aravindh sachidanandam

  • ஏன் புத்தகத் திருவிழா அவசியம்!

    பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் (15.01.2012) புத்தகத் திருவிழா சென்றதாக பேஸ்புக் நினைவுபடுத்துகிறது. பெரிய முன்முடிவுகளின்றி வெவ்வேறு அரங்குங்களுக்குள் நுழைந்து சிறிது ஆராய்ந்து புத்தகங்களை வாங்கும் வாய்ப்பினை புத்தகத் திருவிழா தான் உருவாக்கித் தருகிறது. புத்தக வாசகர்கள் அனைவருக்கும் இது முக்கியமான வாய்ப்பு என்பேன். 2007 ஆம் ஆண்டு முதன்முதலில் பள்ளி நண்பர் தான் புத்தகத் திருவிழாவிற்கு இரண்டு நுழைவு சீட்டுகள் இருப்பதாக சொல்லி அழைத்து சென்றார்.அன்றிலிருந்து வருடாவருடம் எங்கிருந்தாலும் புத்தகத் திருவிழாவிற்கு விடாமல் செல்வதற்கு Continue reading

  • ஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி- மீண்டும்

    ஒரு திரைக்கதையை இப்படி தான் எழுத வேண்டும் என்று யாரும் சொல்லிட முடியாது. ஆனால் திரைக்கதை எழுத வேண்டும் என்கிற அகத்தூண்டல் இருந்தும் எங்கிருந்து தொடங்குவது என்கிற தயக்கம் இருப்போருக்கு ஒரு எளிய push தேவைப்படுகிறது. பல திரைக்கதை எழுதி பயிற்சி பெற்றோருக்கு நாம் எழுதியிருப்பது சரியா என்கிற குழப்பம் வரும்போதோ, அல்லது கதையை மேற்கொண்டு எப்படி நகர்த்துவது என்கிற தடங்கல் வரும்போதோ ஒரு வழிகாட்டுதல் தேவைப்படுகிறது. இதையெல்லாம் சாத்தியப்படுத்த திரைக்கதை எழுதுதல் பற்றி எளிய மொழியில் Continue reading

  • முதல் பிரசுரம்

    பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் தான் முதல் கட்டுரை அச்சில் வெளியானது. இத்தனை ஆண்டுகளில் புனைவு, அபுனைவு அனைத்திலும் எழுதும் ‘Process’ தான் மிகவும் மகிழ்ச்சி தருவதாக இருக்கிறது. அது சென்றடையும் தூரத்தை காலம் பார்த்துக் கொள்ளட்டும். இந்த ஆண்டு ஒரு நாவலையும், ஒரு துப்பறியும் குறுநாவலையும் எழுதி முடித்துள்ளேன். அடுத்து chritsopher vougler- யின் Writer’s Journey-ஐ மையப்படுத்தி கட்டுரைகள் எழுத தொடங்கி இருக்கிறேன். வாழ்வின் அழுத்தங்களுக்கிடையே,பிடித்த ஒன்றை தொடர்ந்து செய்துகொண்டுருப்பதை விட சந்தோஷம் Continue reading

  • பதினைந்தாவது ஆண்டில்…

    பதினைந்தாவது ஆண்டில்…

    இன்றோடு என்னுடைய இணையதளம் தொடங்கி பதினான்கு ஆண்டுகள் நிறைவடைகிறது என்பதை பகிர்வதில் மகிழ்கிறேன். என்னுடைய பெரும்பான்மையான படைப்புகள் இந்த தளத்தில் நேரடியாக எழுதப்பட்டவையே. அந்த வகையில் இந்த தளம் தான் எனக்கான சிற்றிதழ், இணைய இதழ், மாத இதழ் எல்லாமே. தொடர்ந்து எழுத வேண்டும் என்கிற உத்வேகத்தில் 2011 இல் தொடங்கப்பட்ட இந்த தளம், நோக்கத்திலிருந்து பிறழாமல் பயணிப்பதற்கும் பல புதிய முயற்சிகளை மேற்கொள்வதற்கும் உறுதுணையாக இருந்திருக்கிறது. பல வகையான கதைகள், மொழிபெயர்ப்புகள், திரைக்கதை கட்டுரைகள், புத்தக Continue reading

  • 3BHK திரைப்படம்

    என்னுடைய ‘3BHK வீடு’ என்கிற சிறுகதை திரு. அருண் விஷ்வா அவர்களின் தயாரிப்பில்,திரு. ஶ்ரீ கணேஷ் அவர்களின் எழுத்து-இயக்கத்தில் திரைப்படமாகி இருக்கிறது என்பதை பகிர்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். ‘3BHK வீடு’ ஒரு எளிய குடும்பத்தின் முக்கிய பிரச்சினையை, கனவை உணர்வுபூர்வமாக பேசும் கதை. தினமணி சிவசங்கரி போட்டியில் இரண்டாவது பரிசு பெற்ற கதை என்பதில் கூடுதல் சந்தோஷம். சமகால இளைஞர் ஒருவரால் எழுதப்பட்ட சிறுகதை, அதே காலத்தில் ஒரு சமகால இளைஞரால் தழுவப்பட்டு வெள்ளித்திரையை அடைவது என்பதைபுனைவு Continue reading

  • உலக புத்தக தின அன்பளிப்பு

    என்னுடைய எழுத்து பயணத்திற்கு ஆதரவு அளித்து வரும் அனைவருக்கும் அன்பும் நன்றியும். உலக புத்தக தினத்தை முன்னிட்டு என்னுடைய கீழ்கண்ட புத்தகங்களை இன்றிலிருந்து அடுத்த மூன்று நாட்களுக்கு கிண்டிலில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். சிறுகதைத் தொகுப்பு: 1.3BHK வீடு நாவல்கள்: 1.தட்பம் தவிர்2.ஊச்சு3.ஒரு வைரம் ஒரு காரிகை மற்றும் சில கயவர்கள் குறுநாவல்/நெடுங்கதைகள்: 1.இரண்டு கலர் கோடுகள்2.நனவிலி சித்திரங்கள்3.கடைசி நாள் Click here to download நன்றிஅரவிந்த் சச்சிதானந்தம்23.04.2025 Happy World Bookday Continue reading

  • மேடம்- சிறுகதை

    நான் மேடமை முதல் முதலில் சந்தித்தது சிசிடிவி திரையில் தான். சந்தித்தது என்று சொல்வதை விட பார்த்தது அல்லது எனக்கு மேடமின் அறிமுகம் கிட்டியது என்று சொல்வது தான் பொருத்தமாக இருக்கும்.  அது ஒரு வியாழக்கிழமை. ஒவ்வொரு வியாழக்கிழமையும் குறைந்தது ஒரு வாகனக் கடனாவது கொடுக்க வேண்டும் என்று எங்களுடைய பிராந்திய மேலாளர் உத்தரவிட்டிருந்தார். அனுதினமும் ஏதாவது ஒரு இலக்கு இருந்தது. திங்கட்கிழமை என்றால் வாராக்கடனை வசூலிக்க வேண்டும். செவ்வாய் கிழமை புதிய காப்பீடுகளை இணைக்க வேண்டும். Continue reading

  • லக்கி பாஸ்கர் – கொஞ்சம் திரைக்கதை

    குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக தவறான வழியில் பணம் ஈட்ட நினைக்கும் ஒரு சாதாரணன், பேராசையால் ஆட்கொள்ளப்பட்டு ஒருகட்டத்தில் பணம் ஈட்டுவதை மட்டுமே தன் நோக்கமாக மாற்றிக் கொள்கிறான். இது பிரேக்கிங் பேட்டின் ஒன்லைன். லக்கி பாஸ்கர் படத்தின் ஒன் லைன்னும் இதுவே.  பிரேக்கிங் பேட்டின் வால்ட்டர் வைட், தன்  திறமைக்கான அங்கீகாரம் தனக்கு கிட்டவில்லை என்கிற ஆதங்ககத்திலேயே  வாழ்பவன். ஒரு தருணத்தில் அந்த ஆதங்கம் கோபமாக மாற, தன் திறமையை தவறான வழியில் செலுத்தி பணம் Continue reading

  • பால்கனியுடன் கூடிய வீட்டை விரும்பும் ஒரு பெண்: குறுங்கதைகள்

    பால்கனியுடன் கூடிய வீட்டை விரும்பும் ஒரு பெண்: குறுங்கதைகள்

    என் இனையதளத்தின் பதின்மூன்றாவது பிறந்த நாளான இன்று,என்னுடைய அடுத்த (குறும்)புத்தகத்தை வெளியிடுவதில் மகிழ்கிறேன். பால்கனியுடன் கூடிய வீட்டை விரும்பும் ஒரு பெண்: குறுங்கதைகள் தொகுப்பு இந்த குறுங்கதைகள் தொடர்ந்து பத்து இரவுகள் எழுதப்பட்டவை. இதன் கதை மாந்தர்கள் அப்பழுக்கற்றவர்கள் அல்ல. அவர்கள் மிகச் சாதாரணமானவர்கள். அன்றாட வாழ்வின் சிக்கல்களில் சிக்குண்டு தவிப்பவர்கள். சாதாரண மனிதர்களின் எளிய ஆசைகள், அதை நிறைவேற்றிக் கொள்ளும் தவிப்பு, அது நிறைவேறாமல் போகும் போது ஏற்படும் ஏமாற்றம் ஆகியவை இந்த கதைகளில் அழகாக Continue reading

  • பதின்மூன்று ஆண்டு பயணம்

    பதின்மூன்று ஆண்டு பயணம்

    இன்று இந்த இணையதளம் தன்னுடைய பதின்மூன்றாம் ஆண்டை நிறைவு செய்கிறது என்பதை பகிர்வதில் மகிழ்கிறேன். Consistency தான் ஒரு படைப்பாளிக்கு இருக்க வேண்டிய முக்கிய quality என்று நினைக்கிறேன். அந்த வகையில் தொடர்ந்து பதிமூன்று ஆண்டுகள் இந்த தளத்தில் இயங்க முடிந்திருக்கிறது, எழுத முடிந்திருக்கிறது என்பதில் கூடுதல் மகிழ்ச்சி. எழுத தொடங்கிய ஆரம்ப காலகட்டங்களில் முக்கியமாகப்பட்ட பல விஷயங்கள் பின்னாளில் முக்கியமற்று போய்விட்டன. பிடித்ததை தொடர்ந்து எழுத முடிகிறது என்பதே இப்பொதெல்லாம் முக்கியமான விஷயமாக இருக்கிறது. சொல்வதற்கு Continue reading