tamil thriller stories
-
ஏரியை ஒட்டியிருந்த வீடு- திகில் கதை
எங்கள் வீட்டின் பின்னாடி தான் ஹெப்சிபா அத்தையின் வீடிருந்தது. அவர்கள் வீட்டின் கொல்லைப்புறத்தில் இருந்து பார்த்தால் பரந்து விரிந்த சிட்லபாக்கம் ஏரி தெரியும். சாந்தமும் அழகும் நிறைந்த விஷயங்கள் எல்லாமும் பயமுறுத்தக் கூடிய தன்மையையும் தனக்குள் கொண்டிருப்பதை போல், அந்த ஏரி மௌனமானதொரு பயத்தை பார்ப்பவர்களுக்கு கொடுத்து கொண்டிருந்தது என்றே நினைக்கிறேன். அதனால்தான் என்னவோ எவ்வளவோ பேர் வந்து பார்த்தும் யாரும் அந்த வீட்டிற்கு குடிவரவில்லை. ஹெப்சிபா அத்தை தன் மகள் ஜெனிபர் அக்காவோடு நாகர்கோயிலில் தங்கி Continue reading
-
அநிருத்தன் செய்த மூன்று கொலைகள்- கிண்டில் புத்தகம்
இது என்னுடைய மூன்று திரில்லர் கதைகளின் தொகுப்பு. கிண்டிலில் வெளியாகி இருக்கிறது. புத்தகத்தை வாங்க: இங்கே சொடுக்கவும் நன்றி அரவிந்த் சச்சிதானந்தம் Continue reading
-
ஏப்ரல் இரவில், ராக் மியூசிக் இசையில், அநிருத்தன் செய்த மூன்று கொலைகள்- சிறுகதை
“As soon as you’re born they make you feel small By giving you no time instead of it all”- John Lennon தான் மூன்றுபேரை கொடூரமாக கொன்றுவிட்டதாக, இருபத்தி எட்டு வயது, அநிருத்தன் அண்ணா நகர் மேற்கு V5 காவல் நிலையத்தில் சரணடைந்த போது மணி இரவு 9.10. ஹெட் கான்ஸ்டபிள் கன்னியப்பன் ட்யூட்டி முடிந்து வீட்டுக்கு கிளம்பிக் கொண்டிருந்தார். திருமங்கலம் சிக்னலில் நடந்த திடீர் மாணவப் போராட்டத்தை கலைத்து Continue reading
-
அடாஜன் சாலை- த்ரில்லர் கதை
மழை. அடை மழை. ஹசிரா சாலை வழக்கம் போல் ஆள் அரவமற்று கிடந்தது. அங்கிருந்து சூரத் செல்லவேண்டுமெனில் அடாஜன் சாலை வழியாகவோ அல்லது டுமாஸ் சாலை வழியாகவோ செல்ல வேண்டும். டுமாஸ் வழியாக செல்வது கால விரையம் தான். ஆனாலும் பாதுகாப்பான சாலை அது. அடாஜன் பாதுகாப்பற்ற சாலையா என்று உறுதியாக தெரியாது. ஆனால் அந்த சாலையை பற்றி நான் கேள்விப்பட்ட கதைகள் ஏராளம் என்பதால் அந்த சாலையில் பயணிப்பதை தவிர்த்து வந்தேன். அதற்கு என் நண்பர் Continue reading
-
வீஜா போர்ட்(Ouija board)- ஹாரர் கதை
கதவுகள் எல்லாம் அடைக்கப்பட்டிருந்தன, ஜன்னல்களும். அவர்கள் முடிவு செய்திருந்தனர், இன்று ஆவியுடன் உரையாடியே தீர வேண்டுமென்று. வீஜா போர்ட் (Ouija Board) பற்றி முதலில் படித்துவிட்டு சொன்னவன் மனிஷ் தான். அவனுக்கு எல்லாவற்றிலும் விளையாட்டு என்பதால் அவன் சொன்னதை முதலில் யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. “எல்லாம் ஹம்பக். இவரு கூப்டதும் ஆவிங்கலாம் வந்து க்யூல நிக்குமாம்” சொல்லிவிட்டு சப்தமாகச் சிரித்தாள் ஜாஸ்மின். “உங்களுக்குலாம் பயமா இருக்குனு சொல்லிட்டு போ. டோன்ட் ஆக்ட் ஸ்மார்ட்” மனிஷ் இப்படி Continue reading