aravindh sachidanandam short stories
-
தைப்பூசம்- சிறுகதை
இதை விட அதிக கூட்டத்தை சிறுவயதில் பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு தைப்பூசத்தின் போதும் சானடோரியத்திலிருந்து அம்மா நடக்க வைத்தே அழைத்து செல்வாள். வெகு தூரம் நடந்த களைப்பு கோவில் வாசலில் அண்டாவில் இருக்கும் புளியோதரையைப் பார்த்ததுமே பறந்து போய்விடும்.அம்மா, “சாமி கும்பிட்டா தான் தருவாங்க…” என்பாள்.அது உண்மையில்லை என்பது வளரவளர தான் தெரிய ஆரம்பித்தது. Continue reading
-
அவள்- சிறுகதை
அன்று கோவிந்தசாமி வரவில்லை. அவர் எங்கள் தெருவுக்கு வந்த இந்த ஒரு வருடத்தில் அன்றுதான் அவர் முதன்முதலில் வரவில்லை. அவருடன் வேலைக்கு வரும் காக்கையன் வராமல் போனாலும், கோவிந்தசாமி வந்துவிடுவார். காலை நான் வாசலில் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருக்கும் போது “அம்மா குப்பை” என்று ஒரு குரல் கேட்கும்போதே சொல்லிவிடலாம் மணி சரியாக ஏழு என்று. சிலநாட்கள் நான் வாசலில் இல்லாமல் உள்ளே வேலையாக இருந்தால், “சார்” என்று சன்னமாக ஒரே ஒரு குரல் மட்டும் Continue reading
-
சுழற்சி- சிறுகதை
இன்னும் ஆறுமாதங்கள் தான் வீட்டில் அவகாசம் கொடுத்திருக்கிறார்கள். அதற்குள் எதுவும் நடக்காமல் போனால், அவன் மீண்டும் ஏதாவது வேலைக்கு செல்ல வேண்டும். வருங்காலம் அப்போது தான் பிரகாசமாக இருக்கும் என்றுஅப்பா சொல்கிறார். அவர் சொல்வதும் உண்மைதான் என்று எண்ணினான். அவன் வேலையைவிட்டு வந்து ஒன்றரை வருடங்கள் ஒடிவிட்டது. இன்னும் சினிமாவில் எதையும் சாதித்ததாக ஞாபகமில்லை. ஒரு படத்தில் ஒரே ஒரு நாள் மட்டும் உதவி இயக்குனராக வேலை செய்துவிட்டு திரும்பிவிட்டான். அதுவும் பீல்ட் க்ளியர் என்று கத்துவது Continue reading
-
ஆவி எழுத்தாளன் (எ) தமிழ் சினிமா கதாசிரியன்- சிறுகதை
‘ஆவி எழுத்தாளன்’ என்றதும் அமானுஷ்ய சக்திகளைப் பற்றி எழுதி மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிப்பவன் என்றுதான் பலரும் நினைக்கின்றனர். பிளாட்பாரக் கடைகளில் கிடைக்கும் ‘அமானுஷ்ய உலகம்’ புத்தகத்தை எழுதுபவன் சத்தியமாக நான் இல்லை. பதினைந்து ரூபாய் கொடுத்து அந்தப் புத்தகத்தை நானும் வாங்கிப் படித்திருக்கிறேன். ‘முப்பது நாட்களில் ஆங்கிலம் கற்பது எப்படி’ என்பது போல ‘முப்பது நாட்களில் சூனியம் வைப்பது எப்படி’ என்று அந்தப் புத்தகத்தில் நிறைய இருக்கும். வெள்ளைச்சட்டை போட்ட ஒரு கருப்பு உருவத்தின் படத்தைப் Continue reading
-
புகைப்படக்கலைஞன்- சிறுகதை
மெஹதிபட்டனம் பேருந்து நிலையம் சற்று விசித்திரமாக தான் இருந்தது. ஒரு பேருந்து நிலையம் போலும் இல்லாமல் மைதானம் போலும் இல்லாமல், ஒரு நெடுஞ்சாலை தாபாக் கடை போல் இருந்த அந்த இடத்தில், அவனை கவரும் வண்ணம் எதுவும் இல்லாததால், கேமராவை பைக்குள் வைத்துவிட்டு, கோல்கொண்டா செல்லும் பேருந்தை எதிர்பார்த்துக் காத்திருந்தான். ஊர்ஊராக சென்று புகைப்படம் எடுக்க வேண்டும் என்று ஆசைதான். வாரம் ஆறுநாட்கள் வேலைக்குச் செல்ல வேண்டும். ஒரு பொதுத்துறை வங்கியில் துணை மேலாளர் வேலை. திறமையற்ற Continue reading
-
நிகழ்தகவுகள் – சிறுகதை
உடல் களைத்திருந்தது. எங்காவது சிறிது நேரம் அமர்ந்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது. இன்னும் சிறிது தூரம் நடந்தால் பூங்காவையே அடைந்துவிடலாம் என்பதால் முயன்று நடந்தான். சாலை ஓரமாக ஒரு கிழவர் பல வெள்ளை சட்டைகளை அடுக்கி வைத்து வியாபாரம் செய்துக் கொண்டிருந்தார். அந்த பக்கம் வரும் போதெல்லாம் அவரை பார்த்திருக்கிறான். அவரிடம் யாரும் சட்டை வாங்கி அவன் பார்த்ததில்லை. அவருக்கு என்ன வருமானம் வரும் என்ற கேள்வி மட்டும் அவரை பார்க்கும்போதெல்லாம் மனதில் எழும். எப்படி Continue reading
-
ஒரு நாய் சற்றே இடைவெளி விட்டு என்னைப் பின்தொடர்ந்து கொண்டே வருகிறது- சிறுகதை
ஒரு நாய் சற்றே இடைவெளி விட்டு என்னைப் பின்தொடர்ந்து கொண்டே வருகிறது. ஆம். அது ஏன் அப்படி செய்கிறது என்று நான் கேட்டதே இல்லை. முதலில் அந்த நாய் எப்படி என் பின்னே வந்தது என்று சொல்லிவிடுகிறேன். வழக்கம் போல் நான் அன்றும் நடைபயிற்சியில் ஈடுப்பட்டிருந்தேன். ஒவ்வொரு நாளும் குறைந்தது ஐந்து கிலோமீட்டர் நடக்காமல் போனால் உடல் உழைப்பே இல்லாத என் உடம்பு ஊதி நாளையே செத்துவிடுவேனோ என்ற எண்ணம் என்னுள் தலைத்தூக்கிடும். அதைத் தவிர்ப்பதற்காகவே நான் Continue reading