-
அவன் பன்றியாக மாறிக்கொண்டிருக்கிறான்-சிறுகதை
“பன்றிகளுடன் சண்டைப் போட்டால் பன்றியாக மாறிவிடுவாய்” இப்படியாக பாபா சொன்னதாக ஆசிஷ் மிஸ்ரா என்னிடம் ஒருமுறை சொன்னபோது நான் அதைப் பொருட்படுத்தவில்லை. பாபா பொருட்படுத்தக் கூடிய ஆசாமியாக எனக்கு படவில்லை. எப்போது பார்த்தாலும், காப்கா என்றோ காம்யூ என்றோ பேசும் அவனை பொருட்படுத்தாமல் இருப்பதே நல்லது. நான், பாபா, மிஸ்ரா மூவரும் ஒரே வங்கியில் ஐந்து வருடங்களுக்கு முன்பு வேலைக்குச் சேர்ந்தோம். அங்குதான் மூவரும் முதன்முதலில் சந்தித்துக் கொண்டோம். இரண்டு வருடங்களிலேயே பாபா வேலையைவிட்டு முழு நேர… Continue reading
-
லாலாகதைகள் 2- படைப்பின் உச்சம்
“ஆஆஆஆ-வோட ‘தாபு’ நாவல படிங்க. அவரோட படைப்பின் உச்சம்” பிரபல எழுத்தாளர் ஆஆஆஆவின் தீவிர வாசகர்/பக்தர் சொன்னார். நான் அந்த நாவலை படித்திருக்கிறேன், ஆனால் அவ்வளவாக பிடிக்கவில்லை என்பதை தயங்கி தயங்கி சொன்னேன். “புடிக்கலயா? புரிலனு சொல்லுங்க. அதெல்லாம் ஆயிர பக்க காவியம். ஒரு வாசிப்புல புரிஞ்சிறாது. திரும்ப வாசிங்க” பதட்டமாக பேசினார். நான் சரி என்று தலையாட்டிவிட்டு, “உங்களுக்கு புரிஞ்சிதா?” என்றேன். அக்கம்பக்கம் பார்த்துவிட்டு “சபரிமலைக்கு மாலை போட்ருக்கேன். பொய் சொல்லக்கூடாது” என்று சொன்னார். நான்… Continue reading
-
லாலாகதைகள் 1- நான்கு பிரதிகள் விற்ற புத்தகம்
“இது தமிழின் ஆகச்சிறந்த நாவல்..” பிரபல்ஆஆஆஆ எழுத்தாளர் சொல்லிக்கொண்டிடுருக்கும்போதே அவர் காதை கடித்தார் அந்த புத்தகத்தை எழுதிய பிரபல்அ எழுத்தாளர், “ஐயா அது சிறுகதைத் தொகுப்பு நாவல் இல்ல” சுதாரித்துக் கொண்ட ஆஆஆஆ “நாவல் அளவிற்கு ஆழமான சிறுகதைகளை கொண்ட தொகுப்பு” என்று சொல்லி முடித்தார். ‘ஆஆஆஆ’வின் தீவிர பக்தர்கள் முன்னூறு பேரும் முந்நூற்றியொரு புத்தகங்களை வாங்கி தங்கள் வீட்டில் அடுக்கிக் கொண்டனர். சில மாதம் கழித்து அதில் ஒரு பக்தர், “ஒரே நாள்ல 300 பிரதி… Continue reading
-
வரிசையில் நின்ற கடவுள்- சிறுகதை
வழக்கமாக நடை சாத்துவதற்கு முன்பு செய்யப்படும் கைங்கர்யம் எதுவும் செய்யப்படவில்லை. நங்கையர் குறை தீர்க்கும் நல்லாண்டானுக்கு சந்தேகம், ‘தாலாட்டு ஏன் இன்னும் பாடப்படவில்லை?’. அசதியின் காரணமாக அதை பொருட்படுத்தாமல் உறங்கிப் போனார். வைகுண்டராஜன் தன் துயில் கலையும் போது சுப்ரபாத ஒலி கேட்கும் என்று எதிர்பார்த்தார். அதுவும் இல்லை. குழப்பமடைந்தவர், வைகுண்டத்திலிருந்து நேரடியாக மலை மீது இறங்கினார். கோவிலே வெறிச்சோடிக் கிடந்தது. வாசலில் பல்லக்கு கேட்பாரற்று கிடந்தது. வெகுதொலைவில், மலை அடிவாரத்தில் ஓடிக் கொண்டிருந்தவர்கள் புள்ளியாக தெரிந்தார்கள்.… Continue reading
-
கொஞ்சம் திரைக்கதை- e-book
நல்ல திரைக்கதைகளை கொண்ட சில அமெரிக்கத் தொலைக்காட்சி தொடர்களின் திரைக்கதை சிறப்பசங்களை பற்றி பேசும் இந்த புத்தகம், வெவ்வேறு காலகட்டங்களில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு. click for kindle version Continue reading
-
ஓரிரு
என்னிடம் காசில்லை இதுவா கவிதை என்ன செய்ய செத்துமடி எவ்வளவு செலவாகும் இதுதான் கவிதை விருது வேண்டும் எவ்வளவு கொடுப்பாய் *** புத்தகம் பதிப்பிக்கனும் எழுத்தாளர் ரா.கு. படிச்சிருக்கியா? இதுவரை இல்ல அவரையே இன்னும் படிக்கலையா? நீயெல்லாம் எப்படி எழுதுவ? கையில தான். *** தம்பி என்ன வேலை பண்ணுது? கதை எழுதுறேனுங்க அது சரி, பொழப்புக்கு என்ன பண்றீங்க? கதை எழுதுறதுதாங்க என் வேலை பொழப்பு எல்லாம் மாசம் கைக்கு என்ன வரும் வலி வரும்.… Continue reading
-
எதையாவது எழுதலாம்
எதையாவது எழுதலாம் எழுதவே பிறந்தேன் எனலாம் யாரவது பதிப்பாளரை நட்பாக்கிக் கொள்ளலாம் புத்தகம் வெளியிடலாம் ராயல்டி தரமாட்டார் சண்டை போடலாம் விருது வாங்கிக் கொடுப்பார் வாயை மூடிக்கொள்ளலாம் புரட்சி என்று நினைத்து எழுதலாம் பிரச்சனையா புனைப்பெயர் வைத்துக் கொள்ளலாம் எதையாவது எழுதிக் கொண்டே இருக்கலாம் யாருக்கும் புரியாது பரவாயில்லை பின்நவீனத்துவம் என்று சொல்லிகொள்ளலாம் Continue reading
-
மேக்கிங் மூவீஸ்- சிட்னி லூமெட்- சினிமா புத்தகங்கள்-2
சினிமா பேசும் புத்தகங்களில் இது மிக முக்கியமான புத்தகம். கதை எழுதுவது தொடங்கி படத்தை திரையிடுவது வரை எல்லாவற்றைப் பற்றியும் எல்லா துறைகளைப் பற்றியும் இந்த புத்தகத்தில் விவரிக்கிறார் லூமெட். ஒரு கதை எதைப் பற்றியது? திரைக்கதையாசிரியர், இயக்குனர் தொடங்கி படத்தொகுப்பாளர் வரை எல்லோருமே தங்களுக்குள் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி இதுதான் என்கிறார் லூமெட். இந்த கேள்வி தான் புத்தகம் முழுக்க வருகிறது. மேலும் படத்தின் முடிவு பார்வையாளர்களுக்கு எந்த உணர்வை ஏற்படுத்த போகிறது என்ற கேள்வியையும்… Continue reading