற்ற கதை என்பதில் கூடுதல் சந்தோஷம். சமகால இளைஞர் ஒருவரால் எழுதப்பட்ட சிறுகதை, அதே காலத்தில் ஒரு சமகால இளைஞரால் தழுவப்பட்டு வெள்ளித்திரையை அடைவது என்பதைபுனைவு Continue reading
-
பால்கனியுடன் கூடிய வீட்டை விரும்பும் ஒரு பெண்: குறுங்கதைகள்

என் இனையதளத்தின் பதின்மூன்றாவது பிறந்த நாளான இன்று,என்னுடைய அடுத்த (குறும்)புத்தகத்தை வெளியிடுவதில் மகிழ்கிறேன். பால்கனியுடன் கூடிய வீட்டை விரும்பும் ஒரு பெண்: குறுங்கதைகள் தொகுப்பு இந்த குறுங்கதைகள் தொடர்ந்து பத்து இரவுகள் எழுதப்பட்டவை. இதன் கதை மாந்தர்கள் அப்பழுக்கற்றவர்கள் அல்ல. அவர்கள் மிகச் சாதாரணமானவர்கள். அன்றாட வாழ்வின் சிக்கல்களில் சிக்குண்டு தவிப்பவர்கள். சாதாரண மனிதர்களின் எளிய ஆசைகள், அதை நிறைவேற்றிக் கொள்ளும் தவிப்பு, அது நிறைவேறாமல் போகும் போது ஏற்படும் ஏமாற்றம் ஆகியவை இந்த கதைகளில் அழகாக Continue reading
-
சுரண்டல் -சிறுகதை
அன்று அலுவலகத்தில் யாரிடமும் சரியாக பேசவில்லை. வீடு வந்து கூட அமைதியாகவே அமர்ந்திருந்தான். அவனைப் பற்றி தெரிந்திருந்ததால் மனைவி, அவனை தொந்தரவு செய்யாமல் தட்டில் சப்பாத்தியை வைத்துக் கொடுத்துவிட்டு, தன் வேலையை பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் சாப்பிடாமல் தட்டை உற்றுப் பார்த்தவாறே தன்னுடைய இயலாமையை எண்ணி வருந்திக் கொண்டிருந்தான். ஏதோ ஒருவகையில் இங்கே ஒவ்வொருவரும் பிறரை சுரண்டிப் பிழைக்கிறார்கள் என்ற எண்ணம் மனதில் தோன்றிய போது பெரியதொரு உண்மையை கண்டுபிடித்துவிட்டவனாக அகம் மகிழ்ந்தான். அதே கணத்தில், அந்த Continue reading
-
கோர்ட்-சிறுகதை
சீரியல்களில் இவருக்கு பதில் இவர் என்று போடுவது போல் தான் ஒரு வங்கி மேலாளரின் வாழ்க்கையும். திடிரென்று ஒரு கிளையலிருந்து வேறொரு கிளைக்கு மாற்றல் செய்து விடுவார்கள். அப்படிமாறி புதிய கிளைக்கு செல்லும் போது அதற்கு முன்பிருந்த மேலாளர் விட்டுச் சென்ற சிக்கல்கல்களை எல்லாம் தீர்த்துவைப்பது புதிதாக அந்த சீட்டிற்கு வரும் மேலாளரின் பொறுப்பாகிவிடும். அப்படிதான் சித்ரா ஜெயக்குமாரின் வழக்கு வந்தது. சித்ரா ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் தொழிற்சாலையில் மனித வள மேலாளராக பணியாற்றிய போது என் Continue reading
-
3 BHK வீடு-கிண்டில் பதிப்பு
3 BHK வீடு சிறுகதைத் தொகுப்பின் கிண்டில் பதிப்பு வெளியாகி இருக்கிறது என்பதை பகிர்வதில் மகிழ்கிறேன். Click here to buy நன்றி Continue reading
-
46 ஆவது சென்னை புத்தகத் திருவிழா
46 ஆவது சென்னை புத்தகத் திருவிழாவில் என்னுடைய புத்தகங்களை ‘பனுவல் புத்தக நிலையத்தில் வாங்கலாம். அரங்கு எண் 199 & 200. நன்றிஅரவிந்த் சச்சிதானந்தம் Continue reading
-
ரஸ்தா- சிறுகதை
சாலை நீண்டுகொண்டே போனது. இன்னும் கொஞ்ச தூரம் என்று சொல்லியே நந்தி அனைவரையும் ஐநூறு கிலோமீட்டர் அழைத்து வந்துவிட்டான். நான்கரை நாட்களாக நடந்தும் விஜயவாடாவை தான் அடைந்திருந்தார்கள். அதே வேகத்தில் நடந்தால் புவனேஸ்வர், ஒடிஷா வழியாக பீஹாரை அடைய இரண்டு வாரங்கள் கூட ஆகலாம். அது நீண்ட வழி தான். சம்பல்புர் வழியாக சென்றால் இன்னும் துரிதமாக ஊரை அடைந்து விடலாம். ஆனால் ஒடிஷா தான் பிரச்சனை இல்லாத வழி, போலீஸ் கெடுபிடி அதிகம் இல்லை, ஆங்காங்கே Continue reading
-
தைப்பூசம்- சிறுகதை
இதை விட அதிக கூட்டத்தை சிறுவயதில் பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு தைப்பூசத்தின் போதும் சானடோரியத்திலிருந்து அம்மா நடக்க வைத்தே அழைத்து செல்வாள். வெகு தூரம் நடந்த களைப்பு கோவில் வாசலில் அண்டாவில் இருக்கும் புளியோதரையைப் பார்த்ததுமே பறந்து போய்விடும்.அம்மா, “சாமி கும்பிட்டா தான் தருவாங்க…” என்பாள்.அது உண்மையில்லை என்பது வளரவளர தான் தெரிய ஆரம்பித்தது. Continue reading
-
கொரோனா நாட்கள்-நெடுங்கதை
இன்று இந்த தளம் தன்னுடைய பத்தாவது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. ஊக்கமளிக்கும் அனைவருக்கும் நன்றி. அரவிந்த் சச்சிதானந்தம் கொரோனா நாட்கள்-நெடுங்கதை ஒன்று வண்டி ஓட்டுவது என்றாலே கப்பல் ஓட்டுவது போல் தான் எனக்கு. கப்பல் ஓட்டுவது கடினமான வேலையா என்று தெரியாது. அவ்வளவு பெரிய கடலில் மிதந்து போவதை நினைக்கும் போது பயமாக தான் இருக்கிறது. அதனால் கப்பல் ஓட்டுவது கடினமான வேலை என்று மனதில் நிலைத்துவிட்டது. நம்மை பயமுறுத்தும் விஷயங்கள் எல்லாமே நமக்கு கடினம் தான் போல! வண்டி ஓட்டும் போதெல்லாம் யாராவது வந்து இடித்துவிடுவார்களா, அல்லது நான் யார் மேலேயாவது இடித்து விடுவேனா என்ற பயம் எப்போதும் இருக்கும். அதனாலேயே எனக்கு வண்டி ஓட்டுவது என்றாலே கப்பல் ஓட்டுவது போல் தான். கப்பல் ஓட்டுவது கடினமான வேலையா என்று தெரியாது. அவ்வளவு பெரிய கடலில்… சரி, கப்பலுக்கு நங்கூரம் பாய்ச்சி நிறுத்திவிடுவோம். வண்டி தான் பயம். வண்டியே அதிகம் ஓட்டிடாத எனக்கு கொரோனா காலத்தில் தினமும் வண்டி ஓட்ட வேண்டும் என்றதும் கூடுதல் பயம் வந்துவிட்டது. அலுவலகத்தில் நான் வேலைக்கு வந்தே ஆகவேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். என் வீடு கிழக்கு தாம்பரத்தில் இருந்தது. நான் வேலை செய்யும் வங்கியோ மந்தைவெளியில். இடைப்பட்ட இருபத்தைந்து கிலோ மீட்டரை கடக்க வண்டி ஓட்டி ஆக வேண்டும். குரோம்பேட்டையிலிருந்து செல்லும் நண்பர் எம்.வியின் வண்டியில் ஏறிக்கொள்ளலாம் என்று பார்த்தேன். “சோசியல் டிஸ்டன்சிங் ப்ரோ. சாரி ப்ரோ” என்று சொல்லிவிட்டார். “மாஸ்க் க்ளவுஸ்லாம் போட்டுகிட்டு தான் ப்ரோ வருவேன்” அவர் சமாதானம் ஆகவில்லை. “வீட்ல குழந்தைங்கலாம் இருக்கு ப்ரோ. எனக்கு வந்தா நான் தாங்குவேன். ஆனா என் மூலமா அவங்களுக்கு வந்திரக் கூடாது! நீங்க வேற உங்க எதிர்வீட்டுக்காரு வெளிநாட்ல இருந்து வந்திருக்காருன்னு சொல்றீங்க…” என்றார். “எதிர்வீட்டுகாரு வெளிநாட்ல இருந்து வரல ப்ரோ. அவர் வீட்டு காரு தான் வெளிநாட்ல இருந்து வந்திருக்கு. ஜெர்மன் கார்” என்றேன். கொஞ்சம் சுதாரித்துக்கொண்டு கேட்டார், “அதான். கார்ல் கொரோனா வரும்ல…!” “இல்ல. Continue reading
-
லவ் @ 30- சிறுகதை
21G-யில் ஏறுவது என்பது இப்போதெல்லாம் பெரும் போராட்டமாக ஆகிவருகிறது. யார்யாரோ எங்கிருந்தோ வந்து இந்த நகரத்தில் குடியேறிக்கொண்டே இருக்கிறார்கள். இந்த நகரம் அத்தனைப் பேரையும் முகம் சுழிக்காமல் தாங்கிக்கொள்கிறது. அவ்வளவு பேருக்கும் இங்கு இடமிருக்கிறது என்பது ஆச்சர்யம் தான். ஆனால் பேருந்தில்தான் இடமிருப்பதில்லை. அதுவும் 21G-யில் இரண்டு கால்களையும் ஊன்றி நிற்க இடம் கிடைத்தாலே போதும். ஆனந்தம் தான். அமர இடம் கிடைத்தால் பேரானந்தம். ஆனால் ஆனந்தம் போதும். இந்த நகரத்தின் பேருந்துகள் ஆசையை அடக்கக் கற்றுத்தரும் Continue reading