கவிதை
-
யாரோ ஒருவர்
உங்கள் குழந்தையை முதன்முதலில் நீங்கள் கையில் வாங்கும் அதே நேரத்தில் தான் குழந்தை வேண்டி நிற்கும் யாரோ ஒரு பெண்ணுக்கு கரு கலைந்து போகிறது உங்கள் வீட்டு பிள்ளைகளுக்கு நீங்கள் பிரம்மாண்டமாக திருமணம் நடத்தி வைக்கும் நேரத்தில் தான் யாரோ ஒருவர் வரணை எதிர்ப்பார்த்து வறுமையில் காத்துகொண்டிருக்கிறார் உங்கள் காதல் உங்களுக்கு சலித்து போய் நீங்களாகவே பிரியும் நேரத்தில் தான் யாரோ ஒரு காதல் ஜோடி அதே காதலுக்காக வெட்டிக் கொல்லப்படுகிறார்கள் நீங்கள் முதலீட்டிற்காக மூன்றாவது வீடு Continue reading
-
ஓரிரு
என்னிடம் காசில்லை இதுவா கவிதை என்ன செய்ய செத்துமடி எவ்வளவு செலவாகும் இதுதான் கவிதை விருது வேண்டும் எவ்வளவு கொடுப்பாய் *** புத்தகம் பதிப்பிக்கனும் எழுத்தாளர் ரா.கு. படிச்சிருக்கியா? இதுவரை இல்ல அவரையே இன்னும் படிக்கலையா? நீயெல்லாம் எப்படி எழுதுவ? கையில தான். *** தம்பி என்ன வேலை பண்ணுது? கதை எழுதுறேனுங்க அது சரி, பொழப்புக்கு என்ன பண்றீங்க? கதை எழுதுறதுதாங்க என் வேலை பொழப்பு எல்லாம் மாசம் கைக்கு என்ன வரும் வலி வரும். Continue reading
-
எதையாவது எழுதலாம்
எதையாவது எழுதலாம் எழுதவே பிறந்தேன் எனலாம் யாரவது பதிப்பாளரை நட்பாக்கிக் கொள்ளலாம் புத்தகம் வெளியிடலாம் ராயல்டி தரமாட்டார் சண்டை போடலாம் விருது வாங்கிக் கொடுப்பார் வாயை மூடிக்கொள்ளலாம் புரட்சி என்று நினைத்து எழுதலாம் பிரச்சனையா புனைப்பெயர் வைத்துக் கொள்ளலாம் எதையாவது எழுதிக் கொண்டே இருக்கலாம் யாருக்கும் புரியாது பரவாயில்லை பின்நவீனத்துவம் என்று சொல்லிகொள்ளலாம் Continue reading
-
ஒன்றுமில்லை- கவிதை
என் வீட்டின் மேல் வட்டமிட்ட அந்த புறா முட்டையிட்டு சென்றது ஒருநாள்… முட்டையை நான் பாதுகாத்தேன் மிதமான சூட்டில்… ஒரு நாள் கண்டேன் உடைந்த முட்டை அதனருகில் ஓர் பாம்பு இன்னும் விளங்கவில்லை ! புறா முட்டையிலிருந்து எப்படி வந்தது பாம்பு ! *** நிறைந்த மூட்டையோடு வந்தான் அவன் உள்ளே என்ன என்றேன் ஒன்றுமில்லை என்றான் மூட்டையை அவிழ்த்தேன் ஆம் ஒன்றுமே இல்லை. Continue reading
-
கருவிலே ஓர் போதிசத்துவர்
காலை எத்தி எத்தி வெளியே வர துடிக்கிறது குழந்தை இருள் கவிந்த கர்பப் பையினிலிருந்து பேரொளி நோக்கி பல கனவுகளுடன் தலையை வெளியே நீட்டியது, அதன் கண் கூசிற்று . மருத்துவன் ஓர் தாதியை உரச, இன்னொரு தாதி அதை வன்மமாய் பார்க்க உதவியாளன் செவிலியர்களை கண்களாலே காமுற குழந்தையின் உளம் கூசிற்று . பேரொளியா இது ! பேரிருள் என் தாயின்க ருவறையே சாந்தி சூனியம் சுவர்க்கம். இழுத்துக் கொண்டது தலையை மீண்டும் உள்ளே. வெளிவர Continue reading
-
நானும் ஒரு உதவி இயக்குனர்
சினிமாவிற்கும் படைப்பிலக்கனமுண்டு, அதை உலகிற்கு உணர்த்திட வணிக சினிமாவில் இலக்கியத்தை புகுத்திட பொதுவாழ்வினுள் பின்நவீனத்துவம் பேசிட உலகமே திரும்பி பார்த்திடும் திரைப்படத்தை இயக்கிட-முடிவு செய்து சென்னை வந்திட்ட பலரில் நானும் ஒருவன். என்னை உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்னை போல் பலருண்டு அவர்களை தெரிந்து கொள்ள நீங்கள் விரும்பியதுமில்லை வலதுகையில் உலக இலக்கியம்-இடதுகையில் சிகரெட்-என விட்டத்தை பார்த்தவாறே தொடங்கியது என் சராசரி வாழ்க்கை.. காசின்றி சினிமா பார்க்க உங்களால் முடியாது, ஆனால் என்னால் முடிந்தது ! என்னுள் Continue reading
-
யார் அவன்
தப்பு தப்பாக ஆங்கிலம் பேசுபவன் தப்பிப் போயும் தமிழ் பேசாதவன் தாரம் வந்தால் தாயை மறக்கும் மகன்போல ஆங்கில வேசியின் மடியில் சாய்ந்து தமிழ் தாயை மறப்பவன் தமிழ் பேச மறுப்பவன்… ஈழத்திலே தலை விழுந்தாலும் தெருக்கோடியிலே கொலை நிகழ்ந்தாலும் முதுகெலும்பற்ற ஜடமாய் ஊர்ந்து செல்வான் முடமாய்… எந்திரத்தை மனிதனாக்க ஆர்டிஃபிசியல் இன்டெலிஜென்ஸ் கண்டவன் தான் எந்திரமாகி போனதை ஒப்புகொள்ள மறுப்பவன்… பொறியில் மாட்டிக்கொண்ட எலி போல தவிப்பதால் தான் அவன் பொறியாளன் Continue reading
-
நான் ஒரு ஜடம்
என் தனிமை என்னை கொன்று விட பார்க்கிறது நான் என் தனிமையை கொன்று விட பார்க்கிறேன் ஆதி அந்தமற்ற ஒருவனாய் நான் பயணித்துக் கொண்டிருக்கிறேன் சுட்டெரிக்கும் வெயில் குளிரடிக்கும் காற்று முத்துகளாய் பொழியும் மேகம்-எதுவும் என்னை கவர்ந்துவிடவுமில்லை பறந்து விரிந்த இந்த வானம் காற்றயைபோல் பயணிக்கும் வாகனங்கள் என எதுவும் என்னை அசைத்துவிடவில்லை ஆம் நான் ஒரு ஜடம் உலகம் என்னை அப்படி தான் அழைக்கும் என் கண்முன்னே எது நிகழ்ந்தாலும் நான் பார்த்துக்கொண்டே இருப்பேன் பார்த்துகொண்டு Continue reading
-
உதிக்க மறுத்திடுமோ சூரியன்!
அதிகாலை பொழுது கிழக்கில் இன்னும் சூரியன் உதிக்கவில்லை என் வாழ்விலோ இதுவரை உதித்ததில்லை… நான் மட்டும் தனியாக சாலையில் எங்கோ பயணித்துக்கொண்டிருந்தேன்-இல்லை சாலை எங்கேயோ பயணித்துக்கொண்டிருந்தது தனிமைப்பட்ட என்னுடன்… நான் பார்த்த காட்சிகள்-பார்த்திராத கோணத்தில் பார்க்க மறுத்தக் காட்சிகள் பார்க்க வேண்டிய தருணத்தில் அன்று கண்டேன், இயற்கையின் சரீரத்தையும் சமுகத்தின் குரூரத்தையும்… சாலையின் வலப்புறம் புதருக்கடியில்… புலன்களை அடகுவைத்த பெண்ணொருத்தி புலன்களை அடக்கிவைத்த சாமியாருடன்… சாலையின் இடப்புறம் இரண்டு நாய்கள் இருபுறங்களிலும் பெரிய வித்தியாசங்களை காணவில்லை நான் Continue reading