அரவிந்த் சச்சிதானந்தம்
-
Notes on the Cinematographer- ராபர்ட் ப்ரெஸ்ஸான்.
“ஐடியாக்கள் அதுவாகவே தான் உருவாகும். எப்படி என்றெல்லாம் யாராலும் சொல்ல முடியாது. ஒரு ஐடியா உருவாகும் போது அதை வைத்து என்ன செய்யப் போகிறோம் என்றும் நமக்கு தெரியாது.இந்த படத்தை பொறுத்தவரை எனக்கு ஒரு கழுதையின் தலை தான் ஐடியாவாக பிறந்தது. கழுதையின் தலையில் இருக்கும் ஒருவகையான அசைவற்ற அழகு என்னை எப்போதுமே ஆச்சர்யப்படுத்தும். கழுதையின் கண்களை விட ரசிக்கத்தக்க ஒரு விஷயம் உலகில் உண்டா!” – Au Hasard Balthazar படம் பற்றி ராபர்ட் ப்ரெஸ்ஸான்.… Continue reading
-
கணையாழி -பேராசிரியர் செண்பகம் ராமசுவாமி நினைவு குறுநாவல் போட்டி
கணையாழி -பேராசிரியர் செண்பகம் ராமசுவாமி நினைவு குறுநாவல் போட்டியில் என்னுடைய ‘கடைசி நாள்’ என்கிற கதை மூன்றாம் பரிசு பெற்றுள்ளது என்பதை பகிர்வதில் மகிழ்கிறேன். நன்றியும் அன்பும் அரவிந்த் சச்சிதானந்தம் Continue reading
-
ராபர்ட் மெக்கீயின் ‘கதை’ – 6
6 “The spirit of Creation is the spirit of Contradiction- the breakthrough of appearances toward an unknown reality”- John Cocteau கான்ப்ளிக்ட் (Conflict) கடந்த அத்தியாயத்தில் கதாநாயகன் பற்றி பேசும் போது எந்த திரைக்கதையாக இருந்தாலும் கதாநாயகனோடு பார்வையாளர்களுக்கு தொடர்பு ஏற்பட வேண்டும் என்றோம். ஒரு திரைக்கதையாசிரியன் எப்படி இதை எல்லாம் திட்டமிட்டு எழுதுவது? இதற்கு ராபர்ட் மெக்கீ என்ன சொல்கிறார்? ஒரு கதாப்பாத்திரத்தை அதன் சூழலில் வைத்து சிந்திக்க… Continue reading
-
ஏப்ரல் இரவில், ராக் மியூசிக் இசையில், அநிருத்தன் செய்த மூன்று கொலைகள்- சிறுகதை
Originally posted on Aravindh Sachidanandam: “As soon as you’re born they make you feel small By giving you no time instead of it all”- John Lennon தான் மூன்றுபேரை கொடூரமாக கொன்றுவிட்டதாக, இருபத்தி எட்டு வயது, அநிருத்தன் அண்ணா நகர் மேற்கு V5 காவல் நிலையத்தில் சரணடைந்த போது மணி இரவு 9.10. ஹெட் கான்ஸ்டபிள் கன்னியப்பன் ட்யூட்டி முடிந்து வீட்டுக்கு கிளம்பிக் கொண்டிருந்தார். திருமங்கலம் சிக்னலில்… Continue reading
-
ராபர்ட் மெக்கீயின்‘கதை’ – 5
5 “The scariest moment is always just before you start. After that, things can only get better” – Stephen King கதாநாயகன் ஒரு திரைக்கதையில் மூல கதாப்பாத்திரத்தை ப்ரோட்டாகனிஸ்ட் என்கிறோம். ஹீரோ என்கிறோம். கதாநாயகன் என்கிறோம். பொதுவான கதாப்பாத்திரங்களிலிருந்து ஒரு கதாநாயகன் எங்ஙனம் மாறுபடுகிறான்! கதாநாயகனெனில், அவனுக்கென்று ஒரு தெளிவான நோக்கம் அல்லது இலக்கு இருக்க வேண்டும். அதை அடைய வேண்டும் என்கிற அகத் தூண்டல் இருக்க வேண்டும். அந்த… Continue reading
-
ஒரு வைரம் ஒரு காரிகை மற்றும் சில கயவர்கள்-நாவல்
வணக்கம். என்னுடைய அடுத்த நாவல் ‘ஒரு வைரம் ஒரு காரிகை மற்றும் சில கயவர்கள்’ வெளியாகி இருக்கிறது என்பதை பகிர்வதில் மகிழ்கிறேன். நன்றி கதைச்சுருக்கம் விட்டிருந்தால் மணி காதல் தோல்வியில் தாடி வளர்த்து, தன் முன்னால் காதலி தீபிகாவை நினைத்து சோகப்பாடல் பாடி வாழ்கையை கழித்திருப்பான். ஆனால் விதி யாரை விட்டது! அவன் நண்பர்கள் ‘தோழர்’ பழமும், குரங்கு கார்த்தியும் தீபிகாவை கடத்தும்படி துர்போதனை செய்கிறார்கள்.***தீபிகாவின் வீட்டில் இருக்கும் ராசியான வைரத்தை திருடிவந்து பூஜை செய்தால் பார்… Continue reading
-
ராபர்ட் மெக்கீயின்‘கதை’ -3
3 க்ளீச்சே (Cliche) Creativity means creative choices of inclusion and exclusion- Robert Mckee ஒரு சுவாரஸ்யமற்ற திரைக்கதையை எழுதிவிட வேண்டும் என்ற கொள்கையோடு யாரும் திரைக்கதையை எழுதத் தொடங்கமாட்டார்கள். மிகச் சாதரணமான, எளிமையானதொரு கதையாக இருந்தாலும் எல்லோரும் விரும்பும் விதத்தில் திரைக்கதையை அமைத்துவிட வேண்டும் என்பதே ஒவ்வொரு திரைக்கதையாசிரியரின் எண்ணமாக இருக்கும். அப்படி இருந்தும் ஏன் பல படங்கள் சுவாரஸ்யமற்று தோன்றுகின்றன! ‘சுவாரஸ்யம்’ என்றதுமே பெரும் மாயங்களை காட்சிகளில் நிகழ்த்திவிட வேண்டும் என்று… Continue reading
-
இலவச கிண்டில் நூல்கள்
இன்று என் தந்தையின் பிறந்தநாள்.அதை முன்னிட்டு, அடுத்த மூன்று நாட்களுக்கு பின்வரும் என்னுடைய பத்து நூல்களை கிண்டிலில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நாவல்: தட்பம் தவிர் குறுநாவல்:இரண்டு கலர் கோடுகள்நனவிலி சித்திரங்கள் நெடுங்கதை: பிறழ்ந்த இரவுகள்கொரொனா நாட்கள் திரைக்கதை நூல்கள்:கொஞ்சம் திரைக்கதைஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி சிறுகதைத் தொகுப்பு:நகைச்சுவை கதைகள்அனிருத்தன் செய்த மூன்று கொலைகள் சிறார் கதை: சித்திரமலை ரகசியம் நன்றிஅரவிந்த் சச்சிதானந்தம் Click here to download Continue reading
-
பத்தாண்டு பயணம்
இன்று இந்த இணையதளம் தன்னுடைய பத்தாம் ஆண்டை நிறைவு செய்கிறது என்பதை பகிர்வதில் மகிழ்கிறேன். இது என் வாழ்வின் மிக முக்கியமான பத்தாண்டுகள். தொடர்ந்து சிறுகதைகள் எழுத வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்த தளம் தொடங்கப்பட்டது. ஆனாலும் மனம் விரும்பும் எல்லாவற்றையும் எழுதிடும் உந்துதலையும் வாய்ப்பையும் இந்த தளம் தான் கொடுத்து வருகிறது. ஆதரவு அளித்துவரும் அனைவருக்கும் நன்றி. இன்னும் எழுதுவோம். நன்றி அரவிந்த் சச்சிதானந்தம் Continue reading