புனைவுகள்
-
குறுங்கதை-3 -வீடு
வீடு ராணியம்மாவிற்கு கால் தரையில் இல்லை. குடிகார கணவனை வைத்துக் கொண்டு மூன்று பிள்ளைகளை கரை சேர்த்தபோது கிடைக்காத சந்தோசம், இப்போது ஐம்பது வயதில் எட்டிப்பார்க்கிறது. பாத்திரங்களை வேகவேகமாக கழுவினாள். பிரியாணி செய்த பாத்திரம். எப்போது பிரியாணி செய்தாலும் அவளுக்கு ஒரு டிபன் அந்த வீட்டு எஜமானி கொடுத்துவிடுவாள். அதுவும் அவளாகவே அல்ல. ராணியம்மாள் பாத்திரத்தை கழுவி முடித்துவிட்டு, “என்னமா இன்னைக்கு பிரியாணியா!” என்று கேட்பாள. அந்த கேள்விக்காகவே காத்திருந்தவளாய் எஜமான பெண்மணி குஸ்காவை மட்டும் கொடுப்பாள். Continue reading
-
குறுங்கதை-1 – சைக்கிள் சித்தப்பா
சைக்கிள் சித்தப்பா சைக்கிள் மிதிக்கும் அளவிற்கு உடலில் தெம்பில்லை. சைக்கிளை போட்டுவிடவும் மனமில்லை. அப்பாவின் நியாபகமாக அவனிடம் இருந்த ஒரே பொருள் அது தான். அதனாலேயே சைக்கிளை தள்ளிக் கொண்டே நடந்தான். உச்சி வெயிலில் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைப்பது கடினமாக தான் இருந்தது. ஒரு வாய் சோறு கிடைத்தால் தேவலை.பணமில்லை. மார்க்கெட்டில் நுழைவாயில் ஒரமாக இருந்த அடிபம்ப்பில் தண்ணீரை குடித்துவிட்டு காந்தி மார்க்கெட்டினுள் நுழைந்தான். காரணமேயின்றி மார்க்கெட்டில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. எதிரே வந்த வெள்ளை வேட்டிக்காரரை Continue reading
-
ஒரு வைரம் ஒரு காரிகை மற்றும் சில கயவர்கள்-நாவல்
வணக்கம். என்னுடைய அடுத்த நாவல் ‘ஒரு வைரம் ஒரு காரிகை மற்றும் சில கயவர்கள்’ வெளியாகி இருக்கிறது என்பதை பகிர்வதில் மகிழ்கிறேன். நன்றி கதைச்சுருக்கம் விட்டிருந்தால் மணி காதல் தோல்வியில் தாடி வளர்த்து, தன் முன்னால் காதலி தீபிகாவை நினைத்து சோகப்பாடல் பாடி வாழ்கையை கழித்திருப்பான். ஆனால் விதி யாரை விட்டது! அவன் நண்பர்கள் ‘தோழர்’ பழமும், குரங்கு கார்த்தியும் தீபிகாவை கடத்தும்படி துர்போதனை செய்கிறார்கள்.***தீபிகாவின் வீட்டில் இருக்கும் ராசியான வைரத்தை திருடிவந்து பூஜை செய்தால் பார் Continue reading
-
மெட்ராஸ் கதைகள்
மெட்ராஸ்’ தான், 2015-க்கு பிறகுநான் எழுதிய பெரும்பாலான கதைகளில் பேசு பொருளாக இருந்திருக்கிறது. அது எனக்கு தெரிந்த, நான் வாழும் மெட்ராஸ். எதிலிருந்து எதுவரை மெட்ராஸ் நீள்கிறது என்பதில் ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து இருக்கக் கூடும். மந்தவெளியில் இருப்பவர்களுக்கு தாம்பரம் வெளியூராக தெரியும். என்னை போன்ற தாம்பரம் வாசிகளுக்கு கிண்டியை தாண்டி போவதே நெடும் பயணமாக தோன்றும். வெவ்வேறு அனுபவங்களின் தொகுப்பே இந்த பெருநகரம். அந்த அனுபவங்களின் வெளிப்பாடே என்னுடைய ‘மெட்ராஸ் கதைகள்’. கண்டதை உணர்ந்ததை மனதிற்கு Continue reading
-
3 பி.ஹெச்.கே வீடு- சிறுகதை
தினமணி-சிவசங்கரி சிறுகதை போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற என்னுடைய ‘3 பி.ஹெச்.கே வீடு’ என்கிற சிறுகதை தினமணி கதிரில் வெளியாகி இருக்கிறது. கதையை இணையத்தில் வாசிக்க இங்கே சொடுக்கவும். Continue reading
-
நனவிலி சித்திரங்கள்- கிண்டில் பதிப்பு
ஒரு மனநல காப்பகம், சில மனிதர்கள், பல வகையான மனபிறழ்வுகள்…. நனவிலி சித்திரங்கள்- குறுநாவல் தற்போது கிண்டிலில் கிண்டிலில் வாங்க இங்கே சொடுக்கவும் Continue reading
-
44- வது சென்னை புத்தக கண்காட்சி- என் புத்தகங்கள்
அந்தாதி வெளியீடாக வந்திருக்கும் என்னுடைய பின்வரும் புத்தகங்கள் 44- வது சென்னை புத்தக கண்காட்சியில் பனுவல் அரங்கில் (அரங்கு எண் 166,167) கிடைக்கும். நனவிலி சித்திரங்கள்- குறுநாவல் இரண்டு கலர் கோடுகள் – குறுநாவல் மற்றும் நெடுங்கதைகள் கொஞ்சம் திரைக்கதை, ஆக்சன் திரைக்கதை- கட்டுரை தொகுப்புகள் ஊச்சு- ஹாரர் துப்பறியும் நாவல் நன்றி அரவிந்த் சச்சிதானந்தம் Continue reading
-
நனவிலி சித்திரங்கள்- குறுநாவல்
“நான் நல்லாதான் இருக்கேன். சுத்தி இருக்கவங்களுக்கு தான் ஏதோ பிரச்சனை. அதனாலேயே எனக்கு யாரையும் புடிக்கல. இவங்க எல்லாத்தையும் பைத்தியக்கார ஹாஸ்ப்பிட்டல்ல சேத்துட்டு எங்கயாவது போய்டலாம்னு பாத்தேன். ஆனா அவ்ளோ பேரையும் சேர்க்க ஹாஸ்ப்பிட்டல்ல இடம் இல்ல. அப்பறம் தான் புரிஞ்சிச்சு, இந்த உலகம் தான் பெரிய பைத்தியக்கார ஹாஸ்பத்திரினு. அதான் நான் இங்க வந்து சேர்ந்துக்கிட்டு அவங்கள வெளிலயே விட்டுட்டேன்”- குறுநாவலிலிருந்து என்னுடைய அடுத்த குறுநாவல், அந்தாதி பதிப்பகத்தின் மூலம் சென்னை புத்தக கண்காட்சி சிறப்பு Continue reading