aravindhskumar.com
-
பனிமனிதன் – ஜெயமோகன்
கடந்த ஆண்டு வாசித்ததில் மிக நல்லதொரு அனுபவத்தை தந்த புத்தகம் இது. பல ஆண்டுகளுக்கு முன்பு கல்லூரி காலத்தில் தி நகரில் ஒரு கடையில் பனிமனிதனின் அட்டைப் படம் ஈர்த்தது. பெரிய பனி குரங்கைப் போன்ற ஒரு உருவத்தை பார்த்ததுமே மனதினுள்ளிருந்த குழந்தை வெளியே வந்திருக்க வேண்டும். வாங்கி வந்த அன்றே முழுவதுமாக படித்து முடித்த நியாபகம். பின்னர் குஜராத்தில் ஒரு தமிழ் நண்பரிடம் அந்த புத்த்தகத்தின் சாராம்சத்தை சொன்னேன். குறிப்பாக அதில் வண்டுகள் எல்லாம் கூட்டு Continue reading
-
பதினைந்தாவது ஆண்டில்…

இன்றோடு என்னுடைய இணையதளம் தொடங்கி பதினான்கு ஆண்டுகள் நிறைவடைகிறது என்பதை பகிர்வதில் மகிழ்கிறேன். என்னுடைய பெரும்பான்மையான படைப்புகள் இந்த தளத்தில் நேரடியாக எழுதப்பட்டவையே. அந்த வகையில் இந்த தளம் தான் எனக்கான சிற்றிதழ், இணைய இதழ், மாத இதழ் எல்லாமே. தொடர்ந்து எழுத வேண்டும் என்கிற உத்வேகத்தில் 2011 இல் தொடங்கப்பட்ட இந்த தளம், நோக்கத்திலிருந்து பிறழாமல் பயணிப்பதற்கும் பல புதிய முயற்சிகளை மேற்கொள்வதற்கும் உறுதுணையாக இருந்திருக்கிறது. பல வகையான கதைகள், மொழிபெயர்ப்புகள், திரைக்கதை கட்டுரைகள், புத்தக Continue reading
-
தட்பம் தவிர்- பதினொரு ஆண்டுகள்
ஓஷோ சொல்லியிருப்பார், ‘The real fight is not between good and evil but between the good and the greater good’. தட்பம் தவிர் நாவலுக்கான ஐடியா இதுதான். இரண்டு நல்லவர்கள். ஒருவன் போலீஸ்காரன் இன்னொருவன் சீரியல் கில்லர்… நான் David fincher யின் ரசிகன். Zodiac-யில் நாயகனால் கொலைகாரனை இறுதி வரை பிடிக்கவே முடியாது. அது போலவே இதன் முடிவும் இருக்க வேண்டும் என்பது முதல் அத்தியாயத்திலேயே முடிவு செய்துவிட்ட ஒன்று. Continue reading
-
மேடம்- சிறுகதை
நான் மேடமை முதல் முதலில் சந்தித்தது சிசிடிவி திரையில் தான். சந்தித்தது என்று சொல்வதை விட பார்த்தது அல்லது எனக்கு மேடமின் அறிமுகம் கிட்டியது என்று சொல்வது தான் பொருத்தமாக இருக்கும். அது ஒரு வியாழக்கிழமை. ஒவ்வொரு வியாழக்கிழமையும் குறைந்தது ஒரு வாகனக் கடனாவது கொடுக்க வேண்டும் என்று எங்களுடைய பிராந்திய மேலாளர் உத்தரவிட்டிருந்தார். அனுதினமும் ஏதாவது ஒரு இலக்கு இருந்தது. திங்கட்கிழமை என்றால் வாராக்கடனை வசூலிக்க வேண்டும். செவ்வாய் கிழமை புதிய காப்பீடுகளை இணைக்க வேண்டும். Continue reading
-
லக்கி பாஸ்கர் – கொஞ்சம் திரைக்கதை
குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக தவறான வழியில் பணம் ஈட்ட நினைக்கும் ஒரு சாதாரணன், பேராசையால் ஆட்கொள்ளப்பட்டு ஒருகட்டத்தில் பணம் ஈட்டுவதை மட்டுமே தன் நோக்கமாக மாற்றிக் கொள்கிறான். இது பிரேக்கிங் பேட்டின் ஒன்லைன். லக்கி பாஸ்கர் படத்தின் ஒன் லைன்னும் இதுவே. பிரேக்கிங் பேட்டின் வால்ட்டர் வைட், தன் திறமைக்கான அங்கீகாரம் தனக்கு கிட்டவில்லை என்கிற ஆதங்ககத்திலேயே வாழ்பவன். ஒரு தருணத்தில் அந்த ஆதங்கம் கோபமாக மாற, தன் திறமையை தவறான வழியில் செலுத்தி பணம் Continue reading
-
பதின்மூன்று ஆண்டு பயணம்

இன்று இந்த இணையதளம் தன்னுடைய பதின்மூன்றாம் ஆண்டை நிறைவு செய்கிறது என்பதை பகிர்வதில் மகிழ்கிறேன். Consistency தான் ஒரு படைப்பாளிக்கு இருக்க வேண்டிய முக்கிய quality என்று நினைக்கிறேன். அந்த வகையில் தொடர்ந்து பதிமூன்று ஆண்டுகள் இந்த தளத்தில் இயங்க முடிந்திருக்கிறது, எழுத முடிந்திருக்கிறது என்பதில் கூடுதல் மகிழ்ச்சி. எழுத தொடங்கிய ஆரம்ப காலகட்டங்களில் முக்கியமாகப்பட்ட பல விஷயங்கள் பின்னாளில் முக்கியமற்று போய்விட்டன. பிடித்ததை தொடர்ந்து எழுத முடிகிறது என்பதே இப்பொதெல்லாம் முக்கியமான விஷயமாக இருக்கிறது. சொல்வதற்கு Continue reading
-
சில புத்தகங்கள் சில அனுபவங்கள்
கடந்த ஆண்டு (2023), வாசிப்பிற்கான ஆண்டாக இருந்திருக்கிறது. புனைவுகள், அபுனைவுகள் மற்றும் ஆலோசனை சொல்வதற்காக வாசித்த திரைக்கதைகள் என நிறைய வாசிக்க முடிந்தது. குறிப்பாக பல சிறுகதைத் (நெடுங்கதை) தொகுப்புகளை தொடர்ந்து வாசித்தது தனியொரு அனுபவம். சில தொகுப்புகளில் சில கதைகள் பெரிதும் பாதித்தன. சல்மாவின் ‘விளிம்பு’ (தொகுப்பு: சாபம்), ஜா. தீபாவின் ‘குருபீடம்’ (தொகுப்பு: நீலம் பூக்கும் திருமடம்) , அழகியபெரியவனின் ‘அம்மா உழைப்பதை நிறுத்திக் கொண்டார்’ ‘ தன்னுள்ளே சஞ்சரிப்பவள்’ (தொகுப்பு:’அம்மா உழைப்பதை நிறுத்திக் Continue reading
