விமர்சனம்
-
ஹாலிவுட் ஓநாய்-மார்டின் ஸ்கார்ஸேஸி
அமெரிக்க புதுஅலை சினிமாவின் முக்கிய படைப்பாளியாக கருதப்படும் மார்டின் ஸ்கார்ஸேஸியின் இயக்கத்தில், அண்மையில் வெளிவந்திருக்கும் படம் வொல்ஃப் ஆஃப் வால் ஸ்ட்ரீட். ஜோர்டான் பெல்ஃபோர்ட் என்கிற பங்குசந்தை தரகருடைய வாழ்க்கையை பற்றி இந்த படம் பேசுகிறது. தொண்ணூறுகளில் அமெரிக்க பங்குசந்தையை கலக்கியவர் பெல்ஃபோர்ட். பல புதுவித மோசடிகளை செய்து பங்குச்சந்தையில் பல கோடி ரூபாய் லாபம் ஈட்டிய அவர் தன்னுடைய அனுபவங்களை புத்தகமாக எழுதினார். அந்த புத்தகம் தான் இப்போது படமாக வந்திருக்கிறது. படத்தில், ஜோர்டான் பெல்ஃபோர்ட்டாக நடித்திருக்கிறார் Continue reading
-
கிராவிட்டியும் ஆஸ்காரும்
கடந்த ஆண்டு வெளியான லைஃப் ஆப் பை படத்திற்கும் இந்த ஆண்டு வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் கிராவிட்டி படத்திற்கும் ஒரு ஒற்றுமை உண்டு. நடுக்கடலில் தன்னந்தனியாக தத்தளிக்கும் சிறுவனை பற்றிய படம் லைஃப் ஆஃப் பை. விண்வெளியில் உயிருக்கு போராடும் பெண்ணை பற்றிய சயின்ஸ் பிக்ஷன் படம், கிராவிட்டி. இரண்டு படங்களுமே, தன்னம்பிக்கை இருந்தால் எத்தகைய ஆபத்தான சூழலையும் எதிர்கொள்ளலாம் என்ற கருத்தையே முன்வைக்கின்றன. லைஃப் ஆப் பை பல ஆஸ்கார் விருதுகளை குவித்தது போல கிராவிட்டி Continue reading
-
தி குட் ரோடும் ஆஸ்காரும்
1956-ஆம் ஆண்டு தொடங்கி ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்க படங்கள் அல்லாத மற்ற படங்களை அங்கீகரிக்கும் வகையில் சிறந்த வெளிநாட்டு திரைப்படம் என்றொரு விருதை ஆஸ்கார் குழுவினர் வழங்கி வருகின்றனர். அந்த விருதிற்காக ஒவ்வொரு நாடும் போட்டி போட்டுக் கொண்டு ஆஸ்காருக்கு படங்களை அனுப்புவது வழக்கம். இந்த ஆண்டு அதிக சர்ச்சைகளுக்கும் பாராட்டுகளுக்குமிடையே “தி குட் ரோட்” என்கிற குஜராத்தி திரைப்படத்தை ஆஸ்காருக்கு பரிந்துரை செய்திருக்கிறது இந்திய திரைப்பட கூட்டமைப்பு. தொண்ணூறுகளின் தொடக்கத்திலேயே குஜராத் திரைத்துறை அழிவை சந்திக்க Continue reading
-
ஆழம் கட்டுரைகள்
ஆழம் இதழில் எழுதிய கட்டுரைகள். http://www.aazham.in/?author=96 நன்றி Continue reading
-
யே ஜவானி ஹே தீவானி
இந்திய சினிமாவில் காதல் கதைகளுக்கு பஞ்சமில்லை. நாயகனும் நாயகி சந்தித்து, காதலிக்கலாமா வேண்டாமா என யோசித்து, பின் காதல் செய்வதுதான் இந்திய படங்களின் வழக்கமான திரைக்கதை. அந்தவகையில், யே ஜவானி ஹே தீவானி எந்த வகையில் மாறுபட்டிருகிறது என்று பார்க்கலாம். கபீர் (ரன்பீர் கபூர்), அவி (ஆதித்யா ராய் கபுர்), அதித்தி (கல்கி கோய்ச்லின்) ஆகிய மூவரும் நெருங்கிய நண்பர்கள். விடுமுறையை கழிக்க மணாலி செல்லலாம் என முடிவெடுகின்றனர். இவர்கள் பயணத்தில் வந்து இணைகிறார் நைனா (தீபிகா Continue reading
-
கடல்
உதிரிப்பூக்கள், cape Fear, கடல்- இந்த மூன்று படத்த்திருக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. கதையில் அல்ல…. உதிரிப்பூக்கள் ‘விஜயன்’, Cape fear ‘Robert De Niro’ , கடல் ‘அர்ஜுன்’-இந்த மூன்று கதாப்பாதிரமும் ஒரே மாதிரியாக வடிக்கப்பட்டவை. இறுதி வரை தான் பிடித்த பிடியில் உறுதியாக இருக்கும் கதாப்பாத்திரங்கள் இவை மூன்றும். கெட்டவனாக இருப்பதே எளிது என எண்ணிக் கொண்டு மற்றவர்களை கேலியாக பார்க்கும் கதாபாத்திரங்கள் இவை… உதிரிப்பூகளில் விஜயன் தனித்து தெரிந்ததை போல் இதில் அர்ஜுன் Continue reading
-
பர்ஃபி
எதிர்பார்ப்புகள் ஏமாற்றமளிக்கும் என்பதற்கிணங்க, மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வந்த பல திரைப்படங்கள் தோல்வியை தழுவியது நமக்கு நினைவிருக்கலாம். ஆனால் சில படங்கள் மட்டுமே எதிர்பார்த்ததைவிட பல மடங்கு சிறந்ததாக அமைந்து கால புத்தகத்தில் தனக்கென்று ஒரு இடத்தை நிரந்தரமாக பிடித்துக் கொள்ளும்.அவ்வாறான ஒரு படமே ‘பர்ஃபி’. இந்த படத்தின் ட்ரைலரே பல வகையான எதிர்பார்ப்புகளை உருவாக்கியது. பாலிவுட்டின் முன்னணி கதாநாயகிகள் எல்லாம் கவர்ச்சி பாதையை தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டிருக்க, கவர்ச்சியாக நடித்துக் கொண்டிருந்த பிரியங்கா சோப்ரா மனநலம் குன்றிய Continue reading
-
மாற்றான்
சில படங்கள் முதல் காட்சியிலிருந்தே மெதுவாக நகர்ந்து, இது நல்லப் படம்தானா என்பன போன்ற சந்தேங்களை ஏற்படுத்தி, இறுதியில் சிகரம் வைத்தாற்போல் அருமையாக நிறைவுபெற்று, படமென்றால் இதுதான் படமென்று நம்மை சொல்லச் செய்து, நம்மை எழுந்து நின்று கைத்தட்ட வைக்கும். சில படங்கள் தொடக்கம் முதலே நல்லப் படம் போல காட்சியளித்து, தனக்கே உரித்தான ஜிகுணா வேலைகளையெல்லாம் செய்துக் கொண்டு, இறுதியில் ‘இதெல்லாம் ஒரு படமா’ என்று எண்ண வைக்கும். ‘மாற்றான்’ இதில் இரண்டாவது வகை. ஓட்டிப் Continue reading
-
முகமூடி
உலகில் எத்தனையோ சூப்பர் ஹீரோ படங்கள் எடுக்கப் பட்டுவிட்டன. எல்லா சூப்பர் ஹீரோக்களும் ஏதோ ஒரு வகையில் extraordinary power கொண்டிருப்பார்கள். அவர்கள் extraordinary league-ஐ சார்ந்தவர்களாகவோ, வேற்று கிரகத்தை சார்ந்தவர்களாகவோ, நிழல் உலகத்தை சார்ந்தவர்களாகவோ, மியூட்டண்ட்களாகவோ (mutants) இருப்பார்கள்.Iron Man மட்டும் சற்று வித்யாசமானவர். ஆனால் மிக சாதாரண மனிதன் ஒருவன் எந்த ஒரு அமானுஷ்ய சக்தியின் உதவியின்றி , தன் சொந்த உந்துதலின் அடிப்படையில் மிகவும் விளையாட்டாக சூப்பர் ஹீரோவாக உருவெடுப்பதுபோன்ற கதையை இதுவரை Continue reading
-
பில்லா II-ஒரு பார்வையும், தமிழ் ரசிகர்களுக்கு சில வேண்டுகோள்களும்
ஒரு படத்தை பற்றிய விமர்சனம் அந்த படத்தை எந்த வகையிலும் பாதிக்கப் போவதில்லை. படம் பார்ப்பவர்கள் பார்த்துக் கொண்டுதான் இருப்பார்கள். பார்க்க விரும்பாதவர்கள் எந்த காலத்திலும் பார்க்கப் போவதில்லை. ஆனால் முத்தாய்ப்பாக வரும் நல்ல படங்களை கொண்டாடவேண்டிய கடமை நமக்கிருக்கிறது. அதை சமயத்தில் பில்ட்-அப்போடு வந்து ஊரை ஏமாற்ற முயற்சிக்கும் படங்களை அலச வேண்டிய பொறுப்பும் நமக்கிருக்கிறது.கால புத்தகத்தில் படங்களின் இருப்பை பற்றிய கருத்துக்களை பதிவு செய்யவேண்டியது ரசிகர்களின் கடமை… இங்கு ரசிகர்கள் என்று குறிப்பிடப்படுபவர்கள், திரைப்படங்களின் Continue reading