aravindhskumar.com
-
பன்னிரண்டு ஆண்டு பயணம்
Pic courtesy: Sven Vee இன்று இந்த இணையதளம் தன்னுடைய பன்னிரண்டாம் ஆண்டை நிறைவு செய்கிறது என்பதை பகிர்வதில் மகிழ்கிறேன். என்னுடைய முதல் பிளாக்கை 2007-யில் கல்லூரி இரண்டாமாண்டு படிக்கும்போது தொடங்கினேன். விளையாட்டாக ஏதேதோ எழுத ஆரம்பித்து, பின் சிறுகதை எழுத இயலும் என்ற நம்பிக்கை வந்தபோது இந்த தளம் தொடங்கப்பட்டது. 2011-யில் இதே நாளில் இந்த தளத்திற்காகவே ஒரு சிறுகதையை எழுதி பதிவிட்ட போது இருந்த அதே மகிழ்சசி இத்தனை ஆண்டுகளில் ஒவ்வொரு பதிவை பதிவேற்றும்போதும் Continue reading
-
திரைக்கதை எனும் நெடும்பயணம் -3
3 All drama is conflict. Without conflict, there is no action. Without action, there is no character. Without character, there is no story. And without story, there is no screenplay.- Syd Field முரண் ஒரு திரைக்கதை ‘கதை’யிலிருந்து (Concept) உருவாகலாம் என்றோம். அல்லது கதாபாத்திரத்திலிருந்து (Character) உருவாகலாம் என்றோம். ஆனால் உண்மையில் கதை, கதாபாத்திரம் இரண்டுமே ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்தவை. கதையின்றி கதாபாத்திரம் இல்லை. கதாபாத்திரமின்றி Continue reading
-
திரைக்கதை எனும் நெடும்பயணம் -2
2 The characters in my novels are my own unrealised possibilities. That is why I am equally fond of them all and equally horrified by them. Each one has crossed a border that I myself have circumvented. ― Milan Kundera கதாபாத்திரம் ஒரு கதாபாத்திரத்தை ஆதாரமாக கொண்டு ஒரு கதை எழுத முடிவு செய்கிறோம். முதலில் என்னென்ன சிந்திப்போம்! எளிய உதாரணமாக, Continue reading
-
Everything Everywhere All at Once- கொஞ்சம் திரைக்கதை

எவிலின் வாங் ஒரு சீன பெண்மணி. அவளும் அவர் கணவன் வேமாண்டும் தங்கள் குடும்பத்தின் எதிர்ப்பை மீறி காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். அமெரிக்காவில் ஒரு லாண்ட்ரி நிறுவனம் நடத்தி வருகிறார்கள். பல ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்ததற்கு பிறகு திருமண வாழ்க்கை கசக்கத் தொடங்குகிறது. வியாபாரத்தில் வரி ஏய்ப்பு செய்ததாக வருமான வரித்துறையிடமிருந்து நோட்டீஸ் வருகிறது. தகுந்த ஆவணங்களை சமர்பிக்காவிட்டால் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் சூழல். மறுபுறம் பல ஆண்டுகள் கழித்து எவிலின் வாங்கின் தந்தை அவளை Continue reading
-
திரைக்கதை எனும் நெடும்பயணம் – 1

1 கதை “We are, as a species, addicted to story. Even when the body goes to sleep, the mind stays up all night, telling itself stories.” Jonathan Gottschall ‘கதை’ என்ற சொல் சிறுவயதிலிருந்தே நமக்கு மிகமிக பரிட்சயமானதாக இருக்கிறது. கதை என்றால் என்ன என்கிற தத்துவங்கள் எல்லாம் புத்திக்கு எட்டுவதற்கு முன்பே, கதை கேட்பது நம் மனதிற்கு பிடித்த ஒன்றாக இருந்திருக்கிறது. ஒரு ஊரில் ஒரு Continue reading
-
திரைக்கதை எனும் நெடும்பயணம் – புதியதொடர்
FADE IN: நாம் ஒரு படம் பார்க்கிறோம். முதல் பகுதி சரியாக இல்லை, இரண்டாவது பகுதி சுவாரஸ்யமாக இருந்தது என்கிறோம். இந்த காட்சி தேவை இல்லாத ஒன்று என்கிறோம். முதல் பாதியில் இருந்த விறுவிறுப்பு இரண்டாவது பாதியில் இல்லை என்கிறோம். அந்த கதாபாத்திரம் செய்யும் சாகசம் நம்பும் படியாக இல்லை என்கிறோம். இன்னொரு கதாப்பாத்திரம் ஆயுதம் தாங்கிய நூறு பேரை ஒற்றை ஆளாக எதிர்த்து அடித்தாலும் ஏற்றுக் கொள்கிறோம். இவன் தான் கொலைகாரன் நான் முன்னரே யூகித்தேன் Continue reading
-
குறுநாவலுக்காக ஓர் பரிசு- புகைப்படங்கள்
கடந்த வாரம் (14.03.2023) மதுரையில் நடந்த திருமதி. செண்பகம் ராமசுவாமி அவர்களது இருபத்தைந்தாவது ஆண்டு நினைவு நாளில், கணையாழி குறுநாவல் போட்டியில் – மூன்றாம் பரிசு பெற்ற “கடைசி நாள்’ என்கிற குறுநாவலுக்காக எனக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது என்பதை பகிர்வதில் மகிழ்கிறேன். நன்றி மு.ராமசுவாமி மற்றும் கணையாழி Continue reading
-
மார்ட்டின் ஸ்கோர்செஸி ஓர் உரையாடல்
மார்ட்டின் ஸ்கோர்செஸி ஓர் உரையாடல்-ரிச்சர்ட் சிக்கேல் ரிச்சர்ட் சிக்கேல் மார்ட்டின் ஸ்கோர்செஸியுடன் உரையாடி எழுதிய புத்தகத்தின் ஒரு சிறு பகுதி. தமிழாக்கம்: அரவிந்த் சச்சிதானந்தம் *** படத்தொகுப்பு ரிச்சர்ட் சிக்கேல்: உங்களின் ஆரம்பகாலங்களில் படத்தொகுப்பிலும் உங்களுடைய பங்களிப்பு இருந்தது என்று அறிவேன். ஆனால் உங்களுடைய பல படங்களுக்கு நீங்களே படத்தொகுப்பு செய்திருக்கிறீர்கள் என்பது. நாம் பேசத் தொடங்கும் வரை எனக்கு தெரியாது. எப்படி படத்தொகுப்பை கற்றுக் கொண்டீர்கள்? படத்தொகுப்பு செய்து அதை பழகிக் கொண்டீர்களா? மார்ட்டின் ஸ்கோர்செஸி: Continue reading